எனது எனது அனைத்து முகநூல் நண்பர்களுக்கும்
இன்று எனது முகநூலில் தமிழ் விடுதலை இயக்க தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலம் நாதன் பற்றிய ஒரு ஒலிபதிவு போட்டிருந்தேன். பல நண்பர்கள் இந்த ஒலி ப்பதிவு வீடியோவை எனக்கு உள்பெட்டியில் போட்டு பல கருத்துக்களை கூறினார்கள். அதில் நீங்களும் அவரின் சமகாலத்து போராட்ட இயக்கத்தின் போராளியாக இருந்துள்ளீர்கள்., அதனால் நீங்கள் உங்கள் கருத்தை பகிரங்கமாக கூற வேண்டும் என்று கூறினார்கள்.
அதனால் எனது முகநூலில் பதிவாக போட்டு அதில் வரும் கருத்துக்களை பார்த்தால், தனிப்பட்ட முறையில் செல்வத்தை தாக்குவதாகவும், பல பேர் அது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை அதை முகநூலில் போட்டு அவமானப்படுத்துவது தவறு என்றும், பலர் இது ஒன்றும் பெரிய குற்றமில்லை என்றால் கூறுகிறார்கள். சில சிலர் மிரட்டல் மொழியிலும் பேசினார்கள். சில நெருங்கிய நண்பர்கள் பதிவை எடுத்து விடுங்கள் செல்வம் உங்களையும் கொலை செய்து விடுவார் என்று உண்மையான அக்கறையோடு கூறினார்கள்.
கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தால் விடுதலை இயக்கங்கள் ஆரம்பித்த ஆரம்ப காலங்களில் அதாவது 1983 ஆம் ஆண்டுக்குப் பின்பு இயக்கங்கள் தங்கள் வளர்ச்சி காட்ட பசிக்காக உணவு திருடியவர்கள் கோழி திருடியவர்கள் சிறு சிறு களவுகள் செய்தவர்கள் பெண்களை கேலிகள் செய்தவர்கள் இப்படி சிறு சிறு குற்றங்கள் செய்தவர்களை வயது வித்தியாசம் பார்க்காமல் சுட்டு கொலை செய்த வரலாறு தான் எல்லா இயக்கத்தின் வரலாறும் குறிப்பாக, LTTE ,PLOTE ,EPRLF, TELO போன்ற இயக்கங்கள் தங்கள் விடுதலை வீர விளையாட்டை அப்பாவி தமிழ் மக்களின் மேல் சுட்டுப் பழகி படிப்படியாக வளர்ந்து வந்தார்கள். இப்பொழுது முகநூலில் இருக்கும் 90 வீதமானவர்களுக்கு ஆரம்பகால விடுதலை இயக்க உண்மையான வரலாறுகள் தெரியாது. இப்பொழுது விளம்பரத்துக்காக வியாபாரத்துக்காக யூடியூப் மற்றும் எழுத்துக்கள் புத்தகங்கள் மூலம் செய்திகளே பதிவுகளை பார்த்துவிட்டு அதை தான் உண்மை என்று நினைத்துக் கொண்டு அதையே குறிப்புகளாக கொண்டு பேசிக் கொண்டும் பதிவுகளாக போட்டுக் கொண்டும் வருகிறார்கள்.
இந்த விடுதலை இயக்கங்கள் சமூக விரோத செயல்கள் என்று பலரை கொலை செய்த செயல்கள் மக்கள் மறந்திருப்பார்கள் விடுதலை இயக்கங்களில் அன்று இருந்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அந்த சமூக விரோத செயல்களை இயக்கங்கள் தங்கள் கைகளில் ஆயுதங்களை வைத்துக்கொண்டு பகிரங்கமாக விடுதலை என்ற பெயரில் செய்தார்கள். தனிமனித ஒழுக்கத்துக்கு ஈ பி ஆர் எல் எப் தலைவர் பத்மநாபா மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் யாரும் குறை சொல்ல முடியாது ஆனால் விடுதலைப்புலி இயக்கத் தலைவர் பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்த பெண்களை கடத்திக் கொண்டு ,வந்து ஒரு பெண்ணை திருமணம் செய்தது மட்டும் ஒரு சிறு கரும்புள்ளியாக இன்று வரை எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மற்ற இயக்கத் தலைவர்கள் பெண்கள் விஷயத்தில் பலவீனமானவர்களாகவும் கிட்டத்தட்ட கொள்ளை கூட்டத் தலைவர்களைப் போல நடந்து கொண்டார்கள். சிங்கள ராணுவத்துடன் சண்டை பிடிப்பதை விட சொந்த இயக்க தோழர்களையும் மற்ற மற்ற எக்கத் தோழர்களையும் கொலை செய்து தமிழ் விடுதலைப் போராட்ட நடத்தியவர்கள் நாங்கள் எல்லோரும்.
