பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Friday, 18 April 2025

ஆரம்பகால முன்னோடி போராளி புஷ்பராணி நினைவுகள் என்றும் போற்றப்பட வேண்டும்

  வெற்றிசெல்வன்       Friday, 18 April 2025

1970 ஆண்டுக்கால பகுதியில் ஆரம்ப காலஈழ விடுதலைப் போராட்டத்தில் சிங்கள அரசின் கடுமையான சித்திரவதைகள் கொழும்பு சி ஐ டி நாலாம் மாடி போன்றவை தமிழ் இளைஞர்களிடம் மனதில் இடம் பெற தொடங்கியது. இதற்கு காரணம் புஷ்ப ராஜா அவரின் சகோதரி புஷ்பராணி ஆகியோர் பட்ட சித்திரவதைகள் தான். 

இவர்களை சித்திரவதை செய்து தமிழ் இளைஞர்களின் மனதில் வெறுப்பையும் ஆத்திரத்தையும் மூட்டியவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம் பிள்ளை அவர்கள்.


பஸ்தியாம் பிள்ளை செய்த சித்திரவதைகள் அப்போது பரபரப்பாக பேசப்பட்டன. பின்னர் 1978 ஆண்டு விடுதலைப்புலிகளின் இயக்க ரீதியான கொலையில் முதலாவதாக கொல்லப்பட்டார். 


இளைஞர்கள் மத்தியில் ஆரம்ப கால விடுதலைப் போராட்ட வீரர்கள் புஷ்பராஜா அவரின் சகோதரி புஷ்பராணி இருவரும் மற்றும் பல இளைஞர்களும் சிங்கள அரசால் செய்யப்பட்ட சித்திரவதைகள் பற்றியே பல கதைகள் இளைஞர்களின் விடுதலைப் போராட்ட உணர்வுக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருந்தன என்பது உண்மை. 

பிற்காலத்தில் சிங்கள அரசின் தமிழ் இளைஞர்களுக்கு எதிரானசித்திரவதைகளுக்கு, முடிவு கட்ட திரண்ட தமிழ் இளைஞர்கள் தங்கள் தங்கள் திறமையை காட்ட என்று ஒற்றுமைப்படாமல் தனித்தனி இயக்கங்கள் கண்டார்கள். 


ஆயுதம் தூக்கிய தமிழ் இளைஞர்களுக்கு தலைமை தாங்கிய தலைவர்கள் சிங்கள அரசிடம் சண்டை செய்வதை விட, சிங்கள அரசுக்கு மறைமுகமாக நேரடியாக உதவி செய்வதை போல் மற்ற தமிழ் இயக்கங்களில் இருந்த ஒவ்வொரு தமிழ் இளைஞர்களையும் அவர்களின் ஆதரவாளர்கள் பெற்றோர்கள் போன்றவர்களை கடுமையான சித்திரவதைகள் செய்து கொலை செய்தார்கள். தானும் தனது இயக்கமும் மட்டுமே இருக்க வேண்டும் என்று கடைசியில் 2009இல் தமிழ் இளைஞர்களின் தமிழில கனவே அழி க்கப்பட்டு விட்டது.


சிங்கள அரசு சிங்கள ராணுவம் செய்யாத சித்திர வதைகள் எல்லாம் தமிழ் விடுதலை இயக்கங்கள் தமிழ் இளைஞர்களுக்கு மட்டும் அதாவது மற்ற தமிழ் இயக்கங்களின் இளைஞர்களுக்கு அல்லது தங்கள் இயக்க உரிமைக்காக குரல் கொடுத்த தங்கள் சொந்த தமிழ் இயக்க இளைஞர்களையே பிடித்து மிக மிக ஹிட்லர் கூடி செய்யாத சித்திரவதைகளை செய்து தமிழ் தலைவர்களாக வலம் வந்தார்கள். இன்றும் கூட அந்த கொலைகாரத் தலைவர்கள் அரசியல்வாதியாக வேடம் போட்டு தமிழ் மக்களிடையே தி ரிகிறார்கள் . வெட்கக்கேடான விடயம்.

இதற்காகவா முன்னோடி போராளிகள் புஷ்ப ராஜா மற்றும் புஷ்பராணி மற்றும் பல இளைஞர்கள்  சிங்கள அரசிடம் சித்திரவதை பட்டு போராடினார்கள் 


இன்று ஆரம்ப கால போராளிகளில் ஒருவரான புஷ்பராணி அவர்கள் மறைந்த செய்து கேட்டு, அவர்களின் போராட்ட வாழ்க்கையை திரும்ப நினைத்து பார்க்கிறேன்.

இவர்களுக்கு முகநூலில் அஞ்சலி செலுத்துவது விட வருங்கால இளைஞர்கள் ஏன் இப்போது இருக்கும் அரைகுறை தமிழ அரசியல்வாதிகள் கூட இவர்களின் தியாகங்களை அறிந்து தங்கள் போராட்ட வாழ்க்கையே அரசியல் வாழ்க்கையை நேர்வழியில் செலுத்துவது தான் உண்மையான அஞ்சலியாக இருக்கும் வேண்டும்



logoblog

Thanks for reading ஆரம்பகால முன்னோடி போராளி புஷ்பராணி நினைவுகள் என்றும் போற்றப்பட வேண்டும்

Previous
« Prev Post

No comments:

Post a Comment