அன்பு நண்பர்களுக்கும் எனது அன்புதோழர்களுக்கும்
அண்மை காலங்களில் எனது முகநூலில் எனது அனுபவங்களைப் பற்றிய ஒரு சிறு தொடரை எழுதி வருகிறேன். இத்தொடர் எழுதுவதற்கு லண்டன் சுரேஷின் வற்புறுத்தலே காரணம். அவனின் தொல்லை பொறுக்க முடியாமல் தான் நான் எழுதத் தொடங்கினேன். ஆரம்பத்தில் அவன் என்னை எழுத கூறியது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் உமாமகேஸ்வரன் மரணதண்டனை பற்றிய உண்மைகளை.அவனுக்கு இதில் நேரடி எந்தஒரு சம்பந்தம் இல்லாவிட்டாலும் ,கொழும்பில் நடந்தஅனைத்து விபரங்களும் அவன் ஒரு நேரடி சாட்சி. அதனால்தான் சுரேஷ் பயம் இல்லாம இலங்கைக்கும் அடிக்கடி போய், எல்லாத் தலைவர்களையும் சந்தித்து வந்தார். பின்பு உமா மகேஸ்வரனின்மரண தண்டனைபற்றிஇப்போதைக்கு எழுத வேண்டாம் என்று தடுத்த வானும் அவனே. காரணம் மரண தண்டனையில் நேரடி சம்பந்தப்பட்ட பெரியவர் அவனிடம் கூறியிருக்கிறார்" வெற்றி எனக்கு எதிராக எழுதத் மாட்டான் என்னை காட்டி கொடுக்க மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.அந்தப் பெரியவருக்கும் எனக்கும் இருந்த நட்பு உடையக் கூடாது என்ற விருப்பத்தின் பேரில் இப்போதைக்கு உண்மைகளைஎழுத வேண்டாம் என்று தடுத்தான்.
உலகம் முழுக்க கொரொனோ நோய் பரவியதையடுத்து எனது நலனில் மிகஅக்கறை கொண்டு சொல்லப்போனால் தினசரி தொலைபேசி மூலம் எனது சுகத்தையும் இன்றைய அரசியலைப் பற்றி யும் கதைப்பான். இந்தியாவில் நோயின் தாக்கம் அதிகரித்த போது, பயந்துபோய் என்னை வீட்டைவிட்டு வெளியில் போய் வர வேண்டாம் என்ற அன்பு கட்டளை விட்டதோடு, எனது மனைவியிடம் அக்கா வெற்றி அண்ணாவை வீட்டைவிட்டு எக்காரணம் கொண்டும் வெளியில் அனுப்ப வேண்டாம் என கூறினார்.
. எனது உடல்நிலை பற்றிய பயத்தில் அவனுக்கு ஒரு பயமும் இருந்தது. அதனால் வெற்றி அன்னை எல்லா உண்மைகளையும் இப்போதே எழுதத் தொடங்குங்கள். அதை நீங்கள் வெளி இடாவிட்டாலும், எழுத்து வடிவில் இருக்க வேண்டும். நீங்கள் எழுதாவிட்டால் உமாமகேஸ்வரன் கொலை பற்றிய உண்மைகள் மறைக்கப்பட்டு விடும். உண்மைகள் மறைந்தால்குற்றம்சாட்டப்பட்ட தோழர்கள் குற்றவாளி களாகவே இருப்பார்கள்.உண்மையில் உமாவின் கொலைக்கு மூல காரணமானவர்கள் பணம் பதவியோடு வாழ்ந்து கொண்டும் சிலர் மறைந்தும் விட்டார்கள். சுவிஸில் வைத்து ராபினும், அவரது மனைவி வத்ஸலா கொலை செய்யப்பட்டது அவனால் ஏற்க முடியவில்லை. ராபின் கொலை செய்யப்பட்ட உண்மை காரணத்தை தனியாக எழுதச் சொன்னார்.
