2009 ஆண்டுக்குப் பின்பு சில தேவைகளுக்காக முள்ளி வாய்க்காலில் மறைந்து போன தமிழில விடுதலை புலிகள் இயக்கம் வெளிநாடுகளில் மட்டும் உயிர்ப்பிக்க படும்..
சிங்கள மக்களிடம் ஆளும் சிங்கள அரசு சிங்கள தலைவர்கள் ஆதரவு குறைந்து வரும் வேளையில், சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக புலிப் பூச்சாண்டி காட்டப்படும்.
இது எப்படிபுலி பூச்சாண்டி காட்ட சிங்களத் தலைவர்களுக்கு மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்களும், தமிழ்நாட்டில் புலி ஆதரவு கோஷம் போடும் ஒரு சில மக்கள் ஆதரவற்ற தமிழர்களாலும் தமிழ்நாட்டிலும் அப்போதுதான் இலங்கை தமிழர் ஆதரவுக் கூட்டங்கள் போடுவார்கள். அதை சிங்களத் தலைவர்கள் சிங்கள மக்களிடம் கூறி புலி திரும்ப உருவாக்கப்படுகிறது என்று கூற சிங்கள மக்களும் அதை நம்பி ஆதரிப்பார்கள்.
தமிழ்நாட்டில் திமுக கட்சியையும் அரசையும் எதிர்ப்பதற்கு ஒரே வழி தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட புலிகள் வச்சி ஆதரவுக் கூட்டங்கள் கோஷங்கள் போடும்போது, மத்திய அரசாங்கம் திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கும் என்று நினைத்து, மேலும் மேலும் திமுக அரசை சங்கடப்படுத்த, புலி ஆதரவு கோஷங்களும் கூட்டங்களும் இங்கு கூடுதலாக நடத்துவார்கள்.
அண்மையில் தமிழ்நாடு அரசாங்கம் நல்லெண்ணத்தின் அடிப்படையில் இலங்கையில் கஷ்டப்படும் மக்களுக்கு மருந்து உதவிப் பொருட்கள் அனுப்பும்போது, திடீரென தமிழ் மக்களுக்கு பொய்யான ஆதரிக்கும் சில தலைவர்கள் முதலமைச்சரை சந்தித்து உணவு பொருட்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தான் சென்றடைய வேண்டும் அதைத்தான் செய்யவேண்டும் என்று கூறினார்கள். இன்று ஓரளவு இலங்கையில் தமிழ் சிங்கள, முஸ்லிம் மக்கள் வெற்றுமை காட்டாது ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக போராடி வரும் நிலையில், அந்தப் போராட்டங்களில் தமிழ்நாட்டிலிருந்து வரும் உணவு மருந்துப் பொருட்கள் இலங்கை தமிழர்களுக்கு மட்டும்தான் என்றால், இது இன்னொரு சிங்கள-தமிழ் கலவரத்தைத் தூண்டும் முயற்சி. தமிழ்நாட்டில் இருக்கும் தலைவர்கள் இலங்கை தமிழர்கள் என்றால் வட மாகாணத்தில் இருக்கும் மக்களை மட்டும் தான் குறிப்பிடுகிறார்கள். கிழக்கு, மலையகத் தமிழர்களை இவர்கள் தமிழர்கள் என கணக்கில் எடுப்பதில்லை.
தமிழ்நாட்டில் இருக்கும் ருசி கண்ட சில தலைவர்கள் இன்னும் இலங்கையில் தமிழர் பகுதிகளில் தனித்தமிழ் ஈழ போராட்டம் நடைபெறுவதாக கற்பனையில் இருக்கிறார்கள். இவர்களின் கற்பனைக்கு இதில் பெருமளவு விடுதலைப் புலிகளின்பணத்தை கொள்ளையடித்து வைத்திருப்பவர்கள் இவர்களை ஊக்கப்படுத்துவதாக ஒரு தகவல் உள்ளது.
No comments:
Post a Comment