போரில் உயிரிழந்த அனைத்து எமது உறவுகளுக்கும் அஞ்சலிகள்.
இலங்கையில் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை சென்று மரணித்த பொது மக்களுக்கும் , போராளிகளுக்கும் மற்றும் வெவ்வேறு இயக்கங்களில் இருந்து மரணித்த அனைத்து போராளிகளுக்கும் எனது அஞ்சலிகள்.
என்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்.
14 08 1983 ஒபரேய் தேவன் புலிகளுக்கு !
உங்கள் கைவசம் உள்ள ஆயுதங்களை எம்மிடம் ஒப்படைத்து சரணடையாவிட்டால் உங்கள் வீடு புகுந்து உங்களையும் உங்கள் குடும்பங்களையும் சுட்டுத்தள்ளுவோம்.
மே 1986 புலிகள் சகோதர போராளிகளுக்கு.
புலிகளின் தலைவர் பிரபாகரன் எஞ்சியுள்ள தனது போராளிகளுடன் சரணடையாவிட்டால் அவர் தனது தலைவிதியை சந்திக்க நேரிடும்.
மே 2009 இலங்கை அரசு புலிகளுக்கு.
முள்ளிவாய்க்காலில் சிக்கி உயிரிழந்த மக்கள் தங்களது கடைசி நேரங்களில் கஞ்சியே தங்கள் உணவாகக் கொண்டிருந்தனர், இதற்க்கு காரணமானவர்கள் புலிகளும் TNA காரன்களும் மாத்திரமே , புலிகள் இறுதியில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்ததை கிளிநொச்சியில் செய்து இருந்தால் , அல்லது TNA கார வாழ்ந்து முடிந்து சாவுக்காக காத்திருக்கும் கிழவனுகள் அந்த நேரத்தில் ஓரு சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து இறந்திருந்தால் இந்த அவலத்தை தடுத்திருக்க முடியும் , TNA கார முழுக்கிழவனுகளும் உண்ணாவிரதம் இருந்திருந்தாலும் சாகத்தான் போறானுகள் உண்ணாவிரதம் இருக்காவிட்டாலும் இன்னும் ஒரு சில வருடங்களில் சாகத்தான் போறானுகள் , அதற்க்கு இந்த கிழடுகள் கிளிநொச்சியில் உண்ணாவிரதம் இருந்து இறந்து போரை தடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால் நினைவு தேவைப்பட்டு இருக்காது ,போர்க்குற்றம் நடைபெற்று இருக்காது ,இத்தனை உயிர்களை இழந்து இருக்கவும் தேவை இல்லை.
இப்போது இவைகளை வைத்து ,
சிலர் கண்ணீர் வடிக்கிறார்கள்
சிலர் வலியில் துடிக்கிறார்கள்
சிலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்
சிலர் பிரார்த்தனை செய்கிறார்கள்
சிலர் அரசியல் செய்கிறார்கள்
சிலர் உண்டியல் கிலுக்குகிறார்கள்
இது யாரால் ஏற்பட்டது ?
சகோதர படுகொலைகளும், வெருகல் படுகொலை ,இரு நாடுகளின்
இருபெரும் தலைவர்களான ராஜீவ் காந்தி,
பிரேமதாசா உட்பட, பத்மநாபா
அமிர்தலிங்கம் ,துரையப்பா ,லக்ஸ்மன் கதிர்காமர் , ஆகிய பெரும் தலைவர்களையும்
புலிகள் கொன்றது தான் முள்ளிவாய்க்காலின் அவலத்துக்கு முக்கிய காரணமாகும். மூர்க்கத்தனமாகவும் ,முட்டாள்தனமாகவும் செயல்பட்ட புலிகள் இந்த சகோதரப்படுகொலைகளையும், தலைவர்களையும் கொன்றவுடனே
செத்துவிட்டார்கள்.
