பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Monday, 20 February 2023

ஆரம்ப காலத்தில் ஈழப் போராட்ட தலைவர்களும் தமிழ்நாட்டு தொடர்புகளும் பகுதி 1

  வெற்றிசெல்வன்       Monday, 20 February 2023

இன்று முகநூல் வழியாகவும் புத்தகங்களாகவும் , ஈழ ஆயுதப் போராட்டத்தை பற்றி எழுதும்போது, இந்தியாவையும், அடுத்து கலைஞர் கருணாநிதி  அவர்களையும் தான் ஈழப் போராட்டம் தோல்வியுற்றதற்கு முழு காரணம் என்று தங்களுக்கு தோன்றியவாறு பதிவு செய்கிறார்கள். இது சரியா உண்மையா யாரும் விளங்கிக் கொள்ள தயாராக இல்லை. இந்தியாவில் நடந்த பல உண்மைகள் வெளியில் வரவில்லை என்பதே உண்மை.

1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தோன்றிய மாணவர் போராட்டத்தில் மிகவும் மிகவும் கொடூரமாக பேசப்பட்டது புஷ்ப ராஜா அவரது சகோதரி புஷ்பராணி அவர்களுக்கு கொழும்பு போலீஸ் நிலையநாலாம் மாடியில் நடந்த சித்திரவதை. இதையே அன்றும் காலம் காலமாக மாணவர்களிடம் இளைஞர்களிடம் பரப்பப்பட்டது., இதைவிட கொடூரமான சித்திரவதைகளை தமிழ் இளைஞர்களிடம் ஈழத் தமிழ் இயக்கங்களே செய்தன என்பது உண்மை.

அன்று தமிழரசு கட்சியும் பின்பு பெயர் மாறிய தமிழர் விடுதலைக் கூட்டணியும் எப்படியும் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற வெறியில் தீவிர சிங்கள எதிர்ப்பு, சுதந்திர தமிழினம் என்ற கோஷங்கள் மக்களிடம் பரப்பப்பட்டன. 1977 தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு அவர்களின் கோஷங்கள் மாறி மாவட்ட அபிவிருத்தி சபையை ஏற்றுக்கொண்டு, அமிர்தலிங்கம் எதிர் கட்சித் தலைவராக அலங்கரித்தார். கடந்த காலத்தில் இவர்களின் பேச்சைக் கேட்டு தமிழ் இளைஞர்கள், சிங்கள அரசாங்கத்துக்கு எதிரான சிறு சிறு தீவிரவாத குழுக்களாக செயல்பட்டார்கள். இதில் தமிழ் இன உணர்ச்சி பொங்கிய சிறுவன் பிரபாகரன் அவர்களை அமிர்தலிங்கம் அவர்கள் தந்திரமாக தனது எதிரிகளை அழிக்க பயன்படுத்தியது உண்மை. உண்மையைச் சொல்லப் போனால் பிரபாகரன் அமிர்தலிங்கத்தின்கூலிப்படையாக செயல்பட்டார். அப்படி எழுதுவது பல பேருக்கு கோபம் வரலாம். இது நடந்த வரலாறு.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் ரகசிய ஆயுதப்படையாக பிரபாகரன் அமைப்பு இருந்து கொண்டு வளர்ச்சிய தொடங்கிய போது, பல இளைஞர்கள் அதில் சேர்ந்து, அமிர்தலிங்கம் மற்றும் கூட்டணியின் கள்ளக், கபடத்தைஅறிந்து, தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக மாறினார்கள். அப்படியும் பிரபாகரனுக்கும் அமுதலிங்கத்துக்கும் தனிப்பட்ட முறையில் நல்ல தொடர்பு இருந்தது உண்மை. எப்படி சில விடுதலைஅமைப்புகள் தோன்றி இலங்கையில் சிறு சிறு அரசுக்கு எதிரான போராட்டங்களை தொடங்கிவிட்டு, போலீசார் அவர்களைத் தேடும் போது கள்ளத்தனமாக இந்தியாவில் வந்து, தமிழ்நாட்டில் ரகசியமாக பாதுகாப்பாகதங்கி விடுவார்கள்.

அதே நேரம் இவர்களைத் தேடி இலங்கையில் காவல்துறையினர் பொதுமக்களையும் இளைஞர்களையும் பிடித்து சித்திரவதை செய்து இவர்களைப் பற்றிய விபரங்கள் கேட்பார்கள்.

