முகநூலில் உண்மைக்கு புறம்பான பதிவுகள்
இன்று முகநூலில் ஒரு பதிவு அதை பலர் தங்கள் முகநூகளிலும் பதிவாக போட்டுள்ளார்கள். பதிவின் பெயர் பிரபாகரனின் தனி மனித ஒழுக்கம்.
அதற்கு ஆதாரமாக ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற புத்தகத்திற்கு நன்றி கூறியுள்ளார்.
இந்தப் பதிவில் விடுதலை புலி இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, ஆரம்பகால ஒன்றுபட்ட விடுதலை புலி இயக்கத்திஇல் இருந்த முதல் பெண் ஈழ போராளியான ஊர்மிளா தேவி பற்றி மிகவும் தரக்குறைவாக பதிவு செய்துள்ளார் கள்.
இந்த பதிவை போட்டவர்களுக்கு ஊர்மிளாதேவி பற்றி ஒன்றும் தெரியவில்லை. பிரபாகரனும் உமா மகேஸ்வரன் ஊர்மிளா தேவியை வைத்திருக்க சண்டை போட்டதாகவும் அது அதனால் தான் பாண்டி பஜார் சண்டே நடந்ததாகவும் எழுதி மகிழ்கிறார்கள்.
பிரபாகரன் ஒரு காலமும் ஊர்மிளா தேவி உடன் கண்ணிய குறைவாகவோ. தவறாகவோ நடந்ததில்லை என்று அப்போது அவர்களிடம் இருந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உமா மகேஸ்வரன் தலைவராக இருப்பது பிடிக்காமல் அன்டன் பாலா சிங்கம் அவர்களும், வாத்தி நாகராசா அவர்களும் ஊர்மிளா தேவிக்கும் உமா மகேஸ்வரனுக்கும் தொடர்பு இருப்பதாக கதைக்கட்டி அதை பிரபாகரனிடம் சொல்லி உமாமாமேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார்கள்.
பிற்காலத்தில் வாத்தி நாகராசா நாங்கள் கதைக்கட்டி விட்டது பற்றி சொல்லி கவலைப்பட்டார்.
ஒரு புனிதமான பெண் போராளியை பற்றி, விடுதலைப் போராட்ட வரலாறு தெரியாத கீழ்த்தரமாக எழுதுவது மிகவும் வருந்தத்தக்கது.
அவர்களில் ஒருவர் போட்ட பதிவுக்கு நான் உண்மையிலே விளக்கி கருத்து சொல்ல அவர் தொடர்ந்து மிகவும் தரக்குறைவாக தொடர்ந்து கருத்து சொல்கிறார் .. அவரின் கருத்துப்படி பெண் போராளிகள் என்பவர்கள் தலைவர்களின் படுக்கை அறையை பகிர்ந்து கொள்பவர்கள் என்று.
பிரபாகரனை விமர்சித்து இருப்பது வேறு ஆனால் விடுதலை இயக்கத்தில் இருந்த பெண் போராளிகளை விமர்சித்து தரை குறைவாக பலர் கருத்து சொல்வது மிகவும் வருந்த தக்க செயல்.
இப்படியான கருத்துக்களை கண்டிக்கும்போது என்னையும் மிகவும் தரக்குறைவாக கூறி கருத்து சொல்கிறார்கள். இன்று பல பேரை நட்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தடை செய்து விட்டேன்.
தயவுசெய்து பிரபாகரனின் தவறுகளை சுட்டி காட்டும் பதிவுகளில் உண்மையான போராளிகள் பற்றி தரைக்குறைவாக பதிவுகள் போடும்போது தயவுசெய்து அவற்றை வரவேற்க வேண்டாம்.
No comments:
Post a Comment