பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Wednesday, 4 March 2026

இது ஒரு பழைய பதிவு. அரச கொலைகளும், இயக்கங்கள் செய்த கொலைகளும்

  வெற்றிசெல்வன்       Wednesday, 4 March 2026
இன்று முகநூலில் இந்தியாவில் குற்றச் செயலில் ஈடுபட்ட சின்ன சாந்தனைஅப்பாவி என்று கூறிசின்ன சாந்தனின் மறைவை அடுத்து, முகநூலில் வரும் பதிவுகளை பார்க்கும் போது, மனம் கலங்குகிறது. ஒரு தாயின் கண்ணீருக்கு அரசாங்கங்கள் பதில் சொல்ல வேண்டும் என்று இவ்வளவு கூக் குரல் எவ்வளவு சாபங்கள்.
இந்த ஆயுதம் தூக்கிய விடுதலை இயக்கங்கள் எல்லாம் இந்தியாவில் வைத்து ரகசிய முகாம்களிலும் பின்பு இலங்கையில் பகிரங்கமாகவும் எத்தனை ஆயிரம் தமிழ் இளைஞர்களை பொதுமக்களை பெண்களை சித்ரவதை செய்து கொன்றார்கள். இவர்களின் தாயின் கண்ணீரைப் பற்றி அப்போதும் சரி இப்போதும் சரி, யாரும் கவலைப்படவில்லை. எத்தனை ஆயிரம் தாய்மார் ஒவ்வொரு இயக்க வாசல்களிலும் அடி உதை வாங்கி பல நாள் பல மாதங்கள் தவம் இருந்தார்கள். தமிழ் விடுதலை இயக்கங்கள் கைது செய்த அப்பாவி தமிழ் இளைஞர்கள் மற்ற இயக்க இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட பின்பு உடல்கூட அந்த அப்பாவி தாய்மார்களுக்கு காட்டப்படவில்லை. இன்றும் அந்த பல தாய்மாரின் தேடல்கள் தொடர்கின்றன.
ஒவ்வொரு இயக்கமும் தங்களால் கொலை செய்யப்பட்டவர்களை பற்றி ஒரு வரியில் துரோகி என்று முடித்து விடுவார்கள். அதுபோலவே வெளிநாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான இயக்க ஆதரவாளர்களும் துரோகியை தான் கொன்றோம் அதில் என்ன தவறு என்று பொங்கி எழுவார்கள்.
எமது விடுதலைப் போராட்டத்தில் தான் ஒரு குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகள் பல இயக்கங்களில் தனித் தனியாக சேர்ந்து இருந்தார்கள். தாயின் கண் முன்னே ஒரு இயக்கத்தைச் சேர்ந்த தனது சகோதரனை மற்ற இயக்க சகோதரன் சுட்டுக் கொள்ளும் நிகழ்ச்சியை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது..
விடுதலை இயக்கங்கள் சொந்த தமிழ் சகோதரர்களையே பிடித்து சித்திரவதை செய்து கொண்டு அடித்த விட்டு கொலை செய்தார்கள் பின்பு துரோகியை கொன்றோம் என்றார்கள்.
அது போல் வெளிநாட்டு அரசாங்கங்கள் குற்றவாளியை பிடித்து சிறையில் அடைத்தோம் என்றார்கள். யார் சொல்வது உண்மை.
logoblog

Thanks for reading இது ஒரு பழைய பதிவு. அரச கொலைகளும், இயக்கங்கள் செய்த கொலைகளும்

Previous
« Prev Post

No comments:

Post a Comment