இது எனது சொந்தக் கருத்து.
1983 ஆண்டுக்கு பின்பு எமது ஈழப் போராட்டத்தையும், இயக்கங்கள் பற்றிய வேறுபாடுகள், மலையக தமிழ்மக்களின் நிலைமைகள் பற்றி எல்லாம் அறியாமல். வடக்கு கிழக்கு, மலையக தமிழ் மக்களின் உண்மை நிலைகளை அறியாமல் தமிழ்நாட்டு மக்களும் தலைவர்களும் தங்களுக்கு விருப்பமான தமிழ் இயக்கங்களை உணர்ச்சிவசப்பட்டு ஆதரித்து 2009 இல் எல்லாமே அழிந்து விட்டன.இன்று வரை எல்லோரும் தமிழ் நாட்டுத் தலைவர்களையும் மக்களையும் திட்டி எழுதுகிறார்கள்.
இதே தவறை திரும்பவும் நாங்கள் செய்கிறோம். இந்திய நாட்டில் தமிழ் நாட்டில் மக்களுக்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய தலைவர்களை ஆராய்ந்து பார்த்து தெரிவு செய்யக் கூடிய வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது. ஆனால் வெளிநாடுகளில் எந்தப் பிரச்சினைகளும் இன்றி வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்கள், உண்மையில் இலங்கையில் எமக்கு இருக்கும் பிரச்சினைகளை பற்றி சிந்திக்காமல், தமிழ்நாட்டு அரசியலில் யார் வரவேண்டும் என்று கருத்துக்கள் கூறிக் கொண்டிருக்கிறோம். அதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொள்வார்கள். இன்று நாங்கள் திட்டித் தீர்க்கும்தலைவர்கள் யாரும் முதலமைச்சராக வந்துவிட்டால் எந்த முகத்தை கொண்டு,கொண்டு அவர்களிடம் எமக்கு ஆதரவைத் திரட்டுவது.
நாங்கள் எங்கள் வசதிக்கேற்ப இலங்கையில் இருக்கும் தமிழர்களை பற்றி கவலைப்படாமல்வெளிநாடுகளில் சொகுசாக இருந்து கொண்டு கருத்து சொல்வதை விட வேண்டும்.. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் இலங்கை தமிழர்கள் அகதியாக எந்தவித வசதியும் இன்றிஇருக்கிறார்கள், என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment