அன்றிலிருந்து இன்று வரை வெளிநாடுகளுக்குப் போய் வரும் சிங்கள தலைவர்களுக்கு எதிராக, போராட்டங்களும் கருப்புக்கொடிகளும் காட்டி தங்கள் அதிதீவிர தமிழ் தேசியத்தையும் வீரத்தையும் காட்டி, முகநூல் களில் தங்கள் வீரத்தை பறைசாற்றுவார்கள்.
இப்படி வெளிநாடுகள் வரும் சிங்கள தலைவர்களுக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் சிங்கள மக்கள் மத்தியில் சிங்களத் தலைவர்களுக்கு பெருமளவு ஆதரவு தான் கிடைக்கும். அதோடு அதோடு இலங்கையில் இன்று இருக்கும் தமிழர்களுக்கு எதிரான மனப்போக்கையும் சிங்கள தலைவர்களுக்கு ஏற்படும். இதைத்தான் வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தொடர்ந்து சிங்கள தலைவர்கள் தமிழர்களுக்கு எதிராக இருப்பதே வெளிநாடுகளில் வசதியாக வாழும் தமிழர்களுக்கு அனுகூலம் என தெரிகிறது.
இலங்கையில் இருக்கும் தமிழர்கள் தொடர்ந்து அமைதியாக வாழ எந்த ஒரு உலக நாடுகளும் இந்தியா உட்பட உதவி செய்யாது. சிங்கள தலைவர்களின் மனமாற்றம, சிங்கள மக்களின் மன மாற்றம் தான் ஓரளவு சரி தமிழர்கள் இலங்கையில் அமைதியாக வாழ , வழி வகுக்கும் என்பது தான் உண்மை.
கடந்த பல வருடங்களுக்கு முன்பு மஹிந்தா ராஜபக்ஷ போன்ற சில தலைவர்கள் வெளிநாடுகளுக்குப் போகும் போது வெளி நாடுகளில் இருக்கும் சில தமிழர்களுக்கு முன்பே பணத்தை அனுப்பி தங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தும் படி கேட்டுக் கொண்டதாகவும், இப்படியான போராட்டங்களை சிங்கள மக்கள் மத்தியில் தனக்கு ஆதரவு பெருகும் என்றும் செய்திகள் வந்தன.
இப்போது கூட ஆளும் அரசாங்கம், தமிழர்களுக்கு ஆதரவாக உள்ளது போல் மற்ற சிங்களவ தலைவர்கள் தமிழர்களுக்கு எதிராக தமிழர்களுக்கு எதிராக சிங்கள மத்தியில் பிரச்சாரங்கள் செய்வதால், ஆளுங்கட்சி வெளிநாட்டு தமிழர்கள் தங்களுக்கு எதிராக இருப்பது போல் காட்டிக் கொள்ள இப்படியான ஆர்ப்பாட்டங்களே ஏற்பாடுகள் செய்து கொடுத்திருக்கலாம் என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது உண்மையா
No comments:
Post a Comment