கடந்த 40 ஆண்டுகளாக விடுதலைப் போராளிகள் என்று அப்பாவி தமிழர்களையும், அரசுக்கு எதிரான சிங்கள நல்ல பத்திரிகையாளர்கள் மற்றும் அரசை தட்டி கேட்டசில சிங்கள தலைவர்களையும் கைது செய்து ஜெயிலில் போட்டு பல வருடங்கள் சிறையில் சித்திரவதை செய்து கொலையும் செய்தபோது, வராத கோபமும் ஆத்திரமும் தமிழ் தலைவர்களுக்கும் கடந்த கால கொலைகார சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் உலக நாடுகளுக்கும் இப்போது மட்டும் ஏன் ரணில் விக்கிரம சிங்கே அவர்களை சிறையில் அடைத்த போது ஏன் கோபம் பொங்கிக் கொண்டு வருகிறது.
ரணில் அவ்வளவு உத்தமரா? ஜெயவர்த்தனா அதாவது ரணிலின் மாமனார் தமிழர்களை திட்டமிட்டு கொலை செய்த போது ரணில் எதிர்ப்பு குரல் கொடுத்தாரா?
ஜனாதிபதியாக இருந்தபோது சிறையில் நீண்ட காலம் இருந்த தமிழ் கைதிகளை விடுதலை எதுவும் செய்தாரா?
சிங்கள அரசாங்கங்கள் போடும் நாடகங்களில் இதுவும் ஒன்று. நாளை நீதிமன்றம் இவர் குற்றமற்றவர் என்று விடுதலை கூட செய்து விடும். உண்மையில் ஊழல் நடந்து இவர் சிறைவாசம் அனுபவித்தால் இலங்கையில் ஒரு புதிய மாற்றம் ஏற்படும்.
ரணில் விக்ரம சிங்கேக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வரும் தமிழ் தலைவர்களை பார்த்தால் அவர் மூலம் பதவியும் பணமும் பெற்று சொகுசான வாழ்க்கை வாழ்ந்த தமிழ் தலைவர்கள் தான் கூடுதலாக கோபப்படுகிறார்கள்.
அது உண்மையில் கோபம் அல்ல நாளைக்கு தங்களையும் ஊழல் குற்றச்சாட்டுகளில் கைது செய்து விடுவார்களோ என்ற பயம் தான்.
No comments:
Post a Comment