பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Thursday, 3 April 2025

கந்தன் கருணை படுகொலை

  வெற்றிசெல்வன்       Thursday, 3 April 2025

எங்கள் ஈழ தமிழ் விடுதலைப் போராட்டத்தில் மிகப்பெரும் தடைக்கல்லாக, அழிவாக கருதப்பட்ட இந்தியாவின் முன்னாள் பிரதமரும் அடுத்த தேர்தலில் பிரதமராக வரவேண்டிய திரு ராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டதும் அதோடு கூட தமிழ்நாட்டின்  அப்பாவி தமிழ் மக்கள் குண்டு வெட்டிப்பில் கொல்லப்பட்டதும் எமது ஈழ விடுதலைப் போராட்டம் 2009 ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலையோடு, எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டு எல்லாம் பறிபோய் விட்டது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி  மற்றும் தமிழ்நாட்டு அப்பாவி தமிழ் மக்கள் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் என கூறப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 35 வருட கால சட்டப் போராட்டம், மாநில மத்திய மற்றும் இந்திய உச்ச நீதிமன்ற முயற்சியால், இன்று  முருகன் மற்றும் இருவரும் சொந்த நாட்டுக்கு சுதந்திரப் பறவைகளாய் தமது உறவினர்களை பார்க்க போனது குறித்து மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

அதே நேரம் இன்னொரு செய்தியையும் நினைத்து பார்க்க தோன்றுகிறது. புலிகளின் தளபதியில் ஒருவரான கிட்டுவின் ஒரு கால் குண்டுவெடிப்பில் பறிபோனதை விட்டு உடனடியாக, என்ன ஏது என்று விசாரிக்காமல், பழிக்குப் பழி வாங்குவதாக நினைத்துக்கொண்டு புலி இயக்கம் தங்கள் கைது செய்த வைத்திருந்த 60க்கும் மேற்பட்ட மற்ற இயக்கத் தோழர்கள் பொதுமக்கள் போன்றவர்களை சுட்டுப் படுகொலை செய்தார்கள். என்ன ஒரு கருணை. கந்தன் கருணை படுகொலை.
logoblog

Thanks for reading கந்தன் கருணை படுகொலை

Previous
« Prev Post

No comments:

Post a Comment