பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Sunday, 1 March 2026

போரால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் செய்யும் குடும்பங்களுக்கு உதவி செய்வார்களா? இல்லை மக்களை தொடர்ந்து ஏமாற்றும் தமிழ் தலைவர்களுக்கு உதவி செய்வார்களா

  வெற்றிசெல்வன்       Sunday, 1 March 2026

நேற்று  இலங்கையில் இருந்து ஒரு நண்பர் கவலைப்பட்டு அங்கு நடக்கும் வாழ்வியல் போராட்டங்களை பற்றி கூறி கவலைப்பட்டார். 

கொடிய யுத்தம் 2009இல் முடிவு பெற்று இருந்தாலும் இன்று வரை போரினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானகுடும்பங்கள் இன்னும் வறுமையின் பிடியில் கஷ்டப்படுகின்றன. ஆனால் தமிழ் மக்களை காப்பாற்ற போகிறோம் என்று கூறிக்கொண்ட தமிழ அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் தங்களுக்கு தேவையான பதவிகளையும் பணத்தையும் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றன. 

யாரும் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை அதுபோல் சிங்கள அரசாங்கம் வறுமையில் வாடும் தமிழ் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை கவலைப்படவும் மாட்டார்கள். 

வெளிநாட்டில் வசிக்கும் வசதியான முன்னாள் போராடிய போராளிகள் மக்களைப் பற்றி கவலைப்படுவதை விட, தமிழ் ஈழம் தான் முக்கியம் தமிழ்த் தேசியம் முக்கியம் என்ற நிலையில் செயல்படுகின்றன. மக்கள் இருந்தால் தான் வட கிழக்கில் தமிழர் நிலம் பாதுகாக்கப்படும் என்று யாரும் சிந்திப்பதில்லை. 


போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் பெண்கள் தங்கள் தங்கள் சிறு முயற்சியால் கௌரவமாக வாழ சில தொழில்களை சுயமாக செய்து மேலும் வளர பணம் இல்லாத படியால் தங்கள் தொழிலை கைவிட வேண்டிய நிலையில் இருப்பதாகவும், வெளிநாட்டு நல்ல உள்ளங்கள் சில சிறு சிறு உதவிகள் செய்தாலும் அது தொழில் வளர போதுமானதாக இல்லை என்று அந்த நண்பர் கூறுகிறார். 

அதைவிட சில வெளிநாட்டு தமிழர்கள் தங்கள் உதவி செய்வதாகவும் கூறி அவர்களின் தனிப்பட்ட விபரங்களை கேட்டு போட்டோக்கள் உட்பட, ஆனால் உதவிகள் மட்டும் செய்வதில்லை என்றும் கூறுகிறார். 


பல சிறு தொழில்கள் செய்யும் தமிழ் பெண்கள் பணத்தை கடனாகவே பெற விரும்புவதாகவும். அதற்கு சிறு வட்டி கூட தர தயாராக இருப்பதாகவும் கூறுகின்ரா. அதோடு இவர்கள் உற்பத்தி செய்யும் தரமான பொருட்களாக இருந்தால் வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி செய்யும் தமிழ் நண்பர்கள் அந்த பொருட்களை வாங்கி விற்பனை செய்தால் அந்த குடும்பங்களுக்கு விளக்கேற்றி வைக்கலாம். அந்தக் குடும்பங்களும் மற்றவர்கள் கையை தானமாக எதிர்பாராமல் தங்கள் குடும்ப செலவிற்கும் பிள்ளைகளின் படிப்புக்கும் தங்கள் தொழில் மூலம் கௌரவமாக வாழ முடியும் என்று எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். 


இந்தப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட இன்றும் தங்கள் சொந்த இடங்களில் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு உதவி செய்தால் தமிழர் நிலம் பாதுகாக்கப்படும். 

உண்மையாக சிறு தொழில்கள் செய்பவர்கள் தங்கள் விபரங்களை முகநூல் வழியாக எனக்கு அனுப்பி வைத்தாள் நான் அதை எனது முகநூலில் போடுகிறேன். இது மட்டும் தான் என்னால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு செய்யக்கூடிய உதவி. கட்டாயம் நல்ல உள்ளங்கள் அவர்களுக்கு உதவி செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்.

logoblog

Thanks for reading போரால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் செய்யும் குடும்பங்களுக்கு உதவி செய்வார்களா? இல்லை மக்களை தொடர்ந்து ஏமாற்றும் தமிழ் தலைவர்களுக்கு உதவி செய்வார்களா

Previous
« Prev Post

No comments:

Post a Comment