கடந்த இரண்டு மூன்று மாதங்களாக சுரேஷ் லண்டனில் நோயின் தாக்கம் அதிகரிக்க, தனது உடல் நிலைபற்றிய விபரங்களை ஆரம்பத்திலேயே எனக்கும் கனடாவில் இருக்கும் எங்கள் நண்பர் மதனுக்கும் சொல்லிவிட்டார். சுரேஷின் நோய் பற்றி சுரேஷுக்கும் தெரியும் எனக்கும் தெரியும் ஆனாலும் நம்பிக்கையூட்டும் விதமாக அவனுக்கு ஆறுதல் சொல்வேன். அவனும் அதை ஏற்றுக்கொள்வது போல் அடுத்த வருஷம் இந்தியா வருவேன்.அப்போது வேளாங்கண்ணி கோயில் திருச்செந்தூர் முருகன் கோயில் சீரடி சாய்பாபா கோயிலுக்கு போக நீங்களும் வரவேண்டும் என்று கூறுவர். தனது உடல்நிலையை காரணம் காட்டி உடனடியாக எனது பழைய இந்திய நினைவுகளை எழுதிவிட்டு, பின்பு உமாமகேஸ்வரன் கொலை பற்றிய உண்மைச் செய்திகளையும் கேள்விப்பட்ட செய்திகளையும் ஒரு தனி பகுதியாக எழுதவேண்டும் என அவசரப் படுத்தி எழுத வைத்தான் அதுமட்டுமல்ல , நான் எழுதியது முகநூலில்பதிவு செய்யும் முன், தான் வாசிக்க வேண்டும் எனக் கூறி விட்டான்.அவனுக்குத் தான் முதலில் நான் அனுப்புவேன். பின்பு நேரடியாகவே முகநூலில் போட்டுவிட்டு தனக்கு செய்தி அனுப்ப சொன்னான். எனது பதிவில் பல எழுத்துப் பிழைகளும் வசன பிழைகளும் இருப்பதாகக் கூறி திருத்த சொல்வான். நான் சொன்னேன் இவைகளை திருத்தி போடத் தயார், வாரம் ஒரு முறை தான் பதிவு போடுவேன் என்று, ஆனால் அவன்ஏற்றுக் கொள்ளவில்லைதினசரி பதிவுகள் வர வேண்டும் என்று விரும்பினார் . பிழைகளை பிறகுதிருத்திக் கொள்ளலாம், தினமும் தான் எனது பதிவுகளை படிக்க வேண்டும் என்று விரும்பினான். அவனுக்கு மனதில் என்ன பட்டதோ தெரியவில்லை. அவனுக்காகவே தான் நான் தினசரி பதிவுகளை போட்டேன்.
அவனுக்கு இன்னொரு விருப்பம் நான் எல்லோரோடும் நிற்கும் படங்களை போடுவதாகவும் தன்னுடன் நிற்கும் படத்தை மட்டும் ஏன் போடவில்லை என்று. நான் கூறிய காரணம் படத்தை போட்டால்என்னை திட்டுபவர்கள் உன்னையும்சேர்த்துதான் திட்டுவார்கள் என்று. பரவாயில்லை போடுங்கள் என்று கூறினான். கடைசியில் 21/10/2020 ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டு என்னுடன் பேசும்போது, 91 ஆம் ஆண்டு எனது திருமணத்தின் போது எடுத்த ,அவன் இருக்கும் படங்களை அனுப்பச் சொல்லி வாங்கினான். தான் இறந்துவிட்டால், சில வருடம் முன்புஇந்தியா வந்தபோது என்னோடுஎடுத்த படத்தையும் எனது திருமணத்தின் போது எடுத்த படத்தையும் போடுவீர்களா அண்ணா என்று கேட்டான்.91 ஆம் ஆண்டு எனது திருமணத்தை முன்னின்று நடத்தியவர்களில் முக்கியமானவர்கள் சுரேசும் அவனது சகோதரி சுபாஷினி தான்.
