ஆரம்ப காலத்தில் ஈழப் போராட்ட தலைவர்களும் தமிழ்நாட்டு தொடர்புகளும் பகுதி3
1983 கலவரத்துக்கு முற்பட்ட காலத்தில் இந்தியாவில் தலை மறைவாக இருந்த பல ஈழ ஆயுத தலைவர்களுக்கு தமிழ்நாட்டில் பலர் எம்ஜிஆர் அரசுக்கு பயப்படாமல் ரகசியமாக பல உதவிகள் செய்து வந்துள்ளார்கள். குறிப்பாக இ பி ஆர் இயக்கத்துக்கு அரண முறுவல் போன்ற தமிழ்நாட்டு தலைவர்கள் உதவி செய்துள்ளார்கள். இவர்களிடம் மற்ற இயக்கத் தலைவர்கள் போய் உதவி கேட்டாலும் இவர்கள் செய்து கொடுத்துள்ளார்கள்.
இப்படி பல பேர் உதவி செய்திருந்தாலும் எனக்கு நினைவில் நிற்கும் பெயர்களை மட்டும் தான் நான் குறிப்பிடுகிறேன். அப்படி உதவி செய்தவர்கள் இதை வாசிக்க நேர்ந்தால் என்னை தவறாக நினைக்க வேண்டாம்.
பவலேறு பெருஞ்சித்திரனார் அவர்களும் அவர் குடும்பமும், பெருஞ்சித்திரனார் அய்யா வழி நடத்திய தமிழ் இயக்கமும் அந்த இயக்கத்தைச் சேர்ந்த பல நண்பர்கள் எல்லா இயக்கங்களுக்கும் எல்லா வழிகளிலும் உதவி செய்துள்ளார்கள். யாருக்கும் அவர்களைப் பற்றி தெரியாது, அவர்களே பற்றி விசாரித்து பார்த்தால் கடைசியில் வந்து அவர்கள் நிற்பது ஐயா பெருஞ்சித்திரனார் தமிழ் இயக்கத்தில் உறுப்பினர் என்று.
தமிழ் இயக்கத்தில் உறுப்பினர்களோ இல்லை ஆதரவாளர்களோ தெரியாது பல முன்னாள் ராணுவ வீரர்கள் இயக்கங்களுக்கு தாமாக முன் வந்துபயிற்சிகள் கொடுத்தார்கள். பிற்காலத்தில் இவர்களைப் பற்றி உண்மைகளை அறியாதவர்கள் இவர்கள் raw அமைப்பு ஏற்பாடு செய்து கொடுத்த ராணுவ உளவாளிகள் என்று ஏதோ தங்களுக்கு தான் எல்லாம் தெரிந்த மாதிரி எழுதுகிறார் கள்.
இந்திய வெளிநாட்டு ரா உளவு அமைப்பு இயக்கங்களுடன் தொடர்பு ஏற்பட்டது 1983 கலவரங்களுக்கு பின்பு தான்.
1982 பிரபாகரன், உமா மகேஸ்வரன் பாண்டி பஜார் சூடு சம்பவத்துக்கு பின்பு இந்த சம்பவம் பற்றி விசாரிக்க மத்திய அரசால் இந்தியஉள்நாட்டு உளவுத்துறையான IB அமைப்பைசேர்ந்தரெண்டு உயர் அதிகாரிகள், சென்னை சென்ட்ரல் ஜெயிலுக்கு போய் தாங்கள் உள்துறை அமைச்சகத்தில் இருந்து வருவதாக கூறி இலங்கை சம்பந்தப்பட்ட, முழு விபரங்களும் இவர்கள் இயக்கம் சம்பந்தப்பட்ட முழு விபரங்களையும் திரட்டி உள்ளார்கள். இவர்கள் அனுப்பிய ரிப்போர்ட் நேரடியாக பிரதமர் மந்திரி இந்திரா காந்தியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று வரை பிரதம மந்திரி முதலில் சந்திப்பது ஐபி தலைவரை தான். சிறையில் உமா,பிரபாவை சந்தித்த அதிகாரிகள் பெயர், கோபால், ராமதாஸ். இவர்கள் இருவரும் 83 ஆம் ஆண்டு கலவரத்துக்கு பின்பு டெல்லியில் இலங்கை பிரச்சனை சம்பந்தமாக, டெல்லியில் விரிவாக உதவி செய்ய டெல்லி ஐபி தலைமையகத்துக்கு மாற்றப்பட்டார்கள்.
