2001 செப்டம்பர் 11 அமெரிக்க தாக்குதலை அடுத்து உலக நாடுகளின் பார்வை ஆயுதம் தூக்கிய இயக்கங்களின் மேல் எப்படி இருக்கும் என்று அறிந்து கொண்ட விடுதலை புலி இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆண்டன்பாலசிங்கம் அவர்கள் அன்றைய உலகின் நிலை குறித்து சரியான முறையில் பிரபாகரனுக்கு எடுத்துரைத்தும், பேச்சுவார்த்தைகளில் முடிந்த அளவு வெற்றி பெற தமிழர் தரப்பு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
செவிடன் காதில் ஊதிய சங்கு போல பாலசிங்கம் தூக்கி எறியப் பட்டார்.. இலங்கை அரசையும் இலங்கை ராணுவத்தையும் எடை குறைவாக போட்டு கடைசியில் என்ன நடந்தது 2009இல் விடுதலை புலிகள் இயக்கமும் ஆயிரக்கணக்கான தமிழ் பொது மக்களும் கொல்லப்பட்டது தான் நாங்கள் நேரில் கண்ட காட்சி. ஒரு நல்ல தலைவன் ஆயுதத்தை மட்டும் நம்பாமல் தன்னை நம்பி வந்த இளைஞர்களையும் பொது மக்களையும் பலி கொடுக்காமல் காப்பாற்றி இருக்க வேண்டும்.
அதன்பிறகு என்ன நடந்தது சிங்கள அரசாங்கங்களும், அதைவிட மோசமாக முன்னாள் ஆயுதம் தூக்கி ய இயக்கங்களின் தலைவர்கள் பணத்திற்காகவும் பதவிக்காகவும் சொந்த மக்களையே ஏமாற்றி கொள்ளையடித்தார்கள்.
இன்று ஜனாதிபதி தேர்தலில் பதவிக்காகவும் பணத்துக்காகவும் அலைந்து திரிந்த தமிழ் தலைவர்கள் எந்த ஜனாதிபதி வந்தால் தங்களுக்கு மட்டும் பதவி பணம் கிடைக்கும் என்று பார்த்து தமிழ் மக்களை ஆதரிக்க சொன்னார்கள் .
அதைவிட தமிழ்மக்களால் ஒதுக்கி தள்ளப்பட்ட சில தலைவர்கள் தமிழ் தேசியத்தை கையில் எடுத்து மக்களை உசுப்பேற்ற , பெருமைக்காக தமிழ்த் தேசியமும் தமிழீழமும் பற்றி பேசும் வெளிநாட்டில் நிரந்தரமாகவும் வாழும் இலங்கைத் தமிழர்கள் பல கோடிகள் அவர்களுக்கு அனுப்பி இருப்பதாக கேள்வி. இவர்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்தது தமிழ் மக்களுக்காக இல்லை இதை காட்டி வெளிநாடுகளில் பெரும் கோடிகளில் பணம் பெற, இவர்களெல்லாம் தங்கள் தலைவனே கொலை செய்ய உதவி செய்து பெரும் அளவு கோடிகளில் பணம் பார்த்தவர்கள்.
தமிழ் மக்கள் இப்போது இருக்கும் இலங்கை நிலைமைகளையும் சிங்கள மக்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்று பார்த்து உணர்ச்சி வசப்படாமல் சரியான ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களித்திருக்க வேண்டும்.
பெருவாரியான சிங்கள மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் இலங்கை ஜனாதிபதியின் பார்வை வேறுபடக்கூடும்.
அன்றும் சரி என்றும் சரி தமிழ் தலைவர்களும் தமிழ் மக்களும் தங்களது சரியான அரசியல் பார்வையைக் கொண்டு இலங்கை நிலைமைகளைப் பார்த்து அரசியல் செய்வதில்லை.
தமிழ் மக்களையே சொந்த மக்களே ய கடத்தி கொலை செய்து கற்பழித்து சித்திரவதை செய்து கொலைகள் செய்த இப்ப இருக்கும் தமிழ் தலைவர்களையே நம்பி செயல்படுவது வருந்தத்தக்கது
No comments:
Post a Comment