தமிழரசு கட்சி பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணி இதன் தலைவர்களின் இலங்கை நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்ற பதவி ஆசையால், பல இளைஞர்களை சுதந்திர தமிழ் ஈழம் ஆசை காட்டி அவர்களைக் கொண்டு, தங்களுக்குப் பதவிக்கு வர தடையாகஇருக்கும்,மக்களுக்கு சேவை செய்யும் மாற்றுக் கட்சி தலைவர்களையும் ஆதரவாளர்களையும் துரோகிகள் என்று கூறி கொலை செய்து பாராளுமன்ற கதிரைகளை கைப்பற்றினார்கள்.
இவர்களுக்கு கூலிப்படையாக (இப்படி சொல்வது பல பேருக்கு கோபமாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கடைசி வரை அப்படித்தான் செயல்பட்டார்கள்) செயல்பட்ட இளைஞர்கள் எல்லோரும் ஈழவிடுதலை விடுதலை என்ற பெயரில்இயக்கங்களை ஆரம்பித்து, கொலை , கொள்ளைகளை இலங்கையில் செய்து விட்டு போலீஸ் தேடும்போது தலைவர்கள் மட்டும் பாதுகாப்பாக இந்தியாவில் வந்து இருந்து கொண்டு, இலங்கையில் இருந்து கொண்டு வளர்க்க வேண்டிய விடுதலை இயக்கங்களை இந்திய உதவியுடன் தமிழ்நாட்டில் முகாம்கள் அமைத்து இந்திய அரசின் பயிற்சி ஆயுதங்களுடன் வளர்த்தனர்.
தலைவர்கள் இந்தியாவில் மிகவும் பாதுகாப்புடன் இருக்க, சொல்ல போனால் பல தலைவர்களுக்கு சொகுசான வாழ்க்கையாக இருந்தது.
இலங்கையில் ஒவ்வொரு இயக்கங்களையும் இலங்கை ராணுவம் இலங்கை போலீஸ் மற்ற இயக்கங்களின் போட்டிகளில் இருந்து பாதுகாத்து வந்தவர்கள்உண்மையைச் சொல்லப் போனால் இலங்கையில் இருந்து இயக்கங்களை பாதுகாத்தவர்கள் தான் உண்மையான தலைவர்கள். தமிழ்நாட்டில் இயக்கம் வளர்த்த தலைவர்கள் நடந்து கொண்ட முறைகள் தமிழ்நாட்டில் நடந்த இயக்க உட்கொலைகள் பற்றி எல்லாம் கேள்விப்பட்ட இலங்கையில் இருந்த தலைவர்கள் கோபப்பட்டு இந்தியாவில் இருந்த தலைவர்களிடம் கேள்வி கேட்க, இயக்க நலனுக்காக உண்மையாக பாடுபட்ட இலங்கையில் இருந்த தலைவர்களை கொலை செய்ய தமிழ்நாட்டில் இருந்து ஆட்களை அனுப்பிய இயக்கத் தலைவர்களும் உண்டு.
