ஆரம்பகால ஈழ விடுதலை இயக்கத் தலைவர்களும் தமிழ்நாட்டு தொடர்புகளும் பகுதி 5
1983 ஏப்ரல் மாதம் பிரபாகரன் ராகவனும் மதுரையில் இருந்து ஜாமீனில் தப்பி ஓடிய பிறகு, உமா மகேஸ்வரனும் மற்ற இருவரும் தலைமறைவாக முடிவு செய்து, அதற்கு முன்பு கலைஞர் கருணாநிதி அவர்களை இரவு சந்தித்து பேச முடிவு செய்து, கலைஞர் அவர்களே சந்தித்த பின் தனது தலைமுறைவு முடிவை மாற்றிக்கொண்டார்.
எங்களிடம் அவர் கூறினார். கலைஞரை சந்தித்தபோது பிரபாகரன் அவர்களின் நிலையையும் தானும் தலைமறைவாக போவதாக கூறிய போது, அது ஏற்றுக் கொள்ளாத கலைஞர் கூறிய காரணங்கள் சரியான நேரத்தில் சொன்ன அறிவுரைகள்.
கலைஞர் கூறும் போது நீங்கள் இலங்கையில் ரகசிய விடுதலை அமைப்பை அமைத்து இருக்கிறீர்கள். உங்கள் உங்கள் இருவரின்தவறுகளால் பாண்டி பஜார் சம்பவம் நடந்தது. ஒரு பெரிய விடுதலை நோக்கத்தை கொண்டு செயல்பட்ட நீங்கள் இன்னொரு நாட்டில் சட்ட விரோதமாக ரகசியமாக இருக்கும் போது அப்படியான சம்பவங்கள் நடந்தால் உங்களை எல்லாம் எப்படி ஒரு பெரிய விடுதலை இயக்கத்தை நடத்தி மக்களுக்கு விடுதலையை எப்படி பெற்று தருவீர்கள் யார் நம்புவார் கள்.
பிரபாகரன் ராகவன் ஜாமீன் தப்பி ஓடியது தவறு. திரும்ப பிடிபட்டால் குற்றம் கடுமையாக்கப்பட்டு கட்டாயம் நாடு கடத்த ப்படுவீர்கள். அப்போது உங்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் குரல் கொடுக்க முடியாது.
உளவு அதிகாரி மோகனதாஸ், எம்ஜிஆரும் சேர்ந்து உங்களை இலகுவாக இலங்கையிடம் பிடித்துக் கொடுக்க முடியாது. வழக்குமுடிய வேண்டும். இப்போதும் உங்களுக்கு தலை மறைவு ஈழ தலைவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களும், அண்ணா திமுக தமிழ் உணர்ச்சிமிக்க உறுப்பினர்களும் உதவி செய்து வருகிறார்கள் அது எனக்கு தெரியும். உங்களை நாடு கடத்தினால் திராவிட முன்னேற்ற கட்சி ஒரு பெரிய போராட்டத்தை கட்டாயம் நடத்தி நாடு கடத்தலை முறியடிப்போம்.
நீங்கள் வழக்கை வெற்றிகரமாக நடத்தி முடித்து வெளியில் வந்தால், உங்களையெல்லாம் ஒரு விடுதலை இயக்க தலைவர்களுக்குரிய மரியாதை கிடைக்கும். ஜாமீனில் தலை மறைவு வாழ்க்கை நடத்தினால் இலங்கைக்கு போய் வாழ்வதும் கஷ்டம், இந்தியாவில் தொடர்ந்து இருப்பது கஷ்டம். தொடர்ந்து தலைமறைவு வாழ்க்கையில் ஒரு விடுதலை இயக்கத்தை நடத்த முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்
நாடு கடத்துவார்கள் என்ற ஒரு வதந்தி மட்டும்இருக்கும்போது நாங்கள் திமுக மற்றும் தமிழ் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினால், ஒரு பயனும்இருக்காது.
