திம்புப் பிரகடனம் [1985] ஒரு மீள் பார்வை
முதற் தடவையாக ஆயுதம் தரித்த தமிழ் விடுதலை அமைப்புக்களும் மிதவாத அரசியல் கட்ச்சியான தமிழர் விடுதலை கூட்டணியும் ,தமிழ் தேசிய பிரச்சனைகளின் அடிப்படைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கூட்டாகவும் ஏக மனத்தாகவும் பங்கு பற்றிய பேச்சு வார்த்தை இதுவாகும் .1985 யூலை 13 ம் திகதியன்று திம்புப் பேச்சுகளின் முதலாம் கட்ட முடிவு நாளன்று....
தமிழீழ விடுதலைப் புலிகள் [LTTE]அன்ரன் ,திலகர்
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி [EPRLF]வரதராஜா பெருமாள், எல்.கேதிஸ்வரன்,
ஈழப் புரட்சி அமைப்பு [EROS]ராஜி சங்கர், ஈ. இரத்தினசபாபதி,
-, தமிழீழமக்கள் விடுதலைக் கழகம்[PLOTE]வாசுதேவ,தர்மலிங்கம் சித்தார்த்தன்,
-,, தமிழீழ விடுதலை இயக்கம் [TELO]சார்ள்ஸ் என்ரனி தாஸ், மோகன், நடேசன் சத்தியேந்திரா
-, மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி [TULF] சிவசிதம்பரம்,அமிர்தலிங்கம்,சம்பந்தன்
ஆகியவற்றைக் கொண்டதான தமிழ்த் தூதுக் குழுவாழ் விடப்பட்ட கூட்டறிக்கை.
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான பயனுள்ள தீர்வெதுவும் பின்வரும் நான்கு முக்கிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமென்பது எமது ஆழ்ந்தாராய்ந்த கருத்தாகும்.
1. இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப் படுத்தல்.
2. இலங்கையிலுள்ள .தமிழர்களுக்கு இனங்காணப்பட்ட ஒரு தாயகம் உள்ளதென்பதை அங்கீகரித்தல்.
3. தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்.
4. இத்தீவைத் தமது நாடாகக் கருதுகின்ற எல்லாத் தமிழர்களினது பிரசாவுரிமையையும் அடிப்படை உரிமைகளையும்,அங்கீகரித்தல்.
இக்கோட்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கு வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு அரசாங்க முறைமைகளை வகுத்தமைத்துள்ளன.
எமது மக்களுக்கு இந்த அடிப்படை உரிமைகளை மறுத்ததனால் எழுந்துள்ள இப்பிரச்சினைக்குப் பதிலளிப்பாக நாம் சுதந்திரமான தமிழ் அரசொன்றைக் கோரியுள்ளதுடன் அதற்காகப் போராடியும் வந்துள்ளோம்.
இப்பிரச்சினைக்கு அவர்களின் தீர்வாக இலங்கை அரசாங்கத் தூதுக் குழுவினரால் முன்வைக்கப் பட்டுள்ள ஆலோசனைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை.எனவே 1985 யூலை 12 ம் திகதிய எமது கூற்றில் நாம் தெரிவித்துள்ளவாறு அவற்றை நாம் நிராகரித்துள்ளோம்.
எனினும் சமாதானத்துக்கான எமது மனமார்ந்த விருப்பின் நிமித்தம், மேலே குறிப்பிட்ட கொட்பாடுகளுக்கிணங்க இலங்கை அரசாங்கம் எமக்கு முன்வைக்கும் ஆலோசனைகளின் தொகுதி எதனையும் நாம் பரிசீலனை செய்யத் தயாராயுள்ளோம்.
------------+-------------+-----------------+--------------+----------------
மேற்படி அரசியல் பேச்சுவார்த்தை இந்தியாவின் நல்லாசியுடன் மூன்றாவது நாடொன்றில் அதாவது பூட்டான் தலைநகரான திம்புவில் 1985 யூலை 13 ம் திகதியன்று இரு தரப்புகளுக்குமிடையிலான பேச்சுகளுக்கு வழி சமைப்பதாயிருந்தது.'திம்புப் பேச்சுவார்த்தை' என்று பிரபலமான இந்தப் பேச்சுவார்த்தை இரு சுற்றுக்கள் மட்டுமே நீடித்தன.
தோல்வியில் முடிந்த இந்தப் பேச்சுவார்த்தைதான் ஆயுதமேந்திய போராளிக்குழுக்களும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் ஒன்றிணைந்து ஒரே மேசையில் அமர்ந்திருந்து இலங்கை அரசோடு நடாத்திய முதலும் கடைசியுமான பேச்சுவார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி SRK புது குடியிருப்பு
No comments:
Post a Comment