இலங்கையில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இயக்கங்களை வளர்த்த தலைவர்கள், பலர் கொல்லப்பட்டுள்ளார்கள் அவர்களைப் பற்றி எல்லாம் தமிழ்நாட்டில் இருந்த தலைவர்கள் பெரிதாக கவலைப்படவில்லை. இந்தியாவில் இருந்த ஆயிரக்கணக்கான இயக்க உறுப்பினர்களுக்கும் அவர்களைப் பற்றிய பெரிய அபிப்பிராயங்கள் இருக்கவில்லை அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் கவலைப்படவும் பெரிய அளவில் தமிழ்நாட்டில் இருக்கவில்லை. ஆனால் எல்லோரையும் ஏமாற்றி கொலை கொள்ளை கொள்ளைகள் போதை மருந்து கடத்தி இயக்க அங்கத்தவர்களை ஏமாற்றிய தலைவர்களைப் பற்றி அன்றும் சரி என்றும் சரி போதும் கூட புகழ்ந்து புகழ்ந்து எழுதுகிறார்கள். அந்தத் தலைவர் இருந்து இருந்தால் இப்படி நடந்திருக்கும், இந்த தலைவர் இப்படி செய்திருப்பார் என்று நா கூச்சம் இன்றி எழுதுகிறார்கள். அப்படி எழுதுபவர்கள் அவர்கள் இருந்தபோது இயக்க வளர்ச்சிக்கும் இயக்க தோழர்களுக்கு பாதுகாப்புக்காகவும் இலங்கை தமிழ் மக்களுக்காகவும் என்ன சாதனை செய்தார்கள் என்று இன்று வரை எழுதுவதில்லை. இந்த விடுதலை இயக்கத் தலைவர்கள் செய்த சாதனைகள் தான் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் அழிவும் தமிழர்களின் இருந்த உரிமைகளை இழப்பு ஆகும் இதை விட இந்த இயக்க தலைவர்கள் என்ன செய்தார்கள். முப்படைகள் வைத்திருந்தார்கள், தமிழ் நிலத்தை ஆட்சி செய்தார்கள் தற்கொலை படைகள் வைத்து சிங்கள அரசாங்கத்தை நிலைகுலைய செய்தார்கள். உண்மைதான் முடிவு என்ன? ஆயிரக்கணக்கான போராளிகளின் உயிர் தியாகத்துக்கும் என்ன பலன்? இவர்கள் உயிர்த்தியாகம் செய்ததால் தமிழ் மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது. இவர்கள் உயிர்தியாகம் செய்தது இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் பாதுகாப்பாக , வாழ்வார்கள் என்று நம்பிக்கையோடு தான். ஆனால் இவர்கள் செய்த உயிர்த் தியாகத்தை இயக்க தலைமையின் புகழ் பாடவும், பணம் சேர்க்கவுமே அவர்களால் முடிந்தது. தமிழ்நாட்டிலும் சில தலைவர்கள் தங்களை வளர்த்துக் கொள்ள, முப்படைக்கண்ட தலைவர் தற்கொலை படை கொண்ட தலைவர் என்று ஏகத்துக்கும் புகழ்ந்து புகழ்ந்து பிரச்சாரங்கள் செய்து தலைவர் உண்மை நிலையை அறியாது
பார்த்துக்கொண்டார்கள் அதோடு பணமும் பார்த்துக் கொண்டார்கள்.
இந்தியாவில் இருந்த இயக்கங்கள் வளர்ச்சி பெற்றதை விட, நோயால் உடல் உறுப்பு வீக்கம் அடைவதை வளர்ச்சி என்று நினைத்ததை போல இயக்கத் தலைவர்கள் நினைத்துக் கொண்டார்கள். அதனால் வீக்கம் உடைய, இயக்கங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் உடைந்து சிதறின. உடனடியாக இயக்கத் தலைமைகள் தங்கள் திறமையின்மையை மறைக்க இதற்கெல்லாம் காரணம் இந்திய ரா உளவுத்துறை தான் என்று கூறி தங்கள் தலைமை விட்ட தவறைமறைத்து விட்டார்கள். இன்றும் கூட பல படித்த அறிவாளிகள் நடந்த உண்மைகளை ஆராய்ந்து பார்க்காமல் அந்தத் தலைவர்கள் விட்ட தவறை எழுதத் தெரியாமல் இருக்கிறார்கள்.
