பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Monday, 21 September 2026

இது ஒரு பழைய பதிவு சந்ததியாருக்கு அஞ்சலி செலுத்தும் பிளாட் இயக்கம்

  வெற்றிசெல்வன்       Monday, 21 September 2026
கடந்த வருடம்PLOTE/DPLF வெளியிட்ட சந்ததியாரின் நினைவு தின குறிப்பை முகநூலில் பார்த்தேன். அதில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள் நல்லது தான். ஆனால் அதில் அவரை யார் கொலை செய்தது கொலை செய்து விட்டு சவுக்கு காட்டில் எரித்தது, நிருபர்களுக்கு பகிரங்கமாக பேட்டி கொடுத்தது யார் என்ற விவரங்களை மறைத்து விட்டார்கள்.  

புளொட் இயக்கத்தின் அரசியல் செயலாக இருந்த சந்ததியாரை புளொட் இயக்கத்தின் செயல் அதிபராக இருந்த உமா மகேஸ்வரன் கொலை செய்து, தனது நம்பிக்கையானவர்களை வைத்து சவுக்கு காட்டில் எரித்த விபரம் இன்று இருக்கும் எல்லோருக்கும் தெரியும். சந்ததியாரைப் பற்றி பத்திரிகைகள் நிருபர்கள் கேள்விகள் கேட்ட போது,உமா மகேஸ்வரன், சந்ததியர் ராதா என்ற போதை பொருள் விற்கும் பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்து சிங்கப்பூருக்கு ஓடி விட்டதாக பகிரங்கமாக பேட்டி கொடுத்தார் அது அந்த காலத்தில் பத்திரிகைகளில் கூட வெளிவந்தது. 
இன்று இருக்கும் புளொட் தலைவர்கள் அதற்காக மன்னிப்பு கேட்காமல் தாங்கள் உத்தமர்கள் போல் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
logoblog

Thanks for reading இது ஒரு பழைய பதிவு சந்ததியாருக்கு அஞ்சலி செலுத்தும் பிளாட் இயக்கம்

Newest
You are reading the newest post

No comments:

Post a Comment