பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Friday, 9 January 2026

இது ஒரு பழைய பதிவு

  வெற்றிசெல்வன்       Friday, 9 January 2026
நித்தியானந்தன் உங்கள் தோழன் என்பவர் எழுதிய பதிவுக்காக நான் எழுதிய கருத்துக்காக, பாலன் தர்மா என்பவரு பிரான்சி இல் வசிக்கிறார் என நினைக்கிறேன். எனக்கு பதில் கருத்து போட்டு இருக்கிறார். நான் இருந்த இயக்கம் எவ்வளவு தான் கேவலமாக இருந்தாலும் உண்மைகளை எழுத கூடாது என்று. விடுதலை இயக்கங்களில் இருந்தவர்களில் நான் மட்டும் தான் உண்மைகளை எழுதி விடுதலையே  கேவல்படுத்தி விட்டேன் என்று. அப்படி என்றால் உண்மைகளை எழுதக் கூடாதா.
உமா மகேஸ்வரன் மரண தண்டனை தலைமை தாங்கியவர்கள் , சித்தார்த்தன் மாணிக்கம் தாசன். பின்பு தாங்கள் சம்பந்தப்பட்டதை மறைக்க இயக்க பணத்தை சில முக்கிய தோழர்கள் கொள்ளை அடித்து செயல் அதிபரை கொலை செய்து விட்டார்கள் என்று கதை கட்டினார்கள். எல்லா உண்மையும் தெரிந்த நான் வாய் மூடி மௌனியாக இருக்காமல், அவர்களுக்கு எதிராக நின்ற படியால் , கொலைக்கான உண்மையான காரணத்தை மாற்றி இந்திய உளவுத்துறை raw இடம் இருந்து பல கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு நான் கொலை செய்ததாக சித்தார்த்தன் மாணிக்கம் தாசன் கதை சொன்னார்கள். இன்றும் கூறுகிறார்கள்.
இன்றும் பல பேர் வவுனியாவில் புளொட் எந்தவித அநியாயங்களும் மக்களுக்கு செய்யவில்லை என்று கூறுகிறார்கள். உண்மையா. லக்கி ஹவுஸ் கண்ணாடி மாளிகை ரத்த வாடை என்பது என்ன.
கீழே பாலம் தர்மா போட்ட கருத்தை போடுகிறேன் நான் இருந்த பிளட் இயக்கம் பற்றி  எழுதியது சரியா பிழையா என்று கருத்துக்கள் கூறுங்கள்.
விடுதலை இயக்கங்கள் மக்களின் உரிமைக்காக போராட தான் ஆரம்பிக்கப்பட்டன. அதனால் மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரிய வேண்டும். இயக்கங்கள் பற்றிய பல உண்மைகளை மறைத்து மறைத்து வந்ததால் தான் என்று முள்ளிவாய்க்காலில் விடுதலை இயக்கங்களுக்கு சமாதி கட்டப்பட்டது. விடுதலை இயக்கங்களின் உண்மைகள் வெளிவராதால் இன்றும் அந்த இயக்கங்களின் கறை படிந்த முக்கியமானவர்கள் இன்றும் மக்கள் மத்தியில் தலைவர்களாக வலம் வருகிறார்கள். நாங்கள் இருந்த விடுதலை இயக்கங்கள் சில தனிப்பட்ட அவர்களின் சொத்து அல்ல. அதன் தலைவர்கள் தவறு செய்தால் பாதிக்கப்படுவது தமிழ் மக்களே. அதன் விளைவுகள் இன்று கண்கூடாக தெரிகிறது. விடுதலைப் போராட்டத்தை வைத்து பணம் சம்பாதிப்பவர்கள், சம்பாத்தியம் செய்தவர்கள் இன்று வெளிநாட்டிலிருந்து கொண்டு, தவறுகள் நடந்திருக்கலாம் ஆனால் அது வெளியில் சொல்லக்கூடாது என்று தங்களைப் பற்றிய உண்மைகள்வெளி வரக்கூடாது என்று பயப்படுகிறார்கள். என் மடியில் கனமில்லை அதனால் நான் பயப்படாமல் எழுதுவேன்.