இந்தியாவில் மற்ற இயக்க தலைமைகள் தங்கள் தலைமையை காப்பாற்ற போராடிக் கொண்ட நேரத்தில் , விடுதலைப்புலிகள் இலங்கையில் வெற்றிகரமாக மற்ற இயக்கங்களை போராட்ட களத்தில் இருந்து அகற்றி அழித்தும் விட்டார்கள். இதை தமிழ்நாட்டில் இருந்த விடுதலைப் புலி ஆதரவான தலைவர்கள் துரோகிகள் அழி க்கப்பட்டனர். எனபிரச்சாரம் செய்து மகிழ்ந்தனர். தமிழ்நாட்டின் சில தலைவர்களை பொருத்தவரை விடுதலைப் புலிகள் என்ன செய்தாலும் சரி, மற்ற இயக்கங்கள் இயக்கத் உறுப்பினர்கள் எல்லாம் விடுதலைக்காக வரவில்லை விடுதலை புலிகளுக்கு துரோகம் செய்யத்தான் வந்தார்கள் என்ற நினைப்பில் தான் 2009 வரை இருந்தார்கள். இப்படியான தமிழ்நாட்டுத் தலைவர்கள் மக்கள் செல்வாக்கு இல்லாதவர்கள் தமிழ்நாட்டில் அவர்களால் தேர்தல்களில் போட்டியிட்டால் வெல்ல முடியாதவர்கள். அதனால் அவர்கள் கூடுதலாக தமிழ் நாட்டு பிரச்சினைகளைப் பற்றி பேச மாட்டார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் சாதி சமய மக்களுக்கு இடையின சண்டைகள் பற்றி கருத்து கூட தெரிவிக்க தயங்குவார்கள். ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இயக்கங்களை ஒரே வரியில் துரோகிகள் என்று மட்டும் குறி மகிழ்ச்சி அடைந்து பணமும் பெறுவார்கள்.
போட்டிகள் பொறாமைகள் இருந்தாலும்இலங்கையில் சகல இயக்கங்களும் இருந்த பொழுது இலங்கை ராணுவம் ராணுவ முகாம்களில் முடக்கப்பட்டு இருந்தனர். முன்னரங்குகளில் பாதுகாப்பில் இருந்த வெவ்வேறு இயக்கத் தோழர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் வெறுப்பை காட்டினாலும் ராணுவம் வெளிவரும்போது ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் உதவியாக இருந்துள்ளதாக தகவல்கள் உள்ளன. எப்போது விடுதலை புலிகள் மற்ற இயக்கங்களை கொலை செய்தும் அழித்தும், விட்டார்களோ அன்று இலங்கைராணுவம் மகிழ்ச்சியில் இருந்ததாக அப்போது செய்திகள் வந்தன. தாங்கள் செய்ய வேண்டிய இயக்கங்களை அழிக்கும் வேலையே விடுதலை புலிகளே செய்து விட்டது தான் காரணம்.
மற்ற இயக்கங்களை அழித்த பின்பு விடுதலை புலி தலைவர் பிரபாகரன் இனி மற்ற இயக்கங்களால் தனக்கு பயமில்லை என்று இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பயணமானார். அங்கும் அவர் விடுதலைப் புலிகள் இயக்க உள் முரண்பாடுகள் தீர்க்க வேண்டிய நிலையில் இருந்தார். குறிப்பாக கிட்டு மாத்தையா போன்றவர்களின் உள்பகை.
1987 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் என நினைக்கிறேன் தமிழர்களின் அன்றைய பாதுகாப்பற்ற நிலையை அறிந்து இலங்கை ராணுவம் சுறுசுறுப்பாக, மற்ற இயக்கங்களே அழித்து தான் மட்டும் தான் போராட வேண்டும் என்று களத்தில் நின்ற விடுதலைப்புலி இயக்கத்தை அழிப்பதற்கு முழு முயற்சி செய்யத் தொடங்கினார்கள். அந்த ராணுவ திட்டத்திற்கு ஆபரேஷன் லிபரேஷன் என்ற பெயர் சூட்டினார்கள். பல இடங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி பெற தொடங்கியது.