1989 ஆம் ஆண்டு எங்கள் இயக்க தலைவர் பிளாட் உமா மகேஸ்வரன் விட்ட தவறுகளுக்காக எமது இயக்கத்தின் முன்னணி தோழர்கள் சித்தார்த்தன் மாணிக்கதாசன் தலைமையில் அவருக்கு மரண தண்டனை வழங்கினோம். இதற்கு முடிவெடுக்கும் முன்பு சித்தார்த்தன் அன்றிருந்த முக்கியமானவர்களிடம் உமாமகேஸ்வரன் பற்றிய பல உண்மைகளை கூறி எல்லோரின் அனுமதியைப் பெற்றார் குறிப்பாக தமிழர்களின் விரோதி இலங்கை பாதுகாப்பு மந்திரி லலித் அதுலமுதலி உமா மகேஸ்வரன் நெருங்கிய நட்பு பற்றியும் அதை வைத்து 1985 ஆம் ஆண்டு முதல் உமா மகேஸ்வரன் எமது போராட்டத்தை இலங்கை அரசுக்கு காட்டி கொடுத்தது பற்றியும், அவர் செய்த கொலைகள் கொள்ளைகள், மற்றும் பல சமூக விரோத செயல்களை ஆதாரத்துடன் எங்களிடம் சித்தார்த்தன் கூறினார். அவரின் மரண தண்டனைக்கு பிறகு இயக்கத்தை கடந்த கால தவறுகளை எல்லாம் தவிர்த்து நல்ல முறையில் இயக்கத்தை நாங்கள் நடத்துவோம் என்று உறுதிமொழி கூறினார்கள் மாணிக்கம் தாசன், சித்தார்த்தன் இருவரும். ஆனால் பதவிகள் கிடைத்த பின்பு ஆனால் பதவியில் கிடைத்த பின்பு பண ஆசை பதவி ஆசை பெண்ணாசை அடிமைப்பட்டு உமா மகேஸ்வரன் மேல் கூறிய குற்றச்சாட்டுகளுக்கும் ஆயிரம் மடங்கு மோசமாக நடந்து கொண்டார்கள். அதோடு அண்டு மரண தண்டனை கொடுக்க பொறுப்பெடுத்துக் கொண்ட தோழர்களை கொலை செய்து தங்கள் சம்பந்தப்பட்ட விபரங்கள் வெளியில் வராமல் இருக்க பல முயற்சிகள் செய்தார்கள்.
இந்த இயக்கங்கள் எல்லாம் இலங்கை அரசோடும் இந்திய அமைதிப்படையோடு சேர்ந்து சொந்ததமிழர் இன மக்களையே கொலைகளும் செய்தார்கள். ஒருத்தரை ஒருத்தர் கொலை செய்வதில் விடுதலைப் புலிகள் இயக்கமும் இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்து தமிழர்களை கொலை செய்த வரலாறு உண்மை.
2009 ஆண்டு லட்சக்கணக்கான மக்களோடு சேர்ந்து விடுதலை புலிகள் இயக்கமும் அழிந்து போனது. அதன் பிரகாவது ஆயுதம் தூக்கிய இயக்கங்கள் வெள்ளை வேட்டி சட்டை போட்டுக் கொண்டு அரசியல்வாதி போல மாறினார்கள். மாறியும் மக்களுக்கு நன்மை செய்யவில்லை பதவி பணத்துக்காக இன்று வரை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று குறிப்பாக வடபகுதியில் போதை மருந்துகள் பாதிப்பு அதிகம். பல்கலைக்கழகங்கள் முதல் கல்லூரிகள் வரை தனிமனித ஒழுக்கம் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டு போகின்றன. வாள் வெட்டு குழுக்கள் இன்னும் பல சமூக விரோத செயல்கள் அதிகரித்துக் கொண்டு போகின்றன என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதேநேரம் வெளிநாட்டில் இருந்து கொண்டு பெரும் பணத்துடன் வரும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தங்கள் பணத்தை கொண்டு பெண்களையும் அடியாட்களையும் வைத்துக்கொண்டு தாங்களும் தமிழ் மக்களுக்கு தலைவர்கள் போல சண்டியர்கள் போல் இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இவர்களை தட்டிக் கேக்க வேண்டிய பொறுப்பு முன்னாள் ஆயுத இயக்க தலைவர்களுக்கு இருக்கிறது. ஆனால் அவர்களும் பதவிகளுக்கும் பொறுப்புகளும் பெறுவதற்காக சகலவிதமான சமூக விரோத செயல்களும் செய்து கொண்டு, பாராளுமன்ற உறுப்பினர் போன்ற தமிழர் பிரதிநிதிகள் பதவிகளை வாங்கிக் கொண்டு, தொடர்ந்து தமிழ் மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டியவர்கள் இறங்கமாகவே மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்கள். அந்த காலத்தில் அதாவது 1983 க்கு முன்பு இருந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் முன் கௌரவமாக நடந்து கொண்டார்கள். சிலர் குடிப்பது உண்டு. ஆனால் அவர்கள் யாருக்கும் முன்பு பகிரங்கமாக குடித்தது இல்லை.
