பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Tuesday, 28 February 2023

ஆரம்ப கால ஈழபோராட்டத் தலைவர்களும் தமிழ் நாட்டு தொடர்புகளும் பகுதி இரண்டு

  வெற்றிசெல்வன்       Tuesday, 28 February 2023
ஆரம்ப காலத்தில் ஈழப் போராட்ட தலைவர்களும் தமிழ்நாட்டு தொடர்புகளும் பகுதி 2


இந்தியாவில் நடந்த அந்த கால சம்பவங்களுக்கு இன்று லண்டனில் வசிக்கும் ராகவன் உண்மைகளை எழுதினால் மிகவும் நல்லது. காரணம் ராகவன் நேரடியாக சம்பந்தப்பட்டவர்.
1983 ஆண்டு நாகராஜா எங்களுடன் சகஜமாக பேசிக் கொண்டிருக்கும்போது கூறிய கதைகள். பாலசிங்கம் தமிழ்ஈழவிடுதலை புலிகள் பற்றிய தொடர்புகள் கடிதப் போக்குவரத்துகள் பற்றி அறிய முற்பட்டபோது, உமா மகேஸ்வரன் பாலசிங்கத்துடன் இருந்து அவர்களின்ரகசிய வேலைப்பாடுகள் சம்பந்தமாக எந்த ஒரு தகவலையும் கூறவில்லையாம். அதே மாதிரி பிரபாகரனும் தங்கள் அமைப்பு சம்பந்தப்பட்ட ரகசிய வேலைகளை பற்றி பால சிங்கத்துடன் கூற மறுத்திருக்கிறார். அதே நேரம் இவர்களுடன் இருந்த ஊர்மில்லா தேவி அவர்களும் உமா மகேஸ்வரனும் தனியாக இருந்து பல இயக்கம் சம்பந்தப்பட்ட பல ஆங்கில கடிதங்களை ரகசியமாக தயாரித்துக் கொண்டிருப்பது பாலசிங்கம் உட்பட தான் நாகராஜா எரிச்சலை கொடுத்ததாகவும், தங்களுக்கு தெரியாத ரகசியங்கள் என்ன இருக்கு. ஆனால் பிரபாகரன் உமா மகேஸ்வரன் ஊர்மிளா தேவி வேலைத்திட்டங்களில் இடையூறு செய்யாமல் அவர்கள் மேல் நம்பிக்கையோடு இருந்திருக்கிறார்.
பிரபாகரன் சென்னையில் பழைய புத்தகங்கள் விற்கும் மூர் மார்க்கெட்டில் மலிவு விலையில் கிடைக்கும் ஆங்கில ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட படங்களுடன் கூடியபுத்தகங்கள் வாங்கி வந்து பாலசிங்கத்துடன் கொடுத்து, ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட விபரங்களை கேட்டு குறிப்புகள் எடுப்பாராம். இப்படியாக பிரபாகரன் உடன் நெருங்கிய பாலசிங்கம் பல விடுதலை இயக்கங்கள் பற்றிய வரலாறுகள் கூறி, அதில் நடந்த துரோகங்கள் பற்றிய கதைகள் எல்லாம் கூறி பிரபாகரனை கொஞ்சம் கொஞ்சமா சந்தேகப்பட வைத்துள்ளார். இதற்கு பாலசிங்கத்துக்கு வாய்ப்பாக நா கராஜா செயல்பட்டுள்ளார். உமா மகேஸ்வரனும் ஊர்மிளா தேவியும் சிறு வயதிலிருந்து அறிமுகமானவர்கள். கொழும்பில் தமிழர் விடுதலை கூட்டணியில் ஒன்றாக வேலை செய்தவர்கள். இப்போது விடுதலைப் புலிகளின் முதல் தலைவராக இருந்த உமா மகேஸ்வரன் கொழும்பில் நில அளவை திணைக்களத்தில் அரசாங்க வேலைகள் இருந்தார். ஊர்மிளா தேவி கொழும்பு கோட்டையில் இருந்த எதிரி சிங்க என்ற கண் கண்ணாடி நிலையத்தில் வேலை செய்து கொண்டே, விடுதலைப் புலிகளுக்கு தேவையான ரகசிய கடிதங்கள், வெளிநாட்டு தொடர்புகள் சம்பந்தமான கடிதங்கள் ஆகியவற்றே ரகசியமாக தயாரித்து அனுப்பி வந்தார்.
இதில் முக்கியமான கடிதம் விடுதலைப் புலிகளால் முதன் முதலாக வெளியிடப்பட்ட கடிதம் அதில் விடுதலைப்புலிஇயக்கத்தால் கொலை செய்யப்பட்ட பஸ்தியான் பிள்ளைஉட்பட கிட்டத்தட்ட 10 12 கொலைகளுக்கு பொறுப்பு எடுத்து அதன் முதல் தலைவரான உமா மகேஸ்வரம் கையெழுத்து போட்ட கடிதத்தை ஊர்மிளா தேவி அவர்கள் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு அமிர்தலிங்கம் அவர்களின் செயலாளராக இருந்த பேரின்ப நாயகம்என்பவரின் அரசாங்க அறையில் இருந்து அரசாங்கத் தட்டெழுத்தில் உரிமை கூறிய கடிதம் தட்டச்சு செய்யப்பட்டு அக்கடிதம் லண்டன் அனுப்பப்பட்டு லண்டனில் இருந்து இலங்கை வீரகசரிக்கும் மற்ற பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. பின்பு உமாமகேஸ்வரம் பிரிந்தபின்பு பிரபாகரன் அந்த கடிதத்தில் ராமேஸ்வரம் கையெழுத்து போட்ட இடம் மறைக்கப்பட்டு பிரபாகரன் பெயரும்,சில வெளியீடுகளில் அந்த இடம் மறைக்கப்பட்டு இருந்தது.
இப்படி நெருங்கி பழகிய உமா மகேஸ்வரன் ஊர்மிளா தேவி நட்பை ஆபாசமாக கொச்சைப்படுத்தி நாக ராஜா, பாலசிங்கம் பிரபாகரனிடம் அசிங்கமாக இன்னும் பல கட்டுக்கதைகளை கூறியுள்ளார்கள். அதில் முக்கிய விடயம், அறிக்கை,கடிதங்கள் தயாரிப்பது போல் நடித்து, அவர்கள் இருவரும் ஒருவர் கால் மேல் ஒருவர் போட்டு கொண்டு இருந்ததாகவும் அதை நாகராஜா நேரடியாக பார்த்ததாக சத்தியம் செய்யாத குறையாக பாலசிங்கமும் நாகராஜாவும் பிரபாகரன்இடம் கூறி, உமா மகேஸ்வரனுக்கு எதிராக வேலை செய்ய, பிரபாகரன் உமா மகேஸ்வரன்இடம் இதைப் பற்றி விசாரித்து, வார்த்தைகள் தடித்து, விடுதலைப் புலிகள் இயக்கம் முதன்முறையாக பிளவு பட்டது.