இலங்கை ராணுவம் முதன்முறையாக வெற்றி பெற தொடங்கியது . லிபரேசன் நடவடிக்கை நடவடிக்கை அல்லது வடமாராட்சி நடவடிக்கை இலங்கை ராணுவத்தால் 1987 ஆம் ஆண்டு மே ஜூன் மாதங்களில் அச்சமயம் விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்குடா நாட்டில் அமைந்துள்ள வடமாராட்சியை கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட வழிந்த தாக்குதலாகும். தாக்குதல் தொடங்கப்பட்ட தேதி 26 மே 1997. இந்திய அரச அச்சுறுத்தலால் இலங்கை அரசாங்கம் தாக்குதல் நிறுத்தப்பட்டது ஜூன் 1987.
இலங்கையில் பல முனைகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கை ராணுவத்தால் தாக்கப்பட்டு பலவீனம் அடைந்து வந்த நேரத்தில் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்கள் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்ஜிஆர் பார்த்து இந்திய மத்திய அரசு இலங்கை அரசு மீது கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் இல்லை படையெடுக்க வேண்டும் என்று பலவாறும் மன்றாடி கொண்டு இருந்தார் தமிழ்நாட்டிலும் டெல்லியிலும் இருந்த மத்திய அரசு உளவுத்துறைகளையும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் களையும், மத்திய அரசுக்கு செல்வாக்கு பெற்ற பத்திரிகையாளர்கள் மற்றும் கல்வியாளர்களையும் சந்தித்து உடனடியாக இலங்கை அரசை பின்வாங்க செய்து விடுதலை புலி இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். நான் அந்த நேரத்தில் புளொட் இயக்க சார்பாக டெல்லியில் இருந்தேன். அப்போது பாலசிங்கத்தின் டெல்லி சென்னை தொடர்ந்த பயணம் பற்றி தான் ஒரே கதை. பத்திரிகையாளர்கள் மூலம் பாலசிங்கத்தின் பயணம் பற்றிய பல தகவல்கள் கிடைத்தன. பாலசிங்கம் இந்தியாவுல பக்த முக்கிய கோரிக்கை யாழ்ப்பாணம் இலங்கை அரசிடம் விழுந்துவிட்டால் இந்தியா ஒரு காலமும் ஜெயவர்த்தனாவை பணிய வைக்கவோ இலங்கை பிரச்சனையில் தலையிடவோ முடியாது. என்று ஒன்றே ஒன்றுதான் இந்தியா உடனடியாக இலங்கை பிரச்சனையில் ராணுவ ரீதியில் சரி தலையிட வேண்டும் என்று பகிரங்கமாகவே இந்திய அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் கேட்டுக்கொண்டார். இந்தியா இலங்கையில் தலையிட இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எம்ஜிஆரை வைத்து பிரஷர் கொடுத்ததும் பல சிங்கம் தான்.
