மிக நீண்ட நாட்களாக சொல்ல வேண்டும் என்று இருந்த எனது ஒரு கருத்தை இப்போது பதிவிடுவதில் தவறில்லை என நினைக்கிறேன்.
இப்போது வெளிநாடுகளிலும் இலங்கையிலும் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பல இலங்கைத் தமிழர்கள், இப்போது இலங்கையில் நடக்கும் தமிழ் சிங்கள அரசியல் நிலைமைகள் தமிழ அரசியல் கட்சிகள் இலங்கை பொருளாதார நிலைமைகள் தமிழர் பிரதேசங்களில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நடக்கும் போதைப்பொருள் மற்றும் பல சமூக விரோத செயல்களை பற்றி கருத்து பதிவுகள் இடுவதை விட, தங்களுக்கு சம்பந்தமில்லாத இந்திய தமிழ்நாட்டு அரசியலே ஆராய்ந்து இந்திய தமிழ்நாட்டுக் கட்சிகளைப் பற்றி விமர்சனம் செய்வது தேவையற்றது என்பது என் கருத்து. நாங்கள் யாரும் அவர்களுக்கு வாக்களிக்க போவதில்லை. தங்கள் தங்களுக்கு தேவையான கட்சிகளே தேர்ந்தெடுப்பது தமிழ்நாட்டில் இந்திய மக்களின் உரிமை, அந்த மக்கள் தேர்ந்தெடுத்த கட்சிகளையும் தலைவர்களையும் விமர்சிப்பது எங்களுக்கு தேவையற்ற செயல். அப்படி விமர்சிப்பது அவர்களை தேர்ந்தெடுத்த மக்களே அசிங்கப்படுத்துவதாக அமையும். வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை மக்கள் அந்தந்த நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் ஒரு காலமும் விமர்சித்து அவர்களைப் பற்றிய உண்மைகளை எழுதுவதில்லை.
ஆனா இலங்கை தமிழர்கள் எல்லோரும் தமிழ்நாட்டிலும் இந்தியாவையும் பற்றி தங்களுக்கு தெரியாவிட்டாலும் எழுதி தள்ளி விடுகிறார்கள்.
இது எப்படி இருக்கிறது என்றால், இலங்கையில் 2009 முன்பும் இப்போதும் கூட இலங்கையில் நடக்கும் உண்மையான நிகழ்வுகளை அறியாமல் அறிந்தாலும் வெளி காட்டிக் கொள்ளாமல், இலங்கையையும், மற்ற போராளி இயக்கங்களையும், விடுதலைப் புலிகள் இயக்கம் சொல்வதை மட்டும் கேட்டு மற்ற இயக்கங்களை துரோகிகள் என்றும் தமிழர் துரோகிகள் என்றும் பேசியும் எழுதி வருவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ அதை போல். தமிழீழ விடுதலைப் புலிகள் எது செய்தாலும் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை பிடித்து சித்திரவதை செய்தாலும், சிங்கள அரசோடு சேர்ந்து மற்ற இயக்கங்களை அழித்தாலும் அவர்களை ஆதரித்த தமிழ்நாட்டு தலைவர்கள் விடுதலைப் புலிகள் செய்ததுதான் சரி என்று வாதிட்டார்கள்.
அன்று அவர்கள் அதாவது தமிழ்நாட்டுத் தலைவர்கள் விடுதலைப் புலிகளின் தவறுகளை சுட்டிக் காட்டி இருந்தால் விடுதலைப்புலிகள் ஓரளவு சரி, திருந்த வாய்ப்பு இருந்திருக்கும். வைகோ நெடுமாறன், ராமதாஸ் போன்றவர்கள் அதை செய்திருக்க வேண்டும் அவர்கள் செய்யவில்லை. அது எமக்கு பெரிய பாதிப்பு என்பதை நாங்களும் உணர்ந்துள்ளோம்.
டக்ளஸ் தேவானந்தாவை துரோகி என்று கூறி பல கொலை முயற்சிகள் தொடர்ந்தும் தேவானந்தா இன்று வரை மக்களால் தேர்வு செய்யப்பட்டு தமிழ் மக்களுக்கு தன்னாலும் தனது பதவியை வைத்தும் பல உதவிகள் செய்து வருகிறார். மறுக்க முடியாது. அவரே துரோகி என்றும் ஒட்டுக்குழு என்றும் கூறியவர்களே வெளிநாடுகளில் இருந்து வந்து அவரை சந்திப்பதும் உதவிகள் பெறுவதும் ரகசியமாகவே இருக்கிறது.
இலங்கை தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட டக்லஸ் தேவானந்தாவை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், மக்கள் துரோகி என்று இன்றும் பேசி எழுதி வருவது கண்டிக்கத்தக்கது. ஈழப் பிரச்சனையில் அவர்கள் இனி ஈடுபடுவது தவறு. இது டக்ளஸ் தேவானந்தாவை தேர்ந்தெடுத்த தமிழ் மக்களே அவமதிப்பது போல் ஆகும்.
அதுபோல் இலங்கை தமிழர்களும் இந்திய தமிழ்நாடு அரசியலில் கேவலமான முறையில் விமர்சனம் செய்வதும், இந்திய தமிழ்நாட்டு தலைவர்கள் இனிமேல் இலங்கை தமிழர் பிரச்சனையில் கருத்துச் சொல்லி போராடுவதும் தேவையற்ற செயல் என நான் கருதுகிறேன். வெளிநாடுகளில் வசதியாக வாழும் இலங்கைத் தமிழர்கள் ஏதாவது கருத்துகள் கூற வேண்டுமாயின் தாங்கள் இருக்கும் நாடுகளில் உள்ள அரசியல் சமூக நிலைமைகளை பற்றி கருத்துகள் கூறுங்கள்.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் தமிழ் அகதிகள் மிகவும் கஷ்டமான நிலைமைகளில் இருக்கிறோம் என்பதை வெளிநாட்டுகளில் இருந்து கருத்து சொல்லும் இலங்கை தமிழர்கள் மறந்து விட்டனர். இங்கு அகதியாக இருக்கும் இலங்கை அகதிகள் மிகவும் கஷ்டமாக வறிய நிலைமைகளில் இருந்தாலும், அவர்களை விட இங்குள்ள சொந்த இடத்தில் பல தமிழ்நாட்டு மக்கள் மிகவும் வறிய நிலைமைகளில் இருப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்திய மத்திய அரசாங்கம் ஒரு முடிவு எடுக்கும் வரை இங்குள்ள இலங்கை தமிழ் மக்கள் நிலை இதுதான். இன்று ஓரளவு இலங்கை தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்து வரும் தமிழ்நாட்டு அரசை கேவலப்படுத்தி கொச்சைப்படுத்தி எழுதி இலங்கை தமிழ் அகதிகள் மேல் வெறுப்பை வளர்க்கும் வேலைகளே வெளிநாட்டில் சொசாகவாழும் இலங்கைத் தமிழர்கள் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்
No comments:
Post a Comment