சாகசத்தை நம்புபவர்களால்நீண்ட தூரம் பயணிக்க முடியாது. புலிகள் காட்டியதும் ஒருசாகசம்தான், அதனால்தான்
புலன் பெயர்ந்த விசுக்கோத்துகள் புலிகளை கண்மூடித்தனமாக ஆதரித்தார்கள்,
எதிர்பார்த்தார்கள் ,நம்பினார்கள்,இறுதியில்
முட்டாள்தனமாக ஏமார்ந்தார்கள்.
இவர்கள்தான் தற்போது போர்க்குற்றங்களைப் பற்றி பேசுகிறார்கள் ,
போர்க் குற்றங்களுக்காக இலங்கை அரசும் இலங்கை ராணுவமும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோருகிறார்கள் நல்லது. அதேசமயம், மறுபக்கம் புலிகளும் போர்க் குற்றங்களை இழைத்தவர்கள்தான் அவர்களும் தண்டிக்க படவேண்டும். ஒருபுறம், வெள்ளைக்கொடிகளோடு சரணடைந்த புலித் தலைவர்களைக் கொன்றது குற்றம் இல்லையா என்று இலங்கை ராணுவத்தை நோக்கிக் கேட்பவர்கள் மறுபுறம், பச்சிளம் குழந்தைகளின் கழுத்தில் எல்லாம் சயனைடு குப்பிகளைக் கட்டி ,பெண்களுக்கு வெடிகுண்டுகளை கட்டி அனுப்பிய நீங்கள் உங்கள் உயிரைக் காத்துக்கொள்ள வெள்ளைக்கொடி ஏந்திச் சென்றதும் குற்றம்தானே என்று புலி ஆதரவாளர்களை நோக்கிக் கேட்கும் நெஞ்சுரமும் வேண்டும்.
புலிகள் வன்னியில் காலடி வைக்கும் வரை அமைதி பூங்காவாக இருந்தது வன்னி, இராணுவத்தின் வாசனை அறியாத பூமி வன்னி!
ஆனால் வன்னியில் யுத்தம் நடத்தப் பணத்தைக் கொட்டிக் கொடுத்த விசுக்கோத்துகள்
இன்று இனப்படுகொலை என்று அழுகிறார்கள்!
மக்களை வெளியேற அனுமதித்திருந்தால் அவர்கள் முள்ளிவாய்க்காலில் அகப்பட்டிருக்கமாட்டார்கள், முள்ளிவாய்க்காலின் எல்லையில் சென்று ஆயுதங்களைப் போட்டு காலில் வீழ்ந்தீர்களே
அதை ஏன் முதலில் செய்ய முடியாமல் போனது?
இனப்படுகொலை என ஒப்பாரி வைக்கும் புலன்
பெயர்ன்த விசுக்கோத்துகளே
நீங்கள் கொடுத்த நிதியில் நடந்த யுத்தத்தில்தானே மக்கள் கொல்லப்பட்டார்கள்?ஆகவே இனப்படுகொலையில் உங்களுக்கும் பங்கு உன்டு என்பதை மறந்து விடாதீர்கள்.
நீங்கள் மாத்திரம் ஊரை விட்டு ஓடி வந்து கல்யாணம் கட்டி,பிள்ளைகளை பெற்று ,நல்ல பாடசாலையில் படிக்கவிட்டு ,
பிறந்தநாள் கொண்டாடி சந்தோசமாக இருக்கவேணும், ஊரில் உள்ளவர்களின் கஷ்டப்பட்டவர்களின் பிள்ளைகள் அடிபட்டு சாக வேணும், முதலில் உங்கட பிள்ளைகளை கொண்டு போய் வன்னியில் ஒரு 5 நிமிடம் செருப்பில்லாமல் வெய்யிலில்
நிற்க சொல்லுங்கள் . அப்போதுதான் உங்களுக்கு
போராடி இறந்தவர்களின் அருமை தெரியும் .