இதே காலகட்டத்தில் இந்திய பிரதம மந்திரி திரு ராஜீவ் காந்தி அவர்களும் பெரும் அரசியல் நெருக்கடியில் இருந்தார். அதாவது போபோஸ் பீரங்கி வாங்கிய ஊழலில் ராஜீவ் காந்தி அரசாங்கம் ஏன் ராஜீவ் காந்தி பெயரே அடிபட்டது. இந்திய பாராளுமன்றம் நடக்க விடாமல் பெரும் போராட்டம். கடைசியாக ஊழலை விசாரிக்க பாராளுமன்ற கூட்டு குழு அமைக்கப்பட்டது. அதில் அப்போது அண்ணா திமுகவை சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் அண்ணன் ஆலடி அருணா அவர்களும் உறுப்பினராக இருந்தார். கூட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஊழல் நடக்கவில்லை என்று அரசுக்கு சாதகமாக ரிப்போர்ட் கொடுத்தாலும், அண்ணன் ஆலடி அண்ணா அவர்கள் ஊழல் நடந்து உள்ளது என்று தனியாக ஒரு ரிப்போர்ட் எம்ஜிஆர் எதிர்ப்பையும் மீறி கொடுத்தார். அப்பொழுது காங்கிரஸ் எம்ஜிஆர் கட்சி தேர்தல் கூட்டணி வைத்திருந்தார்கள். அந்த நேரத்தில் நானும் ஆடி அருணா அவர்களின் அரச பங்களாவில் ஒரு ரூமில் தங்கும் இடமாகவும் அலுவலகமாகவும் பயன்படுத்தி வந்தேன். அண்ணன் ஆலடி அருணாதினசரி தயாரிக்கும் ரிப்போர்ட் பதிவுகளை என்னிடம் கொடுத்து வெளிக் கடையில் டைப் செய்து தரும்படி கொடுப்பார். அது என்னவென்றே தெரியாமல் நானும் டைப் செய்து கொடுத்து வந்தேன். கடைசியில் தான் நான் டைப் செய்து கொடுத்த காகிதங்கள் தான்இந்திய அரசையே நிலைகுலைய செய்த ரிப்போர்ட் என்று. இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் இமேஜ் மிகவும் சரிந்து கொண்டு வந்த வேலையில் பாலசிங்கத்தின் இலங்கையின் தலையிட வேண்டும் என்று அழைப்பு அவருக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் இமேஜை வளர்த்துக் கொள்ள கிடைத்தது.
மற்ற இயக்கங்களை எல்லாம் அழித்து தான் மட்டுமே இருக்க வேண்டும் என்று எல்லோரையும் சக தமிழ் இளைஞர்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்த விடுதலைப்புலிகள் இன்று தங்கள் இயக்கத்தை காப்பாற்றிக் கொள்ள கடைசி சந்தர்ப்பமாக இந்தியாவை எதிர்பார்த்தார்கள். மற்ற இயக்கங்கள் எல்லாம் விடுதலைப்புலிகள் அழிவது பற்றி கவலைப்படாமல் சந்தோஷப்பட்டாலும், அதன்பிறகு இலங்கை அரசாங்கத்தின் கைகளுக்குள் போகும் இலங்கை தமிழர்களின் நிலம் உரிமைகள் திரும்ப கிடைக்காது என்று நினைத்தார்கள். இந்தக் கருத்தை மற்ற இயக்கத் தலைவர்கள் தாங்கள் சந்திக்கும் உளவுத்துறை அதிகாரிகள் அரசியல்வாதிகள் அதிகாரிகளிடம் கூறினார்கள். ஆனால் விடுதலைப் புலிகளை தவிர மற்ற இயக்கங்கள் இந்திய நேரடி தலையிட்டே கேட்கவில்லை. என்பதே உண்மை.
இந்திராகாந்தி மறைவுக்குப் பின் ஜி பார்த்தசாரதி அவர்களும் ஒதுக்கப்பட்ட பின் இலங்கை நடவடிக்கையில் இந்திய அரசு பலத்த குழப்பத்தில் இருந்தது. ஆரம்பத்தில் இந்திரா காந்தி வகுத்துக் கொடுத்த வழியில் ரா உளவுத்துறை செயல்பட்டது. பின்பு இந்திய வெளி விவகார செயலாளர் இதில் தலையிடத் தொடங்கினார். இது பத்தாது என்று இலங்கையில் இருந்த இந்திய தூதுவர் தீக்ஷித் அவர்களும் தனது பங்குக்கு குழப்பத் தொடங்கினர். இதைப் பற்றி அறிந்திருந்த ஆயுத இயக்க தலைவர்களும் இந்த குழப்ப நிலை பற்றி கவலைப்படவில்லை.
