ஆயிரக்கணக்கான தமிழர்கள் மரணமடைந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. இவ்வளவு அழிவுக்கு பிறகும் அதன் பின்பு வந்த தமிழ் தலைவர் கள் தொடர்ந்து பதவிக்காகவும் பணத்துக்காகவும் தொடர்ந்து தங்களுக்கு அடிபடுவதும் காட்டிக் கொடுப்பதும் சிங்கள அரசுத் தலைவர்களிடம் தமிழர் உரிமைகள் தமிழ் பகுதி வளர்ச்சி பற்றி பேசாமல் பதவிக்காகவும் பணத்துக்காகவும் இதுவரை காலம் அலைந்து திரிந்தார்கள் பணமும் கார் பர்மிட் சாராயக்கடை பார் பர்மிட் பெற்று தங்களை மட்டும் சொகுசாக வளர்த்துக் கொண்டார்கள்.
தேர்தல் காலத்தில் மட்டும் இவர்களுக்கு தமிழ் தேசியம் தமிழர் உரிமை நினைவுக்கு வந்துவிடும். 2009 க்கு பின்பு இந்த துரோகத்தனமான தமிழ் தலைவர்கள் விட்ட தவறாள் தமிழர் பகுதிகளில் சிங்கள அரசியல் கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்ற முடிகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment