பகுதி 5 1986 ஆம் ஆண்டு நடந்த புளொட் இயக்கத்தின் பின்தள
மாநாட்டு அறிக்கையின் தொடர்ச்சி
1983 ஆம் ஆண்டின் முன்பு அமைப்பு வேலை செய்த தோழர்களே நிபந்தனையின்றி மாநாட்டுக்கு அழைப்பதுதொடர்பாகவும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் அதிகாரங்கள் தொடர்பாக வும் விவாதிக்கப்பட்டது.
ஏற்பாட்டுக் குழு அதிகாரமின்றி செயல்பட முடியாது எனவும் மத்திய குழு இதற்கான அதிகார வரையறைகளை தர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. பத்துவித நியமனம் வழங்கப்படும் தோழர்கள் யார் யார் எனவும் எந்த அடிப்படையில் அவர்கள் நியமனம் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட வேண்டும் என்று கேட்கப்பட்டது.
7.6.86 இக்கு பின்னரும் 13/6/86 இடைப்பட்ட காலத்தில் தள குழு தோழர்கள் முகாம்களுக்கு சென்று தங்களுக்கு முகாம்களுக்குசெல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ஆகவும், தாங்கள் தற்போது அனுமதி இன்றியே வந்துள்ளதாகவும் பேசி நம் தோழர்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கி வருவதாகவும் T3S தோழர்கலினால் கருத்து வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக விசாரிப்பதாக மாநாடு தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகளை விசாரிப்பதற்கு பின்தள மாநாட்டு ஏற்பாட்டுக் குழு ஒரு விசாரணைக் குழு வைக்கப்பட வேண்டும் எனவும் மத்திய செயற்குழுவிடம் கேட்கப்பட்டது.
அதுவே அன்றைய கூட்டத்தில் பேசிக் கொண்ட விடயங்கள் தொடர்பாக மத்திய செயற்குழுவிற்கு மாடல் உடன் அனுப்பி வைக்கப்பட்டது. (இணைப்பு 9)
இதற்கான பதில் இணைப்பு 10 ஆக உள்ளது. (இணைப்பு 10)
மகாநாடு தொடர்பாக வந்திருக்கும் அறிக்கைகளை தொகுத்து தருவதற்கு ஆனந்தன், சீசர், ஜெயந்தி, திவாகரன், முத்து ஆகியோரை ஏற்பாட்டுக் குழு தெரிவு செய்தது.
முகாம்களுக்கு மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவில் உள்ள அங்கத்தவர்கள் போகும்போது கீழ்வரும் தலைப்புகள் அடிப்படையில் தமது கருத்துக்களை முன்வைக்க எக்கபட்டது.
தள மகாநாடு கூட்டம் பெற்றதன் நோக்கம்
தளமாநாட்டில் முன் வைக்கப்பட்ட விமர்சனங்கள்
தள மகாநாட்டில் நடந்த குழுநிலை விவாதங்கள் தொகுப்பு
தள மாநாட்டின் பின் நிதி, நிர்வாக, அரசியல் சீரமைப்பு கள், பின்தள தொடர்புகள் பற்றிய மாற்றங்கள்
தள மாநாட்டின் பின் கூட்டப் பெற்ற தள பொதுச்சபை தளசெயற்குழு பற்றிய விபரங்கள்
ஸ்தாபனம் பற்றி
தல மாநாட்டின் பின் தாபனத்தின் கலந்த காலநிலையும், ஸ்தாபனத்தின் தற்கால நிலையும் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி
ஏனைய விடுதலை இயக்கங்களோடு ஒப்பிடு
நமது ஸ்தாபனம் பற்றி மக்களை அபிப்ராயம்
7. தளம் பற்றிய தற்போதைய நிலை மாவட்ட ரீதியாக
8. பின்தள மாநாடு பற்றி.
A. பின்தள மாநாடு கூட்டப் பெறும்நோக்கம்
B. அது எவ்வாறு கூட்டப்பட வேண்டும் என்பது பற்றிய
கண்ணோட்டம்
C. இம் மாநாடு சம்பந்தமாக தளசெயற்குழு வைத்த
நிபந்தனைகள் அதற்கான காரணங்களும்
தள செயல் குழு இந்த மாநாட்டில் கலந்து கொள்வதன் நோக்கம்.
அறிக்கதோழர்கள் எழுதும் விதம் தொடர்பாக
9. A. கேள்வி-பதில், B. தோழர்களின் கருத்துக்கள் எழுத்து
வடிவில்
15/06/86 இல் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் 13/06/86 மத்திய சபைக்கு கொடுத்த கோரிக்கைகளுக்கான பதில்கள் கட்டுப்பாட்டு குழு தரப்பட்டன. (வாய்மொழி மூலம்)
தோழர் ஈஸ்வரனுக்கு மாநாட்டு வேலைகள் தொடர்பாக ஒரு மோட்டார் சைக்கிள் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
20/06/86 அன்று மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவை ஒத்துழைப்பு குழு சந்திக்க விரும்பியது அதன்படிசந்திப்பு நடைபெற்றது.
தோழர்கள்: முத்து, ஜெயந்தி, சுதர்சன், குமாரன் ஆகியோர் ஒத்துழைப்புக் குழு சார்பில் சந்திப்புக்கு வந்திருந்தனர்.
ஒத்துழைப்பு குழுவால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன
இணைப்பு 9.
அவை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவால், ஒத்துழைப்பு குழு ஆராயப்பட்டு திருத்தப்பட்டு மத்திய சபையின் கவனத்திற்கு ஏற்பாட்டுக் குழுவால் அனுப்பி வைக்கப்பட்டன. இணைப்பு 9a
தொடர்ந்து ஏற்பாட்டு குழு கூட்டம் நடைபெற்றது
தளசெயல் குழுவுக்கும் பின் தளத்திற்கும் பல முரண்பாடுகள்உள்ளதாகவும், அவை தீர்க்கப்பட வேண்டும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
முகாம்கள் தொடர்பாகவும் அங்கு நடைபெறும் குழப்பங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
பகுதி 6 தொடரும்.
No comments:
Post a Comment