அவனது விருப்பம் சிலநாட்களிலேயே நிறைவேறும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எமது இலங்கை நண்பர் தம்பி செந்தூரன்போரால் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகள்கொண்ட ஒரு குடும்பத்துக்கு ஒரு கழிவறை கட்டித் தர முடியுமா என்று சுரேஷ் அண்ணாவுடன் கேட்கும்படிகூறினார். நான் கேட்க தயங்கினேன் காரணம் அவர் உடல் நிலையும் ஆஸ்பத்திரி அடிக்கடி போய் வருவதாலும் அவருக்கு இந்த காலத்தில் வருமானமும் இல்லை இந்த விடயம் செந்துரனுக்கு தெரியாது. செந்தூரன் தவறாக நினைக்கக்கூடாது என்று நீங்களே சுரேஷிடம் நேரடியாக கேட்டுப் பாருங்கள் என்று கூறிவிட்டேன். உடனடியாக சுரேஷ் பணமும் அனுப்பி கழிவறை கட்டிய படங்களையும் பார்த்து சந்தோஷப்பட்டான். என்னிடம் கூறினான் வெற்றி அன்னை நீங்களே கேட்டு இருக்கலாம் தானே எனக்கு கஷ்டமாக இருந்தாலும் பெண்பிள்ளைகள் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு உதவி செய்வது. சந்தோசமாக இருப்பதாக கூறினாள் கடைசியில் அவர் உதவி செய்த குடும்பம் நெடும் தீவைச் சேர்ந்த அவருக்கு நெருங்கிய குடும்பம். இதற்காக அவர் செந்தூரனை பாராட்டிய பாராட்டுக்கள் ஏராளம்.
Feed அமைப்பைப் பற்றி கவலைப்பட்ட போது நான் கூறினேன் இதில் இருந்து ஒதுங்கி விடுங்கள் தேவையான உதவிகளை நீங்கள் தனிப்பட்ட முறையில் உதவி செய்யுங்கள் என்று. ஆனால் அவர் feedஅமைப்பை நல்ல முறையில் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் காரணம் இந்த அமைப்பால் பயன் பெரும் வறிய மக்கள் பாதிக்கப் படக்கூடாது.இன்னும் பலபேருக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
எனது பதிவுகளை அன்புள்ளம் கொண்ட நண்பர்கள் பலர் தாங்கள் புத்தகமாக போட விரும்புவதாக கருத்து சொன்ன போது, சுரேஷ் என்னிடம், வெற்றி அன்னை நான்தான் புத்தகமாக போடுவேன், நான் இருக்கும்போது வேறு யாரும் போட்டால் தனக்கு மரியாதை , உரிமை இல்லாமல் போய்விடும். சுரேஷ் எனது நிலை அறிந்து எனது பிள்ளைகள் படிக்கும் காலத்திலும் சரி, எனது மகளுக்கு திருமணம் செய்ய நான் கலங்கி நின்றபோது, வெற்றி அன்னை நான் இருக்கும் போது நீங்கள் கண் கலங்க லாமா? என்று உரிமையுடன் கூறி உதவிகள் செய்தவன் அவன். நோய் அவனை வாட்டும் போதும் கூட,பண விஷயத்தில் கஷ்டப்பட்டா போதும் கூட என்னிடம் அண்ணா என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் மட்டும்தான் கேட்க வேண்டும். நான் தான் உதவி செய்வேன், என்று உண்மையான அன்போடு கேட்பவன் தான் சுரேஷ். நான் சுரேஷ் கனடா மதன் மூவரின் நட்பும் மிகவும் உளப்பூர்வமாக நெருங்கிய நட்பு. ஒரு நெருக்கடியான காலத்தில் ஏற்பட்ட நட்பு. குழந்தை மனம் கொண்டவன். தினமும் போன் எடுப்பான் சில வேளைகளில் கருத்து வேறுபாடால் திட்டி விடுவேன். அடுத்த நாள் அந்தக் குறிப்பிட்ட நேரத்துக்கு எடுக்க எடுக்க மாட்டான்.அவன் எடுக்கவில்லை என்றாலும் நான் எடுப்பேன் உடனே ஒரு சிரிப்பு சிரிப்பான், காரணம் கேட்டால் வெற்றி அன்னைக்கு என் மேல் கோபம் இல்லை, அப்ப ஏன் போன் எடுக்க வில்லை என்று கேட்டால் , நீங்களே திட்டுவீர்கள் என்று ஒரு பயம் தான் காரணம் என்று கூறுவான். இனி இப்படியான ஒரு தம்பியான நண்பனை எப்ப பார்ப்பேன். சுரேஷ் செய்த தான தருமங்கள் உதவிகள் அவனது பிள்ளைகளையும் மனைவியையும் சகோதரிகளையும் நன்றாக வாழ வைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அவன் விருப்பம் போல அவனது படம் போட்ட பதிவை முகநூலில் பதிவிடுகிறேன்.
No comments:
Post a Comment