ஆயிரக்கணக்கான போராட்டங்கள் ஆயிரக்கணக்கான உயிர் பலிகள் உடைமைகள் எல்லாம் இழந்து இன்று நாள் 2023 ஆம் ஆண்டில் இலங்கை தமிழர்கள் குறிப்பாக யாழ்ப்பாண தமிழர்கள் என்று கூறலாம். அவர்களின் நிலை என்ன?
1970களில் பிற்பகுதியில் 1980 என்பது காலப்பகுதிகளில் தமிழரசு கட்சி பின்பு தமிழர் விடுதலை கூட்டணி என்ற கட்சிகளின் பெயர்களில்இலங்கை பாராளுமன்ற பதவிகளை பிடிக்க வேண்டும் என்ற பேராசையால் மட்டுமே தமிழ் இளைஞர்களை உசுப்பேத்தி உசுப்பேத்தி தமிழ் ஈழம் என்ற கோஷத்தை முன்வைத்து, தங்களது அரசியல் எதிரிகளை துரோகிகள் என்று இளைஞர்கள் முன் கூறி, தமிழ் தலைவர்கள் குறிப்பாக அமிர்தலிங்கம் போன்றவர்கள் தங்களது அரசியல் எதிரிகளை தங்களுக்கு அரசியல் போட்டிகள் இருக்கக் கூடாது என்பதற்காக நல்ல தமிழ் தலைவர்களை கொலை செய்து விட்டார்கள். இக் கொலைகளுக்கு பயன்பட்ட இளைஞர்கள் உண்மையில் தாங்கள் அன்று தமிழ் ஈழம் கிடைப்பதற்கு தடையாக இருந்தமிகப்பெரிய துரோகிகளை கொலை செய்து விட்டோம் என்று நம்பினார்கள். உண்மையில் அன்றிருந்த தமிழ் தலைவர்களால் இவர்கள் கூலிப்படையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
தாங்கள் கூலிப்படையாக செயல்பட்டது பற்றி அறியாத இளைஞர்கள் தாங்கள் உண்மையில் சிறந்த விடுதலைப் போராட்ட தலைவர்கள் என்று நினைத்து பல இயக்கங்களை கட்டமைத்து, துரோகிகள் என்று கூறி பல சக தோழர்களையும் கொலை செய்து மற்ற இயக்க தோழர்களையும் கொலை செய்து முற்றாக தமிழ்ஈழ கனவை மட்டுமல்ல இருந்த உரிமைகளையும் பறி கொடுக்க செய்தார்கள். அது மட்டுமல்ல இதுவரை தமிழர்கள் உரிமை கொண்டாடிய தமிழ் நிலத்தையும் பல இடங்களில் பறி கொடுத்தார்கள்.
அதைவிட 1970 ஆண்டுகளில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே சட்ட விரோதமாக கடத்தல் செய்தவர்கள், அவர்களை பிடிக்க, உளவு பார்க்க சென்ற அப்பாவி தமிழ் போலீஸ்காரர்களை அவர்கள் தங்கள் கடமையை செய்வது தங்கள் கடத்தல் தொழிலுக்கு ஆபத்தென்று அன்று பல போலீசாரை கொலை செய்தார்கள். பிற்காலத்தில் இந்த கொலைகள் தமிழ்ஈழ போராட்டத்துக்காக செய்ததாக கதைகள் பரப்பப்பட்டன. அதோடு இந்தக் கடத்தல்காரர்கள் பிற்காலத்தில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு உதவிகள் ஒரு பக்கம் செய்ததால் இவர்களும் ஆரம்ப காலத்தில் இருந்து மற்றவர்களுக்கு தெரியாமல் ரகசியமாகஈழ விடுதலைக்காக பாடுபட்டவர்கள் என்று தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
ஈழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் இலங்கை தமிழ் பகுதிகளில் விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த பணம் வேண்டும் என்று பல விடுதலை இயக்கங்கள் வங்கிகள் தனியார் நிதி நிறுவனங்கள் வட்டி கடைகள் என்றும் அதைவிட மக்களின் அன்றாட தொடர்பிலிருந்த பல நோக்குக் கூட்டுறவு சங்கங்களில் கூட பணத்தை கொள்ளை அடித்தனர். அன்று மக்கள் கூட அதை ஏற்றுக் கொண்டனர். பின்பு போலீசார் தேடத் தொடங்க தலைவர்கள் என்போர் பணத்துடன் இந்தியாவில் வந்து பாதுகாப்பாக தங்கி விட்டனர். இவர்களை தேடி தெரிந்த இலங்கை போலீசார் பல அப்பாவி தமிழர்களை பிடித்து சித்திரவதை செய்தனர். எல்லா ஆசிய நாடுகளிலும் பொதுவான ஒரு செயல் தாங்கள் தேடும் குற்றவாளிகள் தப்பிவிட்டால் அப்பாவி மக்களை பிடித்து சித்திரவதை செய்து உண்மை குற்றவாளிகளை தேடுவார்கள். இப்படி எங்கள் நாட்டில் நடக்கும் போது அரசியல்வாதிகளும் விடுதலை இயக்கத் தலைவர்களும் இலங்கையில் போலீஸ் காவலர்களும், ராணுவத்தினரும் தமிழ் மக்களை சித்திரவதை செய்கிறார்கள் என்று கூட்டி குறைத்து பிரச்சாரங்கள் செய்து தங்கள் வளர்ச்சியை பார்த்துக் கொண்டார்கள். அண்மையில் ஒரு மூத்த தமிழ் வழக்கறிஞர் ஒரு பதிவில் 1974 ஆம் ஆண்டு உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் போலீசாரும் ராணுவத்தினரும் சேர்ந்து கலவரத்தை உருவாக்கினார்கள் என்று எழுதியிருந்தார். அப்போது நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது அறிந்தது போலீசார் மட்டுமே .ராணுவத்தினர் இது சம்பந்தப்பட்டிருப்பது உண்மையா என்று விபரம் தெரிந்த நண்பர்கள் கூறினால் நலமாக இருக்கும்.
இலங்கையில் போலீசாருக்கு பயந்து தலைமறைவான இளைஞர்கள் தங்களிடம் இருந்த பணத்தைக் கொண்டு புதுப்புது இயக்கங்கள் கண்டார்கள். பொறாமை போட்டியில் கொடுத்தார் தமிழ்நாடு சூடு பட்டார்கள். இதெல்லாம் நமது ஈழப் போராட்டத்தின் ஒரு பகுதி என்றார்கள். எதிரிகளை அழிப்பது துரோகிகளை அழிப்பது என்று.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு இயக்கத் தலைவர்களிடம் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் இந்தியா தமிழ்நாடு கொண்டுவரப்பட்டு, இந்திய அரசிடம் பயிற்சியும் ஆயுதங்களும் பெற்றுக் கொண்டு அவர்களை போராட்ட களத்துக்கு அனுப்பாமல் பல முகாம்கள் அமைத்து நூற்றுக்கணக்கான திறமையான இளைஞர்களை அடிமைகள் போல் முகாம்களில் வைத்திருந்து அவர்களை சொந்த வீட்டுக்கும் சொந்த நாட்டுக்கும் எவ்வித பிரயோஜனம் படாமல் அவர் அடிமைகள் போல் வைத்திருந்த போது அவர்கள் கடுமையாக வாய் திறந்தால் அவர்கள் துரோகிகள் இலங்கை அரசின் உளவாளிகள் என்று நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அதையும் ஈழ விடுதலையின் பெயரால் ஏற்றுக் கொண்டோம்.
அடக்குமுறைகள் அடங்காமல் இளைஞர்கள் பிரிந்த போது இது இந்திய உளவுத்துறையின் வேலை, அவர்கள் தான் இயக்கங்களை உடைக்கிறார்கள் என்று இன்றுவரை பலர் எழுதி வருகிறார்கள் பலரும் நம்புகிறார்கள். ஆனால் ஈழ விடுதலை இயக்க தலைவர்கள் இன்றும் புனிதர்கள் போல் எழுதப்படுகிறார்கள். போற்றப்படுகிறார்கள். தனிப்பட்ட முறையில் அத்தலைவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் ஒரு விடுதலை இயக்க தலைவர்கள் என்ற முறையில் அவர்கள் செய்தகொலைகள் கொள்ளைகள் சமூக விரோத செயல்கள் போதை மருந்து கடத்தல் போன்றவை அவர்களை தலைவர்களாக காட்டவில்லை என்பதே உண்மை. இவர்களால் தமிழ் மக்களுக்கு எந்த வித நன்மையும் கிடைக்கவில்லை. அண்மையில் ஒரு தலைவருக்கு சிலை வைத்துள்ளார்கள். அவர் தனிப்பட்ட முறையில் நல்லவர் தான். அவரால் ஈழ விடுதலைப் போராட்டத்தில் என்ன நன்மை கிடைத்தது அவர் செய்த சாதனை என்ன? இந்திய அமைதிப்படை காலத்தில் அவர் இருந்த இயக்கத்தின் தலைமையில் நடந்த அப்பாவி தமிழ் இளைஞர்களின் பொதுமக்களின் கொலைகளை ஏன் அவர் தடுக்க முன் வரவில்லை. அந்த இரண்டு ஆண்டு காலம் தமிழ் இளைஞர்கள் தான் கொலை செய்யப்பட்டார்கள். என்ன சிங்கள அரசு செய்ய வேண்டிய தமிழர்களை கொலை செய்யும் வேலையை இவர்களை செய்தார்கள்., அதையே விடுதலைப் புலிகளும் செய்துசிங்கள அரசுடன் நட்பெயரும் பெற்றுக் கொண்டார்கள்.
தமிழ்நாட்டில் இருக்கும் போது ஆரம்பத்தில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் நல்ல உதவிகளை பெற்றுக் கொண்டார்கள். அதோடு இந்திய அரசிடம் பயிற்சிகளும் பணமும் ஆயுதங்களும் பெற்றுக் கொண்டு, இந்திய நாட்டு அரசுக்கு எதிரான தலைமறைவு இயக்கங்கள் புரட்சிகர இயக்கங்கள் தனி தமிழ்நாட்டு கொள்கை கொண்ட சிறு சிறு விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுத்தார்கள். இது ஒரு பக்கம் புதுடில்லி வந்து எல்லா இயக்கங்களும் நாங்கள் தான் இந்திய விசுவாசிகள் எங்களுக்கு ஆயுதம் தாங்கள் பணம் தாருங்கள் என்று கெஞ்சுவார்கள். மறுபக்கம் தங்களே இந்திய அரசுக்கு எதிரானவர்கள் நாங்கள் புரட்சி கரர்கள் கம்யூனிஸ்டு சோசியலிச சித்தாந்தங்கள் கொண்டவர்கள் என்று மக்கள் முன் பலவித வேடங்களை போட்டவர்கள் தான் இந்த தலைவர்கள்.
அவர்கள் பொதுமக்களை மட்டுமல்ல சொந்த இயக்க தோழர்களேயே ஏமாற்றியவர்கள்..