Palan tharmaa

Vetri Chelvan உமாமகேஸ்வரனின் மரணத்திற்கு பின் மாணிக்கதாசண்ணாவின் காலத்தில் வவுனியா சிங்கள பகுதிகளில் பல கோடி அழியா சொத்துக்களை இயக்கத்திற்க்காக சேர்த்து வைத்தார்.
வவுனியாவில் அனைவருக்கும் தெரியும் மா தாசண்ணா வசந்தன் சின்ன தாஸ் டுமால் ஜெகன் வின்சன் அந்த கால பொறுப்பில் இருந்த எவரிடமும் எந்த சொத்தோ வங்கி கணகோ இருக்கவில்லை ஆடம்பரமாக வாழ்ந்ததும் இல்லை. 
மா தாசண்ணவின் சொந்த குடும்ப செலவுக்காக அவரின் சகோதரர்கள் பணம் கொடுத்து வந்தது எனக்கும் தெரியும் அதில் பல இலச்சங்களை இரால் பக்றிக்கு கொடுத்தவர்
 சின்ன தாசின் அக்காவின் வைத்திய செலவிற்க்காகவும் அந்த பணத்தில் தான் கொடுத்தார்.
மா தாசண்ணாவை கொல்வதற்காக புலிகளிடம் சித்தார்த்தன் தூள்பவான் ஞானி சலீம் கூட்டம் பெரும் தொகை பணம் பெற்று கொண்டனர் இயக்க சொத்துக்களையும் தமதாக்கி கொண்டனர். 
பெயர் சொல்ல முடியாது காரணம் அவர் இன்றும் இயக்கத்திலும் வன்னியில் இருப்பதால். 
அவர் சொன்னார் சித்தார்த்தன் தூள்பவான் பல இடங்களில் கதைத்திருக்கிறார்கள் வெற்ரி செல்வன் உமாமகேஸ்வரனின் கொலைக்காக றோ விடம் பல இலச்சங்களை வாங்கி உள்ளதாக இப்படியான பல பதிவுகளை நானும் படித்துள்ளேன்.
மா தாசண்ணா மரணிக்கும் வரை மேலே குறிப்பிட்ட எவரிடமும் எந்த சொத்தும் இருக்கவில்லை அவர்களின் பிள்ளைகளுக்கும் சேமிப்போ சொத்தோ இருந்ததில்லை,
 இதை அன்று இருந்த பெரும்பாலானவர்கள் அறிந்திருந்த உண்மை. 
 கடத்தல் கொலை கப்பம் எல்லா இயக்கங்களும் செய்தது அனைத்து போராளிகளுக்கும் இயக்கம் இரண்டாவது குடும்பம் 
இதுவரைக்கும் எந்த இயக்க உறுப்பினர்களும் உங்களைப்போல் அவர்கள் இயக்கத்தை கேவலமாக கதைத்ததுமில்லை எங்கும் எழுதியதுமில்லை. 
அவர்கள் ஞானமானவர்கள் அவர்கள் குடும்ப கௌரவத்தை காத்து கொள்கின்றனர்.
நீங்கள் தான் உங்கள் இயக்கத்தை எவராலும் தரம் குறைக்க முடியாத அளவுக்கு தாழ்த்தி எழுதி கதைத்து வருகிறீர்கள்.
உங்களை விட பெரிய பொறுப்புகளில் இருந்தவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்  இன்றும் இருக்கின்றார்கள் இதுவரைக்கும் பிழைகள் இருந்தும் அதை மறக்க முயன்று வாழ்கின்றனர்.
அப்படிப்பட்டவர்கள் தான் உண்மையாக விடுதலையை விரும்பினவர்கள்.
கேவலமான செயல் எவரும் உயிருடன் இல்லை என்பதால் மனதில் படுவதை எழுதுவது தன் குடும்பத்தையே காட்டியும் கூட்டியும் கொடுப்பதற்க்கு சமனானதே.

"இதைத்தான் சொல்வது பூனை இல்லா வீட்டில் எலிக்கு கொண்டாட்டம்"
logoblog

Thanks for reading இது ஒரு பழைய பதிவு

Previous
« Prev Post

No comments:

Post a Comment