பல காலங்களாக முகநூலில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அதாவது பிளாட்பற்றி அதன் தலைமை விட்ட தவறுகள் முகாம்களில் நடந்த தவறுகள் பற்றி பிளாட் இயக்கத்தில் இருந்த நாங்கள் பலர் பல உண்மைகளை எழுதி வருகிறோம்.ஒரு மிகப்பெரிய இயக்கம் எப்படி எப்படி சிதைந்து போன தன் காரணங்கள் பலர் எழுதுகிறார்கள் இன்னும் பல பேர் எழுத இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் இயக்கத்தை பற்றி உண்மைகளை எழுதுவதால் நாங்கள் துரோகிகள் அல்ல. இப்படியான உண்மைகளை எழுதும் நாங்கள் உண்மையான சிங்கள அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை நடத்த உமாமகேஸ்வரன் தலைமையிலான பிளாட் இயக்கத்தை தெரிவு செய்து வந்தோம். ஆனால்நாம் வந்த நோக்கத்தை சிதைத்த எமது தலைவர்கள் விட்ட பிழையை வெளிக்கொண்டுவரும் மாபெரும் பொறுப்பு எமக்கு.உண்டு.
தளம் என்று கூறப்படும்இலங்கையின் வடகிழக்கு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் பயிற்சிக்காக பின் தளம் என்றும் கூறப்படும் இந்தியாவுக்கு வரும் போது நல்ல சிந்தனைத் தெளிவோடு படித்த இளைஞர்கள் தான் வந்தார்கள்.பின் தளத்தில் கடுமையாக வேலை செய்த அரசியல் போராளிகளின் முயற்சியால் தான் எமது இயக்கத்துக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சேர்ந்தார்கள் என்பது தான் என்பது உண்மை. தளத்தில் அரசியல் வேலை செய்த எமது இயக்க அரசியல் போராளிகள்மக்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் கடுமையாக உழைத்து பயிற்சிக்காக இங்கு அனுப்பி வைக்க,இளைஞர்களை இங்கிருந்தஇயக்கத் தலைமைகள்சித்திரவதை செய்து கொலை செய்து மிகக் கொடுமை செய்தார்கள்.சிங்கள் அடக்குமுறைக்கு எதிராகப் புறப்பட்டு இளைஞர்கள் இங்கு உமா மகேஸ்வரன் மற்றும் தலைவர்களின் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பரிதாபம் தான் நிகழ்ந்தது.
பின் தளத்தில் நடந்த கொடுமைகள் கொலைகள் செய்திகள் மறைக்கப்பட்ட நிலையில், பல உண்மைகள் கசியத் தொடங்கின .தளத்தில் வேலை செய்த அரசியல் போராளிகளின் நிலைமை எப்படி இருக்கும் அவர்கள் தான் இங்கு கொலை செய்யப்பட்ட சித்திரவதை செய்யப்பட்ட தோழர்களின் தாய் , தகப்பனுக்கு பொறுப்புக் கூறவேண்டிய நிலைமை. தளத்தில் இருந்த அரசியல் போராளிகள்தலைமையை தட்டிக் கேட்டபோது பின் தளத்தில் இருந்து. தலைமை தட்டிக் கேட்ட அரசியல் போராளிகளைகொலை செய்ய ,தலைமை இயக்கத் தோழர்களை அனுப்பியது. அதனால் தளத்தில் இருந்த பல அரசியல் போராளிகள் தலைமறைவானார்கள். தளத்தில் மிக கஷ்டப்பட்டு இயக்கத்தை வளர்த்த அரசியல் போராளிகள்பல உண்மைகளை எழுதுகிறார்கள் விமர்சனம் செய்கிறார்கள் அதை நாம் வரவேற்க வேண்டும்..
இப்படியான கொலை சித்திரவதைகள் எமது இயக்கத்தில் மட்டும் நடக்கவில்லை ஆயுதம் தூக்கிய அனைத்து இயக்கங்களிலும் எமது இயக்கத்தை விட கொடூரமாக நடந்த செய்திகள் நமக்கு தெரியும். அதை நாங்கள் எழுதவில்லை.நாங்கள் எமது இயக்கத்தைப் பற்றிய உண்மை நிலையை எழுதும் போது மற்ற இயக்கங்களில் இருந்து உண்மையான விடுதலைக்காக வந்த தோழர்கள் தங்கள் தங்கள் இயக்கங்கள் எப்படியான மக்கள் விரோத செயல்களில் செய்தன என்று எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் மற்ற இயக்கத் தோழர்கள் தங்கள் தங்கள் தலைவர்களின் உண்மைகளை மறைத்து தங்கள் தலைவர்கள் பிடல் காஸ்ட்ரோ சேகுவேரா போன்ற தலைவர்களுக்கு சமமானவர்கள் போல எழுதுகிறார்கள். ஒரு மனசாட்சி வேண்டாம்.
ஆனால் நாங்கள் எமது இயக்கத்தைப் பற்றி பதிவிடும் போது மற்ற இயக்கங்களில் இருந்தவர்கள் ஓடிவந்து தாங்கள் இருந்த இயக்கம்தூய்மையானது போல் காட்டிக் கொண்டு , எமது இயக்கத்தைப் பற்றி மிகக் கேவலமாகப் கூடுதலாக விமர்சிக்கிறார்கள். இந்த விமர்சனங்களை வைப்பது கூடுதலாக மற்ற இயக்கத்தில் இருந்தவர்கள்.நாங்களெல்லாம் எமது இயக்கம் பற்றிய உண்மைகளை எழுதுவது விடுதலை என்ற பெயரால் என்ன நடந்தது என்பது இப்பொழுது உள்ள இளைஞர்களுக்கும் மக்களுக்கும் தெரியவேண்டும் என்பதற்காக.
இனிமேல் சரி மற்ற இயக்கத்தின் உண்மையாக தமிழீழ விடுதலையை நோக்கி வந்த இளைஞர்கள் தங்கள் இயக்கம் செய்த தவறுகளைவெளிக்கொண்டு வந்து அடுத்த தலைமுறை சரி சரியான வழியில் போக எமது பதிவுகள் துணை புரிய வேண்டும்.மற்ற ஆயுதக்குழுக்கள் செய்த தவறுகள் கொலைகள் தலைமைகளின் நடத்தை என்பன எமக்கும் தெரியும் அதை நாங்கள் விமர்சிக்கக் கூடாது. ஏனெனில் நாங்கள் எங்கள் தலைமை விட்ட தவறுகளை கூற மட்டும்எமக்கு உரிமை உண்டு.
அமிர்தலிங்கம் கட்சி முதல் எல்லா ஆயுதப் போராட்ட இயக்கங்களும் விட்ட தவறு தான் இன்று நமக்கு வடகிழக்கில் வழிகாட்ட நல்ல தலைமை இல்லை.வடகிழக்கில் நல்ல தலைமைகள் இல்லாததால் புதுப்புது தலைமைகள் சிங்கள அரசின் ஆதரவோடு தமிழர் மீது திணிக்கப்படுகின்றன. உருவாகிவரும் புதுப்புது தலைமைகள்தேர்தலில் வெல்வதற்காக அதாவது முன்பு அமிர்தலிங்கம் செய்ததுபோல் தீவிரமான தமிழ் தேசியம் பற்றி பேசி வாக்குகளை மட்டும் பெற முயற்சிப்பார்கள். பதவி வந்த பின்பு சிங்கள தேசியத்திற்கு ஆதரவாக மறைமுகமாக செய்வார்கள்
No comments:
Post a Comment