83 ஆம் ஆண்டுக்கு முன்பு சிங்கள பகுதிகளில் இருந்த தமிழர்கள் அடி வாங்கும் போது வடபகுதி தமிழர்கள் சந்தோசப்பட்டார்கள். ஏதோ விடுதலை கிட்ட வந்து விட்ட மாதிரி. அதோடு அவர்கள் நினைத்தது வடபகுதியை சிங்களவர்கள் தாக்கினால் இந்தியா உள்ளே வந்து சிங்களர்களை தாக்கும் என்று. கலவரம் நடக்கும் காலங்களில் எல்லோரும் ஆல் இந்திய ரேடியோ செய்திகளையும், பிலிப்பைன்ஸ் வெறி தாஸ் ரேடியோவையும் காதுக்கு அருகிலேயே வைத்துக் கொண்டிருப்பார்கள். தமிழ்நாட்டில் இலங்கைக்கு எதிராகநடக்கும் போராட்டங்கள் பற்றி எல்லோரிடமும் சொல்லி சந்தோஷப்படுவார்கள். கடைசியில் இயக்கங்களின் புண்ணியத்தால், இந்தியா இலங்கையில் தனது மேலாதிக்கத்தை வைத்திருக்க இயக்கங்களை பயன் படுத்தியது. அரசியல் திறமையற்ற விடுதலை இயக்கத் தலைவர்கள் இந்த சந்தர்ப்பத்தை இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவாக பாதுகாப்பாக ஓரளவு சரி உரிமைகளை மீட்க பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனாலும் ஒவ்வொரு இயக்கமும் மற்ற மற்ற இயக்கங்களை அழிப்பதிலும் தமிழ் மக்களை அழிப்பதிலும் கவனம் செலுத்திக் கொண்டனர். ஆனால் இந்தியா தங்களை காக்கும் என்று நம்பிய பெரும்பான்மையான இலங்கை தமிழ்மக்கள் அதிர்ச்சி அடையும் வண்ணம், தமிழ் மக்களை பாதுகாக்க என்று போராடிய இயக்கங்கள் தங்கள் திறமையால் இந்திய அமைதிப்படையையே தமிழருக்கு எதிரியாக்கி சிங்கள ராணுவம் செய்த தமிழர்களின் கொலையை விட , இந்தியா அமைதிப்படையும் அவர்களுடன் இருந்த தமிழ் விடுதலை இயக்கங்களும் இவர்களுக்கு எதிராக இருந்த விடுதலைப் புலிகளும் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இலங்கைத் தமிழர்களை ரெண்டு பக்கமும் இருந்து கொன்று குவித்தார்கள். அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கேட்ட ஒன்று இரண்டு நல்ல உள்ளங்களும் இரண்டு பக்கத்தாலும் கொலை செய்யப்பட்டார்கள். அநீதிகளை தட்டிகேட்ட நல்லவர்களை ஆண் என்றும் பாராமல் பெண்ணென்றும் பராமெல் கொலை செய்வதில் மட்டும் எல்லா விடுதலை இயக்கங்களும் இந்திய அமைதிப்படையும் ஒற்றுமையாக இருந்தன. கடைசியில் இந்தியாவின் மேலாதிக்க ஆசையும் நிறைவேறவில்லை தமிழர்களின் பாதுகாப்பு , உரிமைகள் பற்றிய ஆசைகளும் தகுதியற்றதமிழ் ஆயுத தலைவர்களால் நிறைவேறவில்லை
அதற்குப் பிறகு சும்மா இருந்தார்களா? விடுதலை புலிகள் இலங்கை அரசோடு நட்பு கொண்டு எதிரிக்கு எதிரி நண்பன் சிங்களவர்கள் எங்கள் சகோதரர்கள் என்று கூறிக்கொண்டு நாங்கள் அண்ணன் தம்பிகள் என்று அறிக்கை விட்டு மகிழ்ந்து இந்திய படையை நாடு கடத்தினார்கள்.
பின்பு அண்ணன் தம்பி சண்டை பிடித்தார்கள். இலங்கை அரசால் ஆயுதப் பலம் பெற்ற புலிகள் மற்ற இயக்கங்களையும் அவர்கள் ஆதரவாளர்கள் என்று கூறி பல பொதுமக்களையும் சித்திரவதை செய்தார்கள் கொன்றார்கள். மற்ற இயக்கங்கள் உடனடியாக இலங்கை ராணுவத்தோடு சேர்ந்து புலிகளை அழிக்கிறேன் என்று தங்கள் பங்குக்கு புலி ஆதரவாளர்கள் என பல பொது மக்களையும் பெண்களையும் கற்பழித்து சித்திரவதை செய்து கொன்று குவித்தார்கள்.