ரெலோ இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஒரு தமிழ் மக்களின் பிரதிநிதி. தமிழ் மக்களுக்கு எதிரான சட்டவிராத செயல்களை தட்டிக்கேட்டு தமிழ் மக்களுக்கு பாதுகாப்பாக நிற்க வேண்டியவர் இப்படி தெரு சண்டியன் போல அவரின் பெண்களுக்கு எதிரான பாலியல் செயல்கள் பகிரங்கமாக வெளி வருவது பார்த்துக் கொண்டிருக்க கூடாதுமுன்னாள் போராளிகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். பல வருடங்களுக்கு முன்னால் செல்வம் அடைக்கல நாதனே படங்கள் நிர்வாண கோலத்தில் எல்லாம் பகிரங்கமாக வெளிவந்தன. சிங்கப்பூரில் இருந்து ஒரு திருச்சியை சேர்ந்தபெண் செல்வம் தன்னை ஏமாற்றி விட்டதாகா முக நூல்களில் பதிவுகள் போட்டு வந்தார்.
முகநூல் போராளிகள் கூறுவது போல் செல்வம் அடைக்கலநாதன் ஒரு தனி மனிதராக இருந்தால் கண்டுகொள்ளாமல் போகலாம். அந்த காலத்தில் ஆயுதம் தூக்கி தமிழ் மக்களை காக்கவென்று புறப்பட்ட ஒரு இயக்கத்தின் தலைவர் அதோடு இப்போது ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.
தயவுசெய்து தமிழ் மக்கள் வருங்காலத்தில் தங்கள் தலைவர்களை சுய ஒழுக்கம் உள்ளவர்களாக தெரிவு செய்யுங்கள். தகுதி தரம் ஒழுக்கம் கெட்ட தலைவர்கள் தமிழர்களுக்காக வருவது சிங்கள அரசாங்கத்துக்கு தமிழ் மக்களை அடக்கி எடுக்க மிக வசதியாக வாய்ப்பாகிவிடும். இவர்களைப் பற்றிய ரகசியங்களை கையில் வைத்துக்கொண்டு இவர்களைக் கொண்டே தமிழ் மக்களுக்கு உரிய உரிமைகள் மற்றும் தமிழ் பிரதேசங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க சிங்கள அரசுகள் யாராக இருந்தாலும் அதைத்தான் செய்வார்கள்.
தமிழ் பகுதிகளில் நடக்கும் அனைத்து விரோத செயல்களும் அரசாங்கம் தடுக்க முயற்சி செய்யாது. காரணம் இன்னும் இருக்கும் சில தமிழ் இன பற்றுக் கொண்டவர்களை அழியும் வரை இந்த நிகழ்ச்சி நடக்கும். கோடாலி காம்பை கொண்டு மரங்களை வெட்டுவது போல் தமிழர்களை கொண்டே தமிழர்களை அழிப்பது.
எனது சமகால போராளி இயக்கத் தலைவரான செல்வம் அடைக்கல நாதன் மிக சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். அவரைப் பற்றி வரும் செய்திகள் பொய்யாக இருந்தால் அவர் பகிரங்கமாக செய்தியாளர்களை சந்தித்து உண்மையிலேயே விளக்கி தான் ஒரு சிறந்த பாராளுமன்ற உறுப்பின ர் சிறந்த தமிழர்களின் தலைவர்கள் ஒருவர் என்பதை நிரூபிப்பது முக்கியம்.
No comments:
Post a Comment