பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Thursday, 29 May 2025

இது ஒரு பழைய பதிவு

  வெற்றிசெல்வன்       Thursday, 29 May 2025
2009 ஆண்டு ஆயிரக்கணக்கான தமிழ்பொது பொதுமக்களும் விடுதலை புலி இயக்கமும் இலங்கை சிங்கள அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டு தமிழர் போராட்டங்கள் அடக்கப்பட்டு தமிழர் உரிமைகள் நிலம் சிங்கள அரசாங்கத்தால் முற்று முழுதாக முடக்கப்பட்டது அப்போது விடுதலைப்புலி இயக்கத்தின் பெருந்தொகையான கோடிக்கணக்கான பணம் சொத்துக்கள் கப்பல்கள் உட்பட உலகின் கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் முக்கிய பொறுப்பாளரான கேபி என்று அழைக்கப்படும் பத்மநாபான் இலங்கை ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபாய் அவர்களிடம் ரகசிய உடன்பாடு செய்து இலங்கை தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய விடுதலைப் புலிகளின் சொத்துக்களை ராஜபக்சே குடும்பத்துக்கு அன்பளிப்பு செய்து இன்று இலங்கை அரசின் விருந்தாளியாக இலங்கையில் இருக்கிரார். விடுதலைப் புலிகளின் உலகின் மேற்குப் பகுதி முக்கியஸ்தர் ருத்ரகுமாரன் விடுதலைப்புலிகளின் கோடி கோடியான பணத்துடன் தான் இருக்கும் அமெரிக்காவில் நாடு கடந்த தமிழ் ஈழநாட்டின் பிரதமராக தன்னை பிரகனப்படுத்தி கொண்டார்.நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் அமெரிக்காவின்  சொகுசாக இருந்து கொண்டு , உலக நாடுகளிலும் பிரச்சாரம் செய்து தனித்தமிழ் ஈழத்தை பெற்றுக் கொடுப்போம் என்று வெளிநாடுகளில் முழக்கம் செய்கிறார்கள்
இதைவிட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பல நாடுகளில் தனது அமைச்சரவையை ஏற்படுத்தி தனது புகழ் பாட வைத்துள்ளார். ஒவ்வொரு நாட்டிலும் காலத்துக்கு காலம் பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்தி அவர் Skype மூலம் வீடியோ சந்திப்பு நடத்துவர். நானும் பார்த்துள்ளேன்.
2009 சண்டையில் கை கால் இழந்த போராளிகள் பொதுமக்களுக்கு இவர்கள் என்ன உதவிகள் செய்துள்ளார்கள். உண்மையான மக்களுக்கு கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான விடுதலைப்புலிகள் பணம் இவர்கள் கைகளில் உள்ளது. 2009 தமிழர் அழிப்புக்கு காரணமான உலக நாடுகள் இனி வந்து தமிழருக்கு உரிமைகள் பெற்றுக் கொடுக்குமா நாடு பெற்றுக் கொடுக்குமா.
அந்த நாடுகளுக்கு இன்று இலங்கையில் தமிழர் இருக்கும் நிலைமை தெரியாதா. இந்த நாடு கடந்த தமிழீழஅரசாங்கம் தான் உலக நாடுகளுக்கு தமிழர் பிரச்சினை பற்றி விரிவாக எடுத்துக் கூறுகிறார்கள் என்று வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களை ஏமாற்றி பணமும் சேகரிக்கிறார்கள்.
நாடு கடந்த தமிழ் ஈழஅரசாங்கத்தின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு கனடா மற்றும் பல நாடுகளிலுமஇருக்கும் நாடு கடந்த தமிழ் ஈழ பிரதிநிதிகள் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று வருவார்கள். கடந்த வருடம் இதைப்பற்றி  ஒரு பதிவு போட்டிருந்தேன்.அதை திரும்பவும் கடந்த வாரம் போட்டிருந்தேன்.
இப்போதும் சில செய்திகள் வந்துள்ளன. புளொட் இயக்கத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிற்சி எடுத்த ஒரு நண்பர் தற்போது கனடாவில் மிக வசதியாக வாழ்ந்து கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருப்பதாக கூறிக்கொண்டு அண்மையில் கூட இந்தியா வந்து சென்னையில் ஆடம்பர ஹோட்டல்களில் தங்கி கொண்டுதான் இந்திய அரசாங்கத்துக்கு தமிழர் பிரச்சினை பற்றி விரிவாக கூறி இலங்கை தமிழருக்கு ஆதரவான உதவியை பெற முயற்சி செய்வதாக கூறி தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்கள் பத்திரிகையாளர்கள் போன்றவர்களிடம் ஆடம்பரமாக விருந்து கொடுத்து போட்டோக்களை எடுத்து கொண்டு தன்னை பிரபலிய படுத்திக் கொண்டு இருக்கிறார்.
ஆனால் இவர் இங்கு தன்னை பிரபலியப்படுத்த செலவழிக்கும் பல லட்சக்கணக்கான ரூபாய்களை இலங்கையில் ஒரு நாள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து உதவி செய்தால் என்ன.
இவரை விட இந்திய அரசாங்கத்துக்கு இலங்கையில் மூலைக்கு மூலை நடக்கும் செய்திகள் உடனடியாக தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு இலங்கையில் இந்திய அரசாங்கத்தின் செயல்பாடு உள்ளது. இந்தியா மட்டுமல்ல மற்ற நாடுகளுக்கும் இலங்கையில் நடக்கும் எல்லா விஷயங்களும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதிகள் உள்ளன.
இப்படியான நிலையில் நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் உறுப்பினர்கள் அதைவிட வெளிநாடுகளில் வசிக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் என்று கூறிக் கொள்ளும் பலர் தாங்கள் தான் உலக நாடுகளுக்கு இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி புரிய வைப்பதாக கூறி தமிழர்களே ஏமாற்றி வருகிறார்கள்.
2009 க்கு பின்பு இவர்கள் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் இருப்பதே அறிய ஆவலாக இருக்கிறேன். வெளிநாட்டு பிரச்சாரங்கள் எல்லாம் வேண்டாம். இலங்கையில் இன்று இருக்கும் அதாவது உயிருடன் இருக்கும் தமிழ் மக்களுக்கு கோடி கோடியாக விடுதலைப் புலிகள் பணத்தை வைத்திருக்கும் இவர்கள் என்ன செய்தார்கள்.
லட்சக்கணக்கான பணத்தை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்களுக்கு செலவழித்து போட்டு பின்பு இவர்களால் தனக்கு பிரயோஜனம் இல்லை என்றால் எல்லா தமிழ் நாட்டு மக்களையும் பற்றி கீழ்த்தரமாக எழுதுவார்கள்.
தமிழ்நாட்டு தலைவர்களும் பத்திரிகையாளர்களும் தயவுசெய்து வெளிநாட்டில் இருந்து வந்து இன்று தனித்தமிழ் ஈழம் பேசுபவர்களை ஆதரிக்க வேண்டாம். நாளை அவர்கள் உங்களையும் நீங்கள் ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டுவார்கள்.
logoblog

Thanks for reading இது ஒரு பழைய பதிவு

Previous
« Prev Post

No comments:

Post a Comment