எல்லா இயக்கங்களும் அதன் தலைவர்களும் கோடி கோடியாக பணம் குவித்தார்கள் சொத்துக்கள் குவித்தார்கள். 2009 ஆண்டு இலங்கைய அரசாங்கம் மிக மிக புத்திசாலித்தனமாக இந்தியா உட்பட நான் அவர்களின் ஆதரவோடு விடுதலை புலிகளை மட்டும் அல்ல ஆயிரக்கணக்கான தமிழர்களையும் கொன்று குவித்து, தமிழர் நிலப்பரப்புகளையும் கைப்பற்றி தமிழினத்தை காக்க புறப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்களையும், ஆயுத குழுக்களின் தலைவர்களையும் தனது அடிமையாக செயல்பட வைத்தது.
அதோடு இவ்வளவு அழிவுக்கும் காரணமான ஆயுதம் தூக்கிய தலைவர்கள் வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு அரசியல்வாதிகளாக அவதாரம் எடுத்து திரும்பவும் தமிழ் மக்களின் உரிமைக்காகவும் பாதுகாப்பான வாழ்வுக்காகவும் தாங்கள் குரல் கொடுக்க தங்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்று பதவிக்காகவும் பணத்துக்காகவும் நாய் போல அலைகிறார்கள். அது மட்டுமல்ல இலங்கை அரசின் விருப்பப்படி தொடர்ந்து இந்தியாவை தமிழர்களின் பகையாளியாக வைத்திருக்க 2009 இல் நடந்த தமிழ் இனப்படுகொலைக்கு இந்தியா தான் காரணம் தமிழ்நாட்டின் கலைஞர் கருணாநிதி தான் காரணம் என்று இன்று வரை பிரச்சாரம். நாங்கள் விட்ட தவறுகள் பற்றி அந்தத் தலைவர்கள்யாரும் கொஞ்சம் கூட வாய் திறப்பதில்லை. இவர்களது பிரச்சாரத்தால் இந்திய நாட்டுக்கோ தமிழ்நாட்டுக்கோ எந்த வித பாதிப்பும் இல்லை. இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கோ இந்த போராட்டத்தால் வெளிநாடுகளில் தஞ்சமடைந்து இன்று வசதி வாய்ப்பு உடன் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் பாதிப்படைய போவதில்லை. இந்தியாவில் அகதிகளாக இருக்கும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் தமிழர்கள் தான் பதிக்கப்படுவார்கள். இதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இப்போதுதான் தமிழ்நாடு அரசாங்கம் தனது வரையறைக்குள் செய்யக்கூடிய உதவிகளை செய்ய தொடங்கியுள்ளது.
அன்று ஒவ்வொரு இயக்கமும் தமிழ்நாட்டில் இருந்து தலைவர்களை , நடிகர் நடிகைகளை வெளி நாடுகளுக்கு அழைத்து அவர்களைக் காட்டி பணம் சேகரித்தோம். வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் நடிகர் நடிகைகளுக்கு குறிப்பாக நடிகைகளுக்கு பெருந்தொகை பணத்தை அள்ளி வீசிய கதையெல்லாம் உண்டு.
இன்று தமிழ்நாட்டு மக்களை துரோகிகள் நன்றி கெட்டவர்கள் என்று தூற்றும் பல முகநூல் அறிவாளிகள், தமிழ்நாட்டுக்கு வரும் போது, இப்பொழுதும் கூட சினிமா படப்பிடிப்புகள் நடக்கும் இடங்களை தேடி பிடித்து போய் நடிகர் நடிகர்களோடு நடிகைகளோடு போட்டி போட்டுக்கொண்டு போட்டோ எடுப்பதும், செல்பி எடுப்பது தொடர் கதை. ஆனால் முக நூல் களில் எழுதும்போது தமிழ்நாட்டு சினிமா தமிழர்களின் கலாச்சாரத்தை கொடுக்கிறது என்று எழுதுவார்கள்.