இப்படியானவர்களுக்கு அழிவுதான் பிடிக்கும். ஆக்கத்துக்குப் பிடிக்காது. ஆக்கத்துக்கு நிதி கேட்டால் கொடுக்க மாட்டார்கள்
கரும்புலிப் படகு தயாரிக்க காசு கேட்டால் அள்ளிக் கொடுப்பார்கள்
தாய்நாட்டின் விமான நிலையத்தையும் விமானங்களையும் தாக்கி அழித்தால் விருந்து கொண்டாடி மகிழ்வார்கள் ,இலங்கைக்க்குத் திரும்பிப் போனால் உயிராபத்து என்று வழக்காடி விசாக் கிடைத்த பின்னர் சிறிலங்கா விமானத்தில் பயணம் செய்து கட்டுநாயக்காவில் இறங்கி யாழ்ப்பாணம் போய் நல்லூர்த் திருவிழா கொண்டாடுவார்கள்,
இலங்கைக்குப் போட்டு வந்து நாடு அந்த மாதிரி இருக்கெண்டும் சொல்லுவார்கள்.
காணாமல் போனவர்கள் பற்றி பேசவேண்டுமானால் முதலில் புலிகளின் துணுக்காய் சித்திரவதை முகாமில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் அல்ல ,
முள்ளிவாய்க்கால் முடிவுற்ற இடமே .
சர்வாதிகாரி பொல்பொட்டின் சித்திரவதை முகாம்களையே முறியடித்த புலிகளின் துணுக்காய் சித்திரவதை முகாம். அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் 5000 பேர்புலிகளினால் கொன்று புதைக்கப்பட்டனர்.
துணுக்காய் பாசிஸ புலிகளின் வதை முகாம் பொறுப்பாளன் மல்லி என்பவனால் புலிகளின் கைதிகளாக இருந்த 4,200 இற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு அடையாளம் தெரியாது புதைக்கப்பட்டார்கள். இவனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமான இளைஞர்கள். இவனெல்லாமமாவீரன் ?
ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமாகத் தொடங்கப்பட்டஅமைப்பு இறுதியில் சொந்த மக்களையே பலி கொண்டமோசமான பயங்கரவாத இயக்கமாகத் தன் கதையை முள்ளிவாய்க்காலில் முடித்துக்கொண்ட வரலாறுதான் புலிகளுடையது.
இன்று புலிகள் அமைப்பு யார்?
உலகின் 40-க்கும்மேற்பட்ட நாடுகளால் தடை விதிக்கப்பட்ட, உலகின் மோசமானபயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாக முத்திரை குத்தப்பட்ட, முற்றிலும் வலுவிழந்த, கிட்டதட்ட அழிந்தேவிட்டே ஓர் இயக்கம். சரியாக சொன்னால், பல் பிடுங்கப்பட்ட, அடித்து துவைக்கப்பட்ட, கிட்டத்தட்டசெத்தேவிட்ட அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு பாம்பு.இவர்களை ஆதரிப்பவர்கள் ஒன்றில் பயந்தாங்கொள்ளிகள் அல்லது அவர்களிடம் இருந்து எதாவது ஒரு வழியில் ஆதாயம் பெறுபவர்கள்.
இன்று புலிகளின் பெயரால் இயங்குபவர்கள்அவர்களுடைய பினாமிகள்; அவர்கள் ஏன் இன்னமும் புலிகளின்பெயரை உச்சரிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு அதில்ஆதாயம் இருக்கிறது, இன்னுமொரு முள்ளிவாய்க்கால் எமக்கு வேண்டாம்.
