பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Monday, 2 March 2026

இது ஒரு பழைய பதிவு

  வெற்றிசெல்வன்       Monday, 2 March 2026
இன்று இலங்கையில் இன்றைக்கு தமிழ் தலைவர்கள் என்று தங்களை தாங்களே கூறிக் கொள்பவர்கள் அவர் படித்தவர் இவர் படித்தவர் நாங்கள் வெளிநாட்டில் படித்தோம் என்று டிவி பேட்டிகளில் பெருமையாக கூறி கொள்கிறார்கள்.
படித்தவர்கள் என்றால் என்ன. எழுத வாசிக்க தெரிந்தால் படித்தவர்கள் என்று1980 காலப்பகுதியில் சொல்லிக் கொள்வார்கள்.
இன்று படித்தவர்கள் என்று கூறுவது பல்கலைக்கழகங்களில் பட்டம், பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்களையே கூறுவது நியாயம். அப்படி படித்திருந்தும் பண்பில்லாதவர்கள், கொலைகாரர்கள் மற்றவர்களை ஏமாற்றி திரிபவர்கள் எல்லாம் தங்களை படித்தவர்கள் என்று கூறிக் கொள்வது ஏற்றுக்கொள்ள முடியுமா.
அன்று விடுதலை இயக்கங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தவர்கள் என்று அழைத்து முக்கிய பொறுப்புகள் கொடுத்தது உண்மை. ஆனால் அவர்கள் ஸ்டைலாக ஆங்கிலம் பேசுபவர்கள் ஒழிய, ஆங்கிலத்தில் சரியாக எழுதத் தெரியாதவர்கள். அன்றுவெளிநாட்டு கல்லூரிகளில் படித்தோம் படிக்கிறோம் என்று கூறியவர்கள் உண்மையில் படித்து பட்டம் வாங்கவில்லை. அவர்கள்இருக்கும் நாட்டு மாணவர் விசாவைதொடர்ந்து தக்க வைக்க 10 வருடம் பத்து வருடத்துக்கு மேல் தொடர்ந்து படிப்பதாக கூறி விசாவை நீட்டித்துக் கொண்டவர்கள்.
லண்டனில் விசாவை நீட்டிப்பதற்கு இலகுவான வழி எக்கவுண்டன்சி படிப்பது தான். எனக்குத் தெரியக்கூடிய இப்ப இருக்கும் தலைவர்களில் ஒருவர் தான் அக்கவுண்டன் என்று கூறிக் கொள்வார். உண்மையில் விசாவுக்காக படிக்க சேர்ந்து கொண்டவர் ஒழிய, தொடர்ந்து படிக்கவில்லை.
சந்ததியர் தீர்க்கத் தரிசனமாக ஒரு வார்த்தை கூறினார் வெளிநாட்டிலிருந்து ஆங்கிலம் தெரியும் என்று கண்டவர்களையும் இயக்கத்தில் சேர்க்க வேண்டாம். இந்த வெளிநாட்டுக்காரர்களால் தான் இயக்கம் அழியும் என்று. அதனால் வெளிநாட்டில் இருந்து வந்து இருந்து போய் வேலை செய்பவர்கள் சந்ததியாருக்கு எதிராகவே இருந்தார்கள்.
உமா மகேஸ்வரன் நிருபர்கள் மற்றவர்கள் இடம் பேசும் போது பிரபாகரனை பற்றி அவரின் படிப்பை பற்றி கேட்டால் மிகவும் மட்டமாக அவன் அம்புலி மாமா புத்தகம்தான் வாசிப்பான் என்று கூறுவர்.
அம்புலி மாமா வாசித்தவர் எந்த நிலையில் இருந்தார். படித்தவர் என்று கூறப்பட்டவர் எந்த நிலையில் இருந்தார்.
இனிமேல் சரி படிப்பை வைத்து அதுவும் வெளிநாட்டில் படித்தோம் என்று பெருமை பேசாமல், உங்கள் பண்பான நடவடிக்கையால் மக்கள் உங்களைப் பற்றி படித்தவர் என்று கூற வேண்டும்.
logoblog

Thanks for reading இது ஒரு பழைய பதிவு

Newest
You are reading the newest post

No comments:

Post a Comment