           அந்த காலகட்டத்தில் இந்தியாவில் தமிழ்நாட்டில் இளைஞர்களின் போராட்டம் பற்றிய செய்திகள் குறைவு அல்லது இல்லை என்றே கூறலாம். அமிர்தலிங்கத்தின் துரோகத்தனத்தை வெறுத்த ஒருவர் அவர் ராஜரத்தினம் என்று பெயர் முதன்முதலாக தமிழ்நாட்டில் ரகசியமாக கலைஞர் உட்பட பல தமிழ் இன ஆதரவுதலைவர்களை சந்தித்து எமது போராட்டம் பற்றி விளங்கப்படுத்தியும், போராட்டத்திற்கு உதவிகளையும் கேட்டு வந்தார்.. இதை அறிந்தஅமிர்தலிங்கம் ராஜரத்தினம் அவர்களைப் பற்றி பல தவறான செய்திகளை பரப்பத் தொடங்கினார். இதற்கு அமுதலிங்கத்துக்கு உதவியாக இருந்தவர் இரா ஜனார்த்தனன். அமிர்தம் லிங்கம் தனது மூத்த மகன் காண்டீபனை பாதுகாப்பாக இருப்பதற்கு இரா ஜனார்த்தனன் அவர்களிடம் தான் அனுப்பி இருந்தார். 1974 ஆம் ஆண்டு உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு  தடைப்பட்டு பல தமிழர்கள் உயிரிழந்ததற்கு மூல காரணம் அமிர்தலிங்கமும் இர. ஜனார்த்தனன் தான். 1974உலகத் தமிழர் மாநாட்டில் பெயர் இல்லாத இரா ஜனார்த்தனத்தை வரவழைத்து இளைஞர்களிடம் தங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள அமர்ந்த லிங்கம் விரும்பினார். அந்த காலகட்டத்தில் இரா ஜனார்த்தனன் உலக தமிழர் மாணவர் பேரவை வைத்திருந்தார் என நினைக்கிறேன். இலங்கை போலீசார் ஜனார்த்தனத்தை வரவழைக்கக் கூடாது மேடை ஏற்றக்கூடாது என்று கடும் கட்டுப்பாடுகள் விதித்திருந்தும், அமிர்தலிங்கம் இந்த மாநாட்டை குழப்பி சர்வதேச அரங்கில் பிரச்சனையை கொண்டு சென்று தமிழ் மக்களிடம் ஆதரவை பெறலாம் என நினைத்தார். அதுதான் நடந்தது.

 இன்று வரை துரையப்பா தான் குற்ற வழியாக முன் நிறுத்தப்படுகிறார்.


தமிழ்நாட்டுக்கு தலைமறைவாக வந்த விடுதலைப்புலி இயக்கத் முக்கிய தலைவர்கள் எல்லாம் ரகசியமாக தங்குவதற்கு உதவி செய்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரன், கா சுப்பு போன்ற சட்டசபை உறுப்பினர்களும், தமிழ் மன்னன், மணவைதம்பி போன்ற திமுக செயல் வீரர்களும் தான். அதைவிட பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களும் அவர் குடும்பமும் பயப்படாமல், எல்லா உதவிகளும் செய்துள்ளார்கள். இவர்கள் ரகசியமாக உதவி செய்த காலங்களில் தமிழ்நாட்டில் எம் ஜி ஆர் ஆட்சியும், மத்தியில் மொரார்ஜி தேசாய் ஆட்சியும் நடந்து கொண்டிருந்தது.. ஒரு இலங்கை தமிழருக்கு உதவி செய்யும் இவர்களைப் பற்றிய விபரங்கள் வெளிவந்திருந்தால் இவர்களுக்குஉதவி செய்த தமிழ்நாட்டுக்காரர்கள் வாழ்நாள் முழுக்க சிறையில் தான் இருந்திருக்க வேண்டும். இன்று இலங்கைத் தமிழர்களின் பணத்திற்காக உதவி செய்பவர்களை பார்க்கும்போது அந்தக் காலத்தில் உதவி செய்த பாவலர்  பெருஞ்சித்திரனார் ஐயா அவர்கள் அவர் குடும்பம், செஞ்சி ராமச்சந்திரன் சுப்பு, மணவை தம்பி தமிழ் மன்னன் போன்றவர்கள் என்றும் போற்றுதலுக்கு உரியவர்கள்.