ஒருதடவை அமிர்தலிங்கம்
பிரபாகரனை பற்றி இப்படி சொன்னார், "தம்பி பிரபாகரன் தமிழனித்திற்காக சிறுவயதில் இருந்தே போராடுவது வரவேற்கதக்கது, ஆனால் எதனை செய்யவேண்டும், எதனை செய்யகூடாது எனும் அறிவு அவரிடம் இல்லை, பக்குவம் இல்லை, முதிர்ச்சி இல்லை.இவர் இப்படியே செய்துகொண்டிருந்தால் அது பெரும் அழிவில் முடியும், அவர் பின்னால் இளைஞர்கள் செல்வது நல்ல அறிகுறி அல்ல..."
எவ்வளவு அனுபவமான வார்த்தைகள்.
அவ்வளவுதான் ஒரு சுபநாளில், பேச்சுக்கு என சென்ற புலிகள் அவர் வீட்டில், அவர் மனைவி கையாலே தேநீர் குடித்து, அமிர்தலிங்கத்தை கொன்று அவர் தாலி அறுத்தனர், பயிற்சி அப்படி
புலன் பெயர்ந்தோர்களே இனிமேலாவது உங்களின் சுயநலமான எண்ணங்களை விட்டுட்டு,
உங்களால் பரிதாப நிலையில் நடுத்தெருவில் நிற்கும் முன்னாள் போராளிகளுக்கு உதவி செய்தாவது நீங்கள் செய்த பாவத்துக்கு பரிகாரம் செய்யுங்கள் ,உதவி செய்ய முடியாவிட்டால் ஒதுங்கி இருங்கள்.
புலிகள் தமிழர்களைக் கொல்லும் போது "துரோகிகள் " கொல்லப்பட்டார்கள் என்று உபதேசம் செய்தார்கள். குண்டு வெடிப்புக்களில் மக்கள் கொல்லப்பட்ட போது "மக்களின் உயிரிழப்புக்கள் " போராட்டத்தை வீறு கொள்ளச் செய்யும் என்றார்கள்.. இப்படியெல்லாம் புலிகளின் கொலைகளையும், புலி காலத்து மரணங்களையும் நியாயப்படுத்தியவர்கள் புலிகளை அடியோடு அழித்த போது "மனித உரிமை " என்று ஊழையிடுகிரார்கள்
தமது கருத்துக்களோடு உடன்படாதவர்களை, தம்மை விமர்சித்தவர்களை, தமக்கு போட்டி பங்காளிகளாக கருதப்பட்டவர்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றொழித்தவர்கள் புலிகள், தாமே ஏகப்பிரதிநிதிகள். தாமே தமிழரின் பாதுகாவலர்கள், என்ற மமதையில் ஏனைய இயக்க தலைவர்களையும், போராளிகளையும் மாத்திரமல்ல சமூகத்தில் புத்தி ஜீவிகள், கல்விமான்கள் போன்றவர்களையும், தம்முடன் உடன்படாதவர்களையும் துரோகிகள் என்று கூறி கொலை செய்தவர்கள் புலிகள்.இறுதியில் அனைத்து அப்பாவி தமிழர்களையும் முள்ளிவாய்க்கால் வரை இழுத்துக் கொண்டு வந்து , நம்பி வந்தவர்களுக்கு துரோகம் செய்து அவர்களை சாகடித்து தாமும் மாண்டு போனார்கள்.
முப்பது ஆண்டுப் போரின் முடிவில் உங்களை நம்பி வந்தவர்களை முட்கம்பி வேலிக்குள் இழுத்துக் கொண்டு போய் விட்டீர்கள், அவர்கள் முகம் கவிழ்ந்து ,கூனிக்குறுகி அடைபட்டுக் கிடந்தார்கள்,முள்ளிவாய்க்கால் இன அழிப்பு என்றீர்கள் இன அழிப்பு செய்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கச் சொன்னீர்கள்,நூல் நிலையத்தை எரித்தவர்கள் எமது எதிரிகள் என்றீர்கள் , எதிரிகளுடன் சேர்ந்த முதல் இயக்கம் என்ற பெயரை வாங்கி சகோதர இயக்கத்தினரை காட்டிக்கொடுத்துத் துரோகம் செய்து கொன்றொழித்தீர்கள் எரித்தவர்களுக்கு வாக்களிக்கவும் சொன்னீர்கள், சொன்னபடி செய்தார்கள் அதற்காக அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள் இன்று வரை முன்னாள் போராளிகள் என்கிற பெயரில்,வெக்கித் தலை குனிந்துள்ளது தமிழ் சமூகம் உங்களால் இன்று.
