இன்று உலகம் முழுதும் உள்ள இலங்கை தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை நினைவு கூறுவதோடு
, (யுத்த காலத்தில் யுத்தப் பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்ட தமிழ் பொதுமக்கள் உணவு கிடைக்காமல் எல்லோரும் காய்ச்சி குடித்த கஞ்சி உணவு,)
இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி என்ற பெயரோடு அடையாளப்படுத்தப்பட்டு, இதை வைத்து பெரிய அளவு வியாபாரமும் நடப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
யுத்தம் முடிந்து 13 வருடங்கள் ஆன பின்பும் போரில் ஈடுபட்ட ஆண் பெண் போராளிகளும், யுத்த களத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் இன்றும் அந்த ஒருவேளை முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கே வழியில்லாமல் இருப்பதாக செய்திகளும் வருகின்றன.
கடைசி யுத்த களத்தில் போராடி கை கால் , கண்இழந்து இன்று உயிருடன் இருக்கும் போராளித் தோழர்களை கைவிட்டு வெளிநாடுகளில்ஆடம்பரமாக முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தைக் கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம்.
தமிழீழ விடுதலைக்காக போராடிய இந்த விடுதலைப்புலிகள் இயக்கத் தோழர்களை மற்ற இயக்க, அரசியல் தலைவர்கள் ஏளனம் செய்து வெறுத்து ஒதுக்குவதும், இந்த விடுதலைப் போராட்டத்தை வைத்து கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்தவர்கள் இவர்களை கண்டும் காணாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.
அதேநேரம் திரும்பவும் போராட்டம் தொடரும் தமிழீழம் கிடைக்கும் வரை தமிழர்கள் போராடுவார்கள் என்று வெளிநாடுகளிலும் இந்தியாவில் தமிழ்நாட்டிலும் குரல்கள் கேட்கின்றன. முன்னாள் போராளிகளின் நிலையைப் பார்த்த பின்பும் களத்தில் நின்று இனியார் போராடப் போகிறார்கள்.
தங்கள் தங்கள் பதவிகளையும் பணத்தையும் காப்பாற்றவும் , மீண்டும் சொத்து சேர்க்க வே இந்த கோஷங்கள் பயன்படும். அடுத்த முள்ளிவாய்க்கால் நினைவு தினத்துக்கு முன்பாக வசதிபடைத்தவர்கள் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பாதிப்படைந்த முன்னாள் போராளிகள் பொதுமக்களுக்கு அவர்களின் வாழ்க்கைக்கு சிறு உதவியாவது செய்து அவர்களுக்கு வழி காட்டுங்கள்
No comments:
Post a Comment