பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Tuesday, 21 May 2024

புரியாத புதிர்

  வெற்றிசெல்வன்       Tuesday, 21 May 2024
புரியாத புதிர்.
விபரம் அறிந்தவர்கள் விளக்கம் கூறினால் நன்றாக இருக்கும்.

இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் என்று கூறப்படும் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் வவுனியா போன்ற இடங்களில் இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் நடைபெறுகிறதா? அங்குள்ள மக்கள், சரியோ தவறோமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தவிதமான தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

எனக்குத் தெரிந்து எந்த ஒரு விடுதலைப் போராட்டமும் தமிழர் பிரதேசங்களில் நடைபெறவில்லை. அங்கு வாழும்தமிழ் மக்களின் மனநிலை என்ன? ஆனால் இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் இன்றும் இலங்கை தீவில் போராட்டம் நடைபெறுவதாகவும் அதற்கு எப்படி ஆதரவளிப்பது என்று பெரும் கூட்டங்களை எல்லாம் நடைபெறுகின்றன. அதுவும் 2009 இலங்கை தமிழர்கள் அப்பாவித் தமிழர்களை துடிக்க துடிக்க கொலை செய்ய இந்தியா கனடா உட்பட பல நாடுகள்  இலங்கை அரசுக்கு உதவினார்கள் தவிர, அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்ற எந்த ஒரு நாடும் முன்வரவில்லை.
இன்று வந்த செய்திகளில் ஒன்று கனடா பாராளுமன்றத்தில் இலங்கை இனப்படுகொலைக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் என்ன பிரயோஜனம் இலங்கையில் இன்று வாழும் தமிழ் மக்களுக்கு ம், இறந்ததமிழ் மக்களுக்கும். ஐக்கிய நாடுகள் சபையில் அல்லது சர்வதேச மன்னிப்பு சபையில் கனடா என்ன நடவடிக்கை இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக எடுத்தது.
2009 இந்தியாவும் தமிழ்நாடும் அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தனர். ஆனால் இன்று அமெரிக்காவில் இருந்து கொண்டு ருத்ரகுமாரன் என்பவர் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் என்று கூறிக் கொள்பவர், இன்று சென்னையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் சபையை கூட்டியுள்ளார். அதில் பலரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எப்படி ஆதரவு அளிப்பது என்று பேசுவார்கள் என நினைக்கிறேன்.

இன்று எமது தமிழீழ விடுதலைப் போராட்டம் வியாபாரப் பொருளாகி வெளிநாடுகளில் தீர்மானிக்கப்படுவது வெட்கக் கேடான விடயம். இவர்கள் கூறும் தமிழீழம் எங்கு இருக்கிறது. இதுவரை 40 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் அகதிகளாக இருக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுக்கு நல்வழி காட்ட என்ன முயற்சி எடுத்தார்கள். இவர்களின் தமிழீழம் யாழ்ப்பாணக் குடாநாடு மட்டுமே. காரணம் யாழ் குடாநாட்டு வெளிநாட்டில் வசிக்கும்தமிழர்களின் பணமே.

கடந்த காலங்களைப் போல் எமது ஆயுதப் போராட்டத் தலைவர்கள் இந்தியாவை மையமாக வைத்து, போராட்ட களத்தில் இருந்து அன்னியப்பட்டு தமிழ்நாட்டில் விடுதலைபோராட்டங்களை நடத்திய படியால் தான்  இயக்கங்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்படாமல் அழிவு ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.
காலங்கள் பல சென்றாலும் இனிமேல் இலங்கையில் தமிழ் மக்களுக்கு உரிமைப் போராட்டங்கள், தமிழர் நிலங்கள் பறிபோகாமல் நடக்கும் போராட்டங்கள் எல்லாம் எமது பிரதேசங்களிலேயே புதிய தலைவர்களால் நடத்தப்பட வேண்டும் என்பதே எனது ஆசை. அப்போதுதான் போராட்டத்தில் ஈடுபடும் புதிய தமிழ் தலைவர்களை பற்றி மக்கள் அறிந்து விட முடியும். தவறு செய்யும் தலைவர்களே மக்கள் தண்டிக்கவும் முடியும். தயவுசெய்து வ எமது விடுதலைப் போராட்டத்தை அல்லது எமது மக்களின் அமைதியான வாழ்க்கையை கெடுக்க வெளிநாட்டில் இருப்பவர்களிடம் கொடுத்து விட வேண்டாம்.
அது இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களை அழிக்கும் முயற்சி இறுதியில் முடியும்.
logoblog

Thanks for reading புரியாத புதிர்

Previous
« Prev Post

No comments:

Post a Comment