அன்று புலிகள் சகோதர படுகொலைகளைச் செய்து அனைத்து இயக்கங்களையும் தடை செய்தது, அனைத்து இயக்கங்களும் இயங்கிக்கொண்டிருக்கிறது புலிகள் இல்லை இன்று.
புலிகள் தமிழர்களைக் கொல்லும் போது "துரோகிகள் " கொல்லப்பட்டார்கள் என்று உபதேசம் செய்தார்கள். குண்டு வெடிப்புக்களில் மக்கள் கொல்லப்பட்ட போது "மக்களின் உயிரிழப்புக்கள் " போராட்டத்தை வீறு கொள்ளச் செய்யும் என்றார்கள்.. இப்படியெல்லாம் புலிகளின் கொலைகளையும், புலி காலத்து மரணங்களையும் நியாயப்படுத்தியவர்கள் புலிகளை அடியோடு அழித்த போது "மனித உரிமை " என்று ஊழையிடுகிரார்கள்
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.
அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகள் .
முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் , அதில் ஒருவரின் வலி இதோ .
நம்பி வந்த எம்மை
நந்திக் கடல் அருகே குந்த வைத்தீர்கள்.
*இழந்து இழந்து,பின்வாங்கிப் பின்வாங்கிஇழுத்துவந்தீர்கள் இங்கு நந்திக் கடலருகே நான்கு லட்சம் பேர் நாங்கள்.உயிர் தப்ப ஓடுகிறோம்,உயிர் தப்பி ஓடுகிறோம்.
*தப்பி ஓடியவர்களைத் துரத்திச் சுடுகிறீர்கள்
சரணடைய செல்பவர்களையும்
வெட்டி கொல்கிறீர்கள் எப்புறம் ஓடுவேன் கடவுளே நான் எப்புறம் ஓடுவேன்?எப்புறம் திரும்பினும் துப்பாக்கி முனைகள் எப்புறம் திரும்பினும் கொலைஞரின் கரங்கள்.
*பதுங்கு குழியில் படுத்துக் கிடந்தேன்
பச்சை இரத்தத்தில் மிதந்து வந்தேன் தலை இழந்த பனைகளின் கீழ் உயிரிழந்த சடலங்கள்.கூண்டைவிட்டுப் பறந்தது குருவி குஞ்சுக்கு இரைதேடிமீண்டும் வரவில்லை அதுகுண்டுக்குப் பலியாகி.
*கழுத்தில் அணிந்த மரணக் குளிசையை
கழற்றி வீசினீர்கள் , வெள்ளைக் கொடியைக் கைகளில் ஏந்தினீர்கள் எல்லைக் கோட்டைத்
தாண்டிச் செண்றீர்கள் வெடித்தன துப்பாக்கிகள்.
மடிந்தீர்கள் நீங்கள் .
*சகதியில் கிடந்தது
தலைவரின் சடலம் தலை பிளந்து விழி திறந்து.எப்படி நிகழ்ந்ததுயாரும் அறியோம்? முப்பது ஆண்டுக் கொடுங்கனவு நனைந்து கலைந்தது நந்திக் கடலில்.
முப்பது ஆண்டுப் போரின் முடிவில்
முட்கம்பி வேலிக்குள் முடங்கினோம் நாங்கள்,முகம் கவிழ்ந்தோம்
கூனிக்குறுகிப்புதைந்து கிடக்கின்றோம் உங்களால் நாங்கள்.
No comments:
Post a Comment