இரா ஜனார்த்தனனும் உதவி செய்திருக்கிறார் எப்படி என்றால் சில பல பண உதவிகளை பெற்றுக் கொண்டு, சென்னை எக்மோரில் இலங்கை தமிழ் இளைஞர்கள் தங்குவதற்காக ஒரு முஸ்லிம் பெரியவர் கொடுத்த வீட்டை தனக்கு சொந்தமாக்கி கொண்டு, செய்த அடாவடி அன்று இருந்தவர்களுக்கு தெரியும். உமா மகேஸ்வரனும், பிரபாகரனும் கடைசி வரை இரா ஜனார்த்தனத்தை மதிக்கவுமில்லை அவரை ஒரு பொருட்டாக நினைத்ததும் இல்லை. அமுதலிங்கம் உதவியாள் லண்டனில் இருந்து பணம் இரா. ஜனார்த்தனத்திற்கு கிடைத்துக் கொண்டிருந்தது. 


தமிழீழவிடுதலைப்புலிகளின் முதல் தலைவரான உமா மகேஸ்வரன் அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியை ரகசியமாக சந்திக்கும் இடம் சென்னை மெரினா பீச். நடைப்பயிற்சியில் இருக்கும்போது இருவரும் உமா மகேஸ்வரனும் கலைஞர் கருணாநிதி பலமுறை இப்படி சந்தித்து எமது பிரச்சினைகள் பற்றி பேசியுள்ளார்கள். அப்பொழுது பிரபாகரன் கை துப்பாக்கி சகிதம் உமா மகேஸ்வரனுக்கு பாதுகாப்பாக தூரத்தில் இருப்பாராம்.

கலைஞர் உமா மகேஸ்வரன் இடம் தமிழ்நாட்டில் அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதங்கள், இந்திய அரசின் கொள்கைகள்பற்றி எல்லாம் விளங்கப்படுத்தி உள்ளார். திமுக கட்சியிடம் இவர்கள் தொடர்பு இருப்பது தெரிந்தால் மிக கடுமையான விளைவாக இருக்கும், காரணம் திமுக ஆரம்ப காலத்தில் தனிநாடு கொள்கை வைத்து போராடியது இன்று இல்லாவிட்டாலும் மத்திய அரசாங்கங்கள் யார் வந்தாலும் உங்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்க மாட்டார்கள்.

அன்று எம்ஜிஆர் அரசு, போலீஸ் அதிகாரி மோகனதாஸ் பற்றி கவனமாக இருக்கும் படி, பல எச்சரிக்கைகள் கொடுத்துள்ளார்.

அன்று சென்னையில் இருந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனது நினைவில் நிற்கும் பெயர்கள் பிரபாகரன் உமா மகேஸ்வரன், ராகவன், ஐயர், வாத்தி நாக ராசா , ஊர்மிளா தேவிபோன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். என்று இவர்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்க அன்டன் பாலசிங்கம் லண்டனில் இருந்து வந்தாரோ அப்போது இருந்து விடுதலைப்புலி இயக்கத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர அவர் செய்த முயற்சி உமா மகேஸ்வரனால் முறியடிக்கப்பட்டது. அன்டன் பாலசிங்கம் பலவித முயற்சிகள் செய்தும் பிரபாகரனையும் உமா மகேஸ்வரனையும் பிரிக்க செய்த சதிகள் எடுபடாமல் போகவே, இயக்கத்தின் தனி மனித ஒழுக்கங்கள் பற்றிய விதியை பயன்படுத்தி உமா மகேஸ்வரனுக்கு எதிரான வேலைகளை செய்ய தொடங்கினர். அதற்கு துணை போனவர் வாத்தி நாகராசா. இது பற்றிய உண்மைகளே 1983 ஆம் ஆண்டு வாத்தி நாகராசா அவர்களே எங்களிடம் கூறி வருத்தப்பட்டார்.

அவர்கள் உமா மகேஸ்வரன் மேல் வைத்த குற்றச்சாட்டுகள்.


தொடரும்.


logoblog

Thanks for reading ஆரம்ப காலத்தில் ஈழப் போராட்ட தலைவர்களும் தமிழ்நாட்டு தொடர்புகளும் பகுதி 1

Previous
« Prev Post

No comments:

Post a Comment