அப்படி ஒரு நிலை வந்தால் அது தமிழ்நாட்டில் உணர்ச்சிமிக்க ஒரு போராட்டமாக இருக்கும். அதோடு தற்சமயம் டெல்லியில் ஆளும்காங்கிரஸ் கட்சியோடு நாங்கள் கூட்டு சேர்ந்துள்ளோம். பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். நாங்கள் பிரதம மந்திரிக்கு டெல்லியில் நிலைமையை விளக்கி தமிழ்நாட்டு அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியும். பாண்டி பஜார் சம்பவத்தின் பின்பு இந்திய மத்திய அரசும் நிலைமைகளை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக எனக்கு அறியக்கூடியதாக உள்ள கலைஞர் கூறியுள்ளார். வழக்கு முடியும் வரை நீங்கள் குற்றவாளிகள் தான். நீங்கள் ஒரு நல்ல முடிவை எதிர்காலத்தை நினைவில் வைத்து எடுங்கள் என்று கூறியுள்ளார்
இதுதான் கலைஞர் உமா மகேஸ்வரனிடம் கூறிய அறிவுரைகளின் என் மனதில் நிற்கும் பகுதிகள்.
அடுத்து இரண்டொரு நாட்கள் அமைதியாக கழிந்தன திடீரென 30/04/1983 எனநினைக்கிறேன். சென்னையில் இருந்த மூவரின் ஜாமீனும் ரத்து செய்யப்பட்டு கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்தார்கள்.
இப்படி ஒரு நிலையை நாங்கள் எதிர்பார்த்திருந்தாலும், எங்களுக்கு கொடுத்த வேலைகளை ஒழுங்காக செய்து கொண்டிருந்தோம். எங்கள் முக்கிய தோழர்கள் கந்தசாமி மாறன் மாதவன் அண்ணா வழிகாட்டிக் கொண்டு இருந்தார்கள். திடீரென புலவர் புலமைப்பித்தன் அவர்களே இலங்கையிடம் பிடித்துக் கொடுக்க ஒரு பேச்சு வார்த்தை ரகசியமாக நடப்பதாக கூறி எங்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
அப்போது எங்களுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவழகன், ராமசாமி தமிழ்மணி, சாமிதவிடன், பெருஞ்சித்திரனார் அய்யா, விடுதலை இயக்கத் தலைவர் வீரமணி, விடுதலை இயக்க பகுத்தறிவாளர் சங்க தலைவர் ரத்தினகிரி, எழுத்தாளர் பத்திரிகையாளர் மறை மலையான் போன்றவர்கள் ரகசியமாக பல உதவிகள் செய்தார்கள்.
எங்கள் தோழர்கள் மாறனும் கந்தசாமியும் உமா மகேஸ்வரனை காப்பாற்ற முடிவெடுத்து பலத்திட்டங்கள் போட்டார்கள். பலநாள் என்னை சென்னை மத்திய சிறையில் காலையிலிருந்து மாலை வரை பார்வையாளர் இருக்கும் இடத்தில் நிறுத்தி வைத்து அவதானிக்க சொன்னார்கள். இப்போது நினைக்க அந்த செயல்கள் எவ்வளவு சிறு பிள்ளைத்தனமானது என்று நினைக்க தோன்றுகிறது.
இங்கு நடந்த சம்பவங்களை கேள்விப்பட்டு உடனடியாக சந்ததியர் தமிழ்நாட்டுக்கு வந்து எங்களது செயல்பாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்தார். அதோடு ரகசியமாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை சென்று சந்தித்து நிலைமைகளை தெளிவுபடுத்தி ஆராய்ந்தார்.
1983 ஜூலை மாத ஆரம்பத்தில் இலங்கை போலீஸ் அதிபர் ருத்ரராஜா சிங்கம் சென்னை வந்து தமிழக அரசு அதிகாரிகளை சந்தித்து பேச தொடங்கினார்.
உடனடியாக எங்கள் ஆதரவு அரசியல்வாதிகள் தமிழ் அறிஞர்கள் கலைஞரை போய் சந்தித்து உதவி கேளுங்கள் என்று கூறினார்.
சந்ததியார் என்னையும், தமிழ்நாட்டு ஆதரவாளர் இளவழகனையும் அழைத்துக் கொண்டு, திமுக ராஜ்யசபா பாராளுமன்ற உறுப்பினர் தஞ்சாவூர் சேர்ந்த எல். கணேசன் அவர்களை போய் நேரில் சந்தித்தோம்.
தொடரும்.
No comments:
Post a Comment