கடைசியாக முக்கியமானது இலங்கையில் ஆயுதப் போராட்ட கலாச்சாரம் வருவதற்கு முன் ஒற்றுமையாக இருந்த சைவ கிறிஸ்தவ முஸ்லிம் மத அடையாளங்கள் அவரவர்களின் விருப்பப்பட்டு வணங்கினார்கள் கடவுள்களை. மத மாற்றங்கள் இருக்கவில்லை. இன்று இந்தியாவில் இருந்து ஹிந்து கிறிஸ்தவ அடையாளத்தோடு பலரை அழைத்து சமயப் பிரச்சாரங்கள் நடக்கின்றன. இவர்கள் திட்டமிடப்பட்டு அழைத்துவரப்பட்டு மிஞ்சி இருக்கும் இலங்கை தமிழர்களையும் முன்பு இயக்க ரீதியில் அடிப்பட்டு செத்தது போக, மிச்சம் இருக்கு தமிழர்களையும் மத ரீதியில் அடிப்பட்டு சாவதற்கு யார் பின்னணியில் இருக்கிறார்கள். 2009இல் உதவி செய்த அதே நாடுகள் தான் இதிலும் பின்னணியாக இருக்க கூடும். இந்தியாவில் இருந்து கூட்டி வரப்படும் இந்து கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் யாரும் இந்தியாவில் மக்களை நல்வழிப்படுத்தியவர்கள் இல்லை எப்படியாயினும் பணம் சம்பாதிப்பது மதத்தை வைத்து மக்களை அடித்துக் கொள்ள வைப்பது போன்ற செயல்களில் உள்ளவர்கள். உண்மையில் அவர்களுக்கு கடவுள் பக்தியும் இல்லை மதப் பக்தியும் இல்லை. இன்று இலங்கையில்படித்த பண்பானவர் சிலரும் இந்தியாவில் இருந்து மதவெறி பிடித்தவர்களை அழைத்து தமிழ் மக்களுடைய பிரச்சாரம் செய்வது மிகவும் கவலை தருகிறது. இலங்கை தமிழர்களுக்கு தெரியாத கடவுள் பக்தியா.
ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் இருக்கும் தமிழ் தலைவர்கள் பணம் பதவிகளுக்காக ஒரு பக்கம் அடிபடுகிறார்கள். மறுபக்கம் இலங்கை தமிழ் இனத்துக்கு எதிராக நடைபெறும் சாதி சமய சூழ்ச்சிகளைப் பற்றி இவர்கள் கவலைப்படவில்லை. இந்திய அரசாங்கம் தனது நாட்டில் அரசு சார்பில் மதப் பிரச்சாரங்கள் செய்வதில்லை. ஆனால் இலங்கையில் இந்திய தூதரகம் மூலம் மதப் பிரச்சாரம் செய்யப்படுவதாக போஸ்டர் அடித்துள்ளார்கள். இது உண்மையா? அப்படி இருந்தால் மிகவும் பயங்கரமான கஷ்டங்களை இலங்கை வாழ் தமிழர்கள் சமய போராட்டங்கள் மூலம் அடைய வேண்டி வரலாம். இந்தியாவில் இருந்து இந்து சமய தலைவர்களையும் கிறிஸ்தவ மதப் போதார்களையும் இலங்கைக்கு அழைத்து வரவேற்பதை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். எந்தக் கடவுளையும் கெட்டது செய்யாமல் மன அமைதியோடு எங்களுக்கு தெரிந்த முறையில் வணங்கினாலே போதுமானது. கடவுளை கும்பிடுவது பற்றி யாரும் இலங்கை தமிழர்களுக்கு போதிக்க வெளிநாட்டிலிருந்து வரவேண்டிய தேவை இல்லை. எனது இந்த பதிவு பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் என் மனதில் தோன்றிய எண்ணங்களை பதிய வேண்டும் என்ற நோக்கில் பதிகிறேன். இந்த பதிவு பிடிக்காதவர்கள் பார்க்காமலே போய்விடுங்கள். இந்த பதிவுக்கு தரக்குறைவான கருத்துக்களை போடுபவர்கள் தடை செய்யப்படுவார்கள். எனது எண்ண கருத்தை எனது முகநூலில் போடுவதற்கு எனக்கு உரிமை உள்ளது..
No comments:
Post a Comment