1983 ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதி நான் டெல்லி இலங்கை எம்பஸியில் பூந்து நோட்டீஸ் கொடுத்த போது கைது செய்யப்பட்டேன். உடன் இலங்கைக்கு கொண்டு போக முயற்சி செய்தபோது, அதை உடனடியாக ஜி பார்த்தசாரதி அவர்களிடம் கொண்டு போய் இந்திரா காந்தியின் பிரதம பாதுகாப்பு அதிகாரி நேரில் வந்து என்னை இலங்கை கொண்டு செல்வதே தடுத்தார். இதற்கு முழு காரணம் ஐபி அதிகாரி ராமதாஸ் தான். அவர் செய்த உதவி மறக்க முடியாது.
இந்த இரு அதிகாரிகளும் இயக்கத் தலைவர்களிடம் பல நல்ல ஆலோசனைகள் நட்பு முறையி
ல் வழங்கி இருந்தார்கள். அதில் எந்த விடுதலை இயக்கத் தலைவர்களும் இவர்களின் பேச்சை கொஞ்சம் கூட பொருட்படுத்தியதாக தெரியவில்லை. இ பி ஆர் எல் எஃப் இயக்கம் திருப்பதி கோயில் உண்டியலை கொள்ளையடிக்கும் முயற்சியில் போனபோது தடுத்து நிறுத்தி, பத்மநாபாவுக்கு அவர்களின் முட்டாள்தனத்தை உணர்த்தியது.ஐபி அதிகாரிகள் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை முன்னிட்டு எல்லா இயக்கத் தலைவர்களுக்கும் பல அறிவுரைகள் கூறினார்கள். இவர்கள் இதை தாங்களாக கூறி இருக்க மாட்டார்கள். மத்திய அரசின் அறிவுரைப்படி தான் கூறியிருப்பார்கள் என நினைக்கிறேன்
முக்கியமா எனக்கு நினைவில் இருக்கும் அறிவுரைகள்.
தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபடக்கூடாது
இந்திய அரசுக்கு எதிரான, தமிழ்நாட்டு அரசுக்கு எதிரான அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருக்கக் கூடாது
தமிழ்நாட்டில் இன்றும் தனிதமிழ்நாட்டு கனவுகளுடன் சிறு சிறு இயக்கங்கள் தலைமறைவாக இயங்கி வருகின்றன. அவர்களுடன் எந்தவித நேரடியாக மறைமுகமாக தொடர்பு கொள்ளும் வைத்துக் கொள்ளக் கூடாது.
உங்கள் பயிற்சி முகாம்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் அனுமதி கொடுக்கக் கூடாது. பிற்காலத்தில் இது இந்திய அரசுக்கு எதிராக முடியும்
இந்தியாவில் எந்தவித சட்ட விரோத நடவடிக்கைகள் மீதும்ஈடுபடக் கூடாது. இந்தியாவில் கொள்ளை அடிப்பது திருடுவது கடத்தல் போதை மருந்து வியாபாரம் செய்வது போன்ற எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது
ஆயுதங்கள் எதுவும் இலங்கைக்கு கொண்டு போவதாக இருந்தால் மறைமுகமாக மக்களுக்கு தெரியாமல் ஆயுதங்கள் கொண்டு செல்லுங்கள். பகிரங்கமாக நீங்கள் ஆயுதம் வைத்திருந்தால் லோக்கல் போலீஸ் உங்களை கைது செய்யக்கூடும். இது இந்தியாவின் சட்ட திட்டம்.
எப்படி இன்னும் பல அறிவுரைகள் ஆரம்ப காலத்தில்கூறினார்கள்.
இந்திய அதிகாரிகள் கூறிய எதையும் எந்த தலைவரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவர்கள் எது எதுசெய்ய வேண்டாம் என்று கூறினார்களோ அவற்றையே நாங்கள் செய்தோம்.
எங்கள் தலைவர் உமா மகேஸ்வரன் இவர்களைப் பற்றி கூறும் போது இவங்கள் கிடக்கிறார்கள் இவர்களை எப்படி சுழித்து ஓடுவது என்று எனக்குத் தெரியும் என்று கூறுவர்.
உண்மையில் 1983 ஆம் ஆண்டு இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிட யார் காரணம். இதில் எனக்கும் நேரடி அனுபவம் இருப்பதால் அடுத்த பகுதியில் எழுதுகிறேன்
தொடரும்
No comments:
Post a Comment