பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Tuesday, 15 September 2026

இது ஒரு பழைய பதிவு பொட்டமானின் நம்பிக்கை துரோகம்

  வெற்றிசெல்வன்       Tuesday, 15 September 2026
இங்கு நான் இன்னொருவரை பற்றி குறிப்பிடுகின்றேன் அவருடைய பெயர் தயாபரமூர்த்தி .இவர் நாயன்மார்கட்டை சேர்ந்தவர். உடுவிலில் திருமணம் முடித்தவர் பொட்டு அம்மாவின் ஒன்று விட்ட சகோதரர் மனைவி பெயர் சற்குணம் இவர் புளொட் அமைப்பில் செயல்பட்டு வந்தவர்.சின்ன மெண்டிசின் நல்ல நண்பர்.ஒரு ஆண்குழந்தையும் இரண்டு பெண்குழந்தைகள்.

ஒருநாள் உடுவில் கற்பகப்பிள்ளையார் கோவிலடியில் இருக்கும் அவருடைய  வீட்டிற்கு வந்த புலிகள் அவரை விசாரித்த பொழுது அவர்வீட்டில் இல்லை. அப்போது மகள் தாரா 6 மாத கைக்குழந்தை. மனைவி கணவர் வந்தால் சொல்கின்றோன் என்றார்.

இந்த விடயத்தை அறிந்த மூர்த்தி என் தந்தை இடம் தன்னை புலிகள் தோடி வந்த விடயத்தை கூறினார்.அப்பொழுது என் தந்தை சங்குவேலியில் உள்ள பாடசாலையில் அதிபராக இருந்த காலம் என்பதோடு. அன்றைய காலம் பாடசாலை விடுமுறைகாலம்

எனவே எனது தந்தை மூர்த்தியை தனது பாடசாலையில் தங்கவைத்திருந்தார்.இதே வேளை பொட்டு அம்மானிடம் தொடர்பு கொண்டு தனது மகனை ஏன் அழைத்தார்கள் புலிகள் என வினாவ இல்லை இது ஒரு சிறிய விசாரணை மகனை அனுப்பி வைக்கும்படி கூறினார் பொட்டு. 

பொட்டம்மானின் சொல்லை நம்பி புலிகளிடம் சரணடைந்தார் மூர்த்தி. மூர்த்தி உடன் புலிகளின் சிறையில் இருந்த ஆனைக்கோட்டையை சேர்ந்த புத்தொளி மஸ்டர் இவர் என் தந்தையுடன் ஆசிரியர் பயிற்சி காலசாலையில் ஒன்றாக பயின்றவர். விடுதலைக்கு பின் என் தந்தை யை பார்க்க எங்கள் வீடுவந்தபொழுது மூர்த்தி தன்னுடன் புலிகளின் சிறையில் இருந்ததாகவும். புலிகள் அடிக்கும் பொழுது அடி தாங்காது சற்குணம் சற்குணம் எனக்கத்துவதாகவும் அத்தோடு நோய்வாய்ப்பட்டு புலிகளின் சிறையிலே இறந்து விட்டதாகவும் கூறினார்.இதனை வேறு ஒருவருக்கும் கூற வேண்டாம் எனவும் கூறி சென்றார் 

பின்னார் 1993ம் ஆண்டு மூர்த்தியின் மோதிரம் 80 ரூபா காசு என்பவற்றை புலிகள் மனைவியிடம் ஒப்படைந்தார்கள். கணவனை பறிகொடுத்த சோகத்தில் இருந்த சற்குணம் அக்காவை நானும் எனது சிறிய அண்ணும் 1994ம் ஆண்டு எங்கள் கோவிலில் நடந்த முருகனின் திருக்கல்யாண திருவிழாவில் இறுதியாக கதைத்தோம் நாங்கள் அறிந்திருக்கவில்லை சற்குணம் அக்கா கடைசியாக எங்களுடன் பேசுவது இது என.

 1994 ம் ஆண்டு யாழ்பாணத்தில் இருந்து அனைவரும் மந்தைகள் போல் புலிகளால் யாழ்பாணத்தில் இருந்து அனைவரும் வெளியேறப்பட்டோம். அப்பொழுது சற்குணம் அக்காவும் பிள்ளைகளுடன் வெளியேறினார்.வரணியில் தங்கியிருந்த பொழுது சற்குணம் அக்கா கணவர் இறந்த சோகம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய எண்ணம் எனபவற்றை மனதில் சுமந்த படி இறந்து விடுகின்றார்.

பின்னாளில் குழந்தைகள் சற்குணம் அக்காவின் சகோதரி ஒருவரால் வளர்கப்பட்டார்.அச்சகோதரி இக்குழந்தைகளுக்காக திருமணம் செய்யவில்லை.இதேவேளை மூர்த்தியின் மகன் தனது ஒன்பது வயதில் இருந்து தனது தோட்டத்தையும் செய்து கொண்டு தந்கைகளை வளர்த்ததோடு தானும் கல்வி கற்று அரசசேவையில் இன்று சேவையாற்றுகின்றான்

நன்றி செந்தூரன்
logoblog

Thanks for reading இது ஒரு பழைய பதிவு பொட்டமானின் நம்பிக்கை துரோகம்

Previous
« Prev Post

No comments:

Post a Comment