      நடந்த சம்பவங்களை ஐயர் என்ற கணேசன், நாகராஜா,உமா மகேஸ்வரன், சோதி ஈஸ்வரன் சந்ததியார் போன்றவர்களிடம் 83 ஆம் ஆண்டு இவர்கள் இடம் நாங்கள் ஆர்வமாக பழைய கதைகளை கேட்டு இருக்கிறோம். அன்று தான் நடந்து கொண்ட முறைக்கு நாகராஜா வெட்கப்பட்டு கவலைப்பட்டார். அன்று தங்களுக்கு உமா மகேஸ்வரன் மேல் இருந்த பொறாமை தான் காரணம் என்று கூறினார்.

இதில் இருக்கும் உண்மைகளை அப்போது இருந்த ராகவன் தான் உண்மை பொய் என்று கூற வேண்டும். பிற்காலத்தில் உண்ணாவிரதம் இருந்த யாழ் பல்கலைக்கழக மாணவிகள் கடத்தி இந்தியா வரப்பட்டு அதிலிருந்து ஒரு மாணவி மதிவதனியை பிரபாகரன் காதலித்து அதில் புலிகள் இயக்கம் இந்தியாவில் பிளவு பட்டது. புரட்சி குரல் எழுப்பிய பல இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
பின்பு அவசரமாக பிரபாகரன் மதிவதனி திருமணம் திருப்போரூர் முருகன் கோயிலில் எளிமையாக நடைபெற்றது.
இந்த காலகட்டத்தில் தான் பிரபாகரனுக்கு அடுத்த தலைவராக இருந்த ராகவன் விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு விலகி தலைமறைவாக இருந்தார்.
உமா மகேஸ்வரம் பிரபாகரன் பிரியும் முன்பு தமிழ்நாட்டில் செஞ்சி ராமச்சந்திரன், சுப்பு போன்ற சட்டசபை உறுப்பினர்கள் நல்ல உதவி செய்துள்ளார்கள். இதில் எம்எல்ஏ செஞ்சி இராமச்சந்திரன் பட்ட அனுபவங்கள் வித்தியாசமானவை என நினைக்கிறேன்.
லண்டனில் இருந்து இவர்களிடம் பயிற்சி எடுக்க ராஜா நித்தியன், மற்றொருவர் பெயர் மறந்து விட்டது இருவரும் வந்துள்ளார்கள். அப்போது விடுதலைப்புலி இயக்கம் பிரபாகரனின் கட்டுப்பாட்டில். லண்டனில் இருந்து வந்த இருவரும் பிரபாகரன்உடன் முரண்பட்டு, அவர்கள் இதுவரையும் கொலை செய்ய பிரபாகரன் முயன்றபோது செஞ்சி ராமச்சந்திரன் அவர்கள் தான் தலையிட்டு தடுத்து அவர்களை காப்பாற்றியுள்ளார். அதோடு செஞ்சி ராமச்சந்திரன் வெறுத்துப் போய்விட்டார்.
அப்போது நடந்த பல சம்பவங்களை செஞ்சி ராமச்சந்திரன் பல வருடங்களுக்கு முன்பு என்னிடம் பகிர்ந்து கொண்டார். பல விடயங்கள் மறந்து விட்டன.

பலர் இன்றும் உமா மகேஸ்வரனுக்கும், முதல் பெண் போராளி ஊர்மிளா தேவிக்கும் கள்ளத்தொடர்பு, பிரபாகரனும் , ஊர்மிளா தேவியை ஆசைப்பட்டார் என்று உண்மைக்கு புறம்பான பல செய்திகளை தாங்கள் ஆசைப்பட்டபடி எழுதி வருகிறார்கள். உண்மை தெரிந்தவர்கள் கூட மறுத்து எழுதுவதில்லை. நடந்த உண்மைகள் மறைக்கப்படக்கூடாது.

தமிழ்நாட்டு சம்பவங்கள் தொடரும்.


logoblog

Thanks for reading ஆரம்ப கால ஈழபோராட்டத் தலைவர்களும் தமிழ் நாட்டு தொடர்புகளும் பகுதி இரண்டு

Previous
« Prev Post

No comments:

Post a Comment