தமிழ்விடுதலை இயக்கங்கள் ஆரம்பித்த காலங்களில் அங்கிருந்த மக்கள் நடுத்தர பொருளாதார நிலையும அதற்கு கீழான பொருளாதார நிலையிலும் தான் இருந்தார்கள். இப்படியான குடும்பங்களில் இருந்து தான் பல இளைஞர்கள் சிறுவர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு எல்லா இயக்கத்துக்கும் வந்தார்கள். வசதி படைத்த குடும்பங்களில் இருந்த பிள்ளைகள் படிப்பிலும் பல்கலைக்கழகத்துக்கு தேர்வாகி போவதிலும் அல்லது வெளிநாட்டுக்கு போவதிலும் மட்டுமே கவனம் செலுத்தினார்கள்.
இயக்கங்களுக்கு இந்த பிள்ளைகள் வரும்போது ஒரு சாரம் ஒரு டவல் ஒரு சேட்டோடு மட்டுமே வந்தார்கள் பலர் வெறும்கையோடு வந்தார்கள்.
போராட்டக் களங்களில் அதுவும் இந்தியாவில் பயிற்சி எடுத்தவர்கள் சாப்பிடுவதற்கு சாப்பாடு கொடுக்கவே இயக்கத் தலைமைகள் கஷ்டப்பட்ட வரலாறு உண்டு.
இந்தியா அமைதி ஒப்பந்தத்திற்கு பின்பு இலங்கைப் போன இயக்கங்களின் சாதாரண போராளிகள் சரியான கஷ்டத்தில் இருக்கும்போதும் அவர்கள் குடும்பமும் கஷ்டத்தில் இருக்கும் போது, மேல்மட்ட தலைமைகள் மட்டும் எப்படி கோடி கணக்கான ரூபாய்கள் கொடுத்து கார் வாங்கவும் பல உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் போகவும், இந்தியாவில் பல தொழில்கள் செய்து இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் செய்யவும் இவர்களுக்கு அப்படி பணம் வந்தது
அதே நேரம் இயக்கங்களின் சாதாரண தொண்டர்கள் இலங்கையில் மிகவும் கஷ்டத்திலும் வறுமையிலும் இருக்கும்போதும், இந்த தமிழ் விடுதலை இயக்கங்கள் இந்தியாவில் கவனிக்காமல் விட்டு விட்டுப் போன பல இயக்கங்களின் குடும்பங்களும் பல போராளிகளும் அகதி முகாம்களிலும் தெருவிலும் வாழ்ந்து வருகையில், இவர்கள் இருந்தஇயக்கங்களின் தற்போதைய தலைவர்களும் முன்னணி தலைவர்களும் கோடிக்கணக்கான பணத்தை வைத்துக்கொண்டு தங்கள் குடும்பங்களை வெளிநாட்டில் குடியமர்த்தி பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க வைத்து வருகிறார்கள்.
இவர்களுக்கு இவ்வளவு பணம்எப்படி வந்தது. சில பேர் தாங்கள் பரம்பரை பணக்காரர்கள் என்றும், சிலர் தங்கள் உறவினர்கள் தங்களுக்கு கோடி க்கணக்கான பணம் அனுப்பி தங்களுக்கு உதவி செய்வதாகவும் கூறுகிறார்கள் உண்மையா.
இயக்கங்களில் இருந்த உண்மையான போராளிகள் செருப்பு வாங்கக்கூட காசு இல்லாமல் இருக்கும் போது முன்னணித் தலைவர்கள் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்து, பெரிய பெரிய ஹோட்டல்களில் தங்கி தங்கள் செல்வாக்கே காட்டுகிறார்கள். இவர்கள் செலவழிக்கும் பணம் உண்மையில் இவர்களால் கஷ்டப்பட்டு உழைத்த பணமா? இப்ப இருக்கும் தலைவர்களில் முன்னணி தலைவர்களில் யார் வேலை செய்து கஷ்டப்பட்டு கோடிக்கணக்கான பணம் சேர்த்தார்கள் என்று மக்கள் கூறுவார்களா?
இதுவரை மக்கள் இவர்களுக்கு எப்படி இவ்வளவு பணம் இருக்கிறது என்று ஏன் சிந்திக்கவில்லை.
மக்கள் சிந்திக்க வேண்டும் அப்போது பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்
No comments:
Post a Comment