இன்று 11 வருடங்களுக்கு முன் நடந்த முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை தினமாகும்.அன்று படுகொலை செய்யப்பட்டது தமிழினமும் விடுதலைப் புலிகளும் மட்டுமல்ல, 1970 ஆண்டுக்குப் பின்பு தமிழ் மக்களினதும் , தமிழ் இளைஞர்கள் அனைவரது கனவான தனித்தமிழ் ஈழ நாட்டின் உதயமும் தான்.
தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் பேரவலத்துக்கு பின்பும், உருவாகிய புதிய தமிழ் தலைமைகள் எப்படி நடந்து கொண்டன. இன்றுவரை தமிழர்களை ஏமாற்றி பணம் பதவிகளுக்காக தமிழர்களை ஏமாற்றி என்னென்ன வேலைகள் செய்கிறார்கள். இனப்படுகொலை செய்த சிங்கள அரசை விட இவர்கள் கொடியவர்கள்.முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பின்பு ஒற்றுமை பட வேண்டிய அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் பதவி பணத்திற்காக புதிது புதிதாக பிரிந்து நின்று கட்சிகள் அமைப்புகள் என தமிழ் மக்கள் ஒற்றுமையை சிதைத்து மிச்சம் மீதி இருக்கும் தமிழர்களை சிங்கள இனத் தலைவர்கள் இடம் அடிமைப் படுத்தி விட்டார்கள்.
இந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் சரி,தமிழ் மக்கள் உண்மையை அறிந்து உண்மையை உணர்ந்து இந்த துரோக தலைவர்களை தூக்கி எறிந்து தமிழ் மக்களுக்கான புதிய தலைமையை உருவாக்க முன்வர வேண்டும். தவறினால்அடுத்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூற தமிழர்களே இருக்க மாட்டார்கள்
No comments:
Post a Comment