இலங்கை வடக்கு கிழக்கு தமிழரின் பலமும் பலவீனமும்
ஆரம்பத்தில் தமிழ் காங்கிரஸ் அடுத்து தமிழரசுக் கட்சி அடுத்துதமிழர் ஐக்கிய முன்னணி அடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உண்மையானதமிழர் விடுதலைக் கூட்டணியின கடைசித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் வரை பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள் மிகக் கூடிய அளவு திறமையானவர்கள். அதைவிட தனிமனித ஒழுக்கத்தில் சிறந்தவர்கள். குடிப்பழக்கம் இருந்தாலும் மக்கள் மத்தியில் குடித்துவிட்டு வருவதில்லை பொதுவாக அவர்கள்குடிப்பது மக்களுக்கே தெரிவதில்லை.
தமிழ் மக்களின் உரிமைக்காக போராடுவதாக கூறிக் கொண்டாலும் சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் உரிமை பெற முயற்சிகள் செய்தார்கள் வெற்றி பெறவில்லை என்பது வேறு விடயம்.ஆனால் தங்கள் சுய தேவைகளுக்காக குடும்பத் தேவைகளுக்காக தங்கள் பதவிகளை பயன்படுத்தவில்லை என்பதை நான் அறிந்தவரையில் உண்மை. அதன் பின்பு சம்பந்தன் மாவை தலைமையில் ஏற்பட்ட தமிழர் தேசிய கூட்டணி நல்ல உறுப்பினர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யவில்லைஅவர்கள் தெரிவு செய்த இரண்டு நல்ல உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம் ரவிராஜ் மிக நல்ல ஆளுமை உள்ளவர்கள். ஆனால் கொலை செய்ய பட்டார்கள். அதன் பின்பு தெரிவு செய்யப்பட்டவர்களும், வருங்காலத்தில் தெரிவுசெய்யப்பட உள்ளவர்களும் கொலை கொள்ளை தனிமனித ஒழுக்கம் என்பது என்ன விலை என்று2009 ஆம் ஆண்டுவிடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின் தமிழ் மக்களையும் தமிழ் மண்ணையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழர் கூட்டமைப்பு எம்பிக்கள் தான் உள்ளது என்பதை மறந்து விட்டார்கள்தமிழர் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் உரிமைக்காக பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்டது ஆனால் இவர்கள் தகுதி இல்லாத ஆயுதப் போராட்ட இயக்கங்களின் தலைவர்களை கொலைகாரர்களை கொள்ளைக்காரர்களை பாராளுமன்ற உறுப்பினராகிஎம்பி ஆகியவுடன் ஒவ்வொருவரும் தனித்தனியே சிங்கள அரசிடம் பேசி தங்களுக்கு தங்களுக்கு வேண்டிய பணமும் பதவிகளையும் பிள்ளைகளுக்கு வேலைகளையும் வாங்கிக் கொள்கிறார்கள் தமிழ் மக்களின் தேவைகளையும் உரிமைகளையும் கைவிட்டுவிட்டார்கள்ஆனால் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற எண்ணமாக போராட்டங்கள் கட்சி போராட்டம் நடத்துகிறார்கள்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள்விருப்பம் இருக்கோ இல்லையோ இந்த தகுதி இல்லாத வேட்பாளர்களுக்கு வாக்கு களை கொடுக்கிறார்கள். காரணம் எமது உரிமையின் சின்னம் அமைப்பு என்ற தமிழர் தேசிய கூட்டணி இன்று தமிழரசுக்கட்சி இவர்கள் தோற்றால் தமிழர்கள்தமிழர்களிடையே உரிமைகளையும் பெற விரும்பவில்லை என்று சிங்கள அரசுகள் பிரச்சாரம் செய்து தமிழர்களை இன்னும் அடிமையாக்கிவிடும் என்ற கவலைதான் இந்த தமிழ் மக்களின் உண்மையான கவலையை இன்று தமிழரசுக்கட்சி பயன்படுத்தி மிக ஆளுமையுள்ள தனி மனித ஒழுக்கத்தில் சிறந்த தமிழர்களை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்ப வேண்டும். ஆங்கிலம் தெரியாவிட்டாலும் வடக்கு-கிழக்கில்சிறந்த தனி மனித ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் இல்லையா பதவி பெற்றதும்தங்கள் சொந்த வாழ்க்கைக்கும் குடும்பத்துக்கும் செய்யாமல் மக்களுக்கு சேவை செய்ய கூடியவர்கள் கூட இல்லையா?
இனியும் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒழுக்கத்தில் சிறந்த தமிழ் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் பாதுகாப்பு தரக்கூடிய அமைப்பைச் சேர்ந்த தலைவர்களை தெரிவு செய்யுங்கள்
No comments:
Post a Comment