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் அவரது அரசியல் ஆலோசர்களும் ஊழல் பிரச்சனையை திசை திருப்ப பாலசிங்கத்தின் அறிவுரையை ஏற்று இலங்கையில் தலையிட அறிவுரை கூற தொடங்கி இருந்தார்கள். ஆரம்பத்தில் இந்திரா காந்தி சரியான வேலை திட்டத்தில் இலங்கை பிரச்சனையை நடத்திக் கொண்டு வந்தவர் பின்பு ஆரம்பத்தில் ராஜீவ் காந்தியும் அதையே பின்பற்றினார். ஆனால் ஊழல் பிரச்சனை அவர்கள் பதவிக்கு எமனாக மாறியதால் எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் இலங்கை பிரச்சனையில் தலையிட தொடங்கினார்கள். முதலில் படகுகள் மூலம் இலங்கை வடபகுதி மக்களுக்கு உணவுகள் கொண்டு போக முயற்சி செய்தார்கள். இலங்கை அரசு கடற்படை மூலம் தடுத்து நிறுத்தியது. இந்த செய்தி பத்திரிகைகளில் பரபரப்பாக வந்து ஊழல் செய்தி பின் தள்ளப்பட்டது.
வடமாராட்சி தாக்குதல் வெற்றி பெறக்கூடிய கடைசி நிலையில், விடுதலைப் புலிகளை காப்பாற்ற ஜூன் 4-ஆம் தேதி 1987 ஆம் ஆண்டு மாலை 3:55 முதல் மாலை 6:13 வரை இந்திய விமானப்படை ஆப்ரேஷன் பூமாலை என்ற திட்டப் பெயரில் விமானத்திலிருந்து பலமுறை வடபகுதி மக்களுக்கு உணவு பொதிகள் போடப்பட்டன. அவர்கள் போடுவது உணவுப் பொருளா இல்லை விடுதலை புலிகளுக்கு ஆயுதங்கள என்று தெரியாத நிலையில் இலங்கை அரசாங்கம் பயந்துவிட்டது ராணுவம் பின்வாங்க தொடங்கியது. விடுதலைப்புலிகள் காப்பாற்றப்பட்டார்கள். இலங்கை அரசாங்கம் தனது நாட்டில் இந்திய ராணுவ விமானங்கள் அத்துமீறி நுழைந்து விட்டதாக உலக நாடுகளிடம் முறையிட்டது எந்த நாடும் இதைப்பற்றி ஆறுதல் கூட சொல்லவில்லை. அதே நேரம் இந்திய தூதுவர் தீக்ஷித் ஜெயவர்த்தனாவை கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார். இலங்கை பிரச்சனையில் எந்தவித தீர்வு திட்டத்தை முன்வைப்பது என்ற முடிவில் இல்லாத இந்திய அரசு திடீரென இயக்கங்களின் ஆலோசனை இல்லாமல் இந்தியவெளிவிவகாரத்துறை, மற்றும் இந்திய தூதுவர் தீக்ஷித் போன்றவர்களின் ஆலோசனையில் அவசர அவசரமா ஒரு தீர்வு திட்டம் தயாரிக்கப்பட்டது. இயக்கங்களின் ஆலோசனையை கேட்காமல் விட்டதற்கு முழு காரணம் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மட்டும்தான். மற்ற இயக்கங்களை அழித்து இலங்கையில் அந்த இயக்கங்களின் செயல்பாடுகளை முடக்கி விட்டதால், அந்த இயக்கத் தலைவர்கள் இந்தியாவின் பாதுகாப்பில் நேரடி இலங்கை அரசு உடன் போராட்டத்தில் ஈடுபடாமல் இருந்த காரணத்தால் இந்திய அரசு இவர்களை மதிக்கவில்லை. அடுத்த காரணம் பாலசிங்கம் விடுதலைப்புலிகளை காப்பாற்றும்படி சென்னையிலும் டெல்லியிலும் ஓடி ஓடி திரிந்து கேட்டபடியே அதோடு உடனடியாக இந்திய தலையீடு வேண்டும் என்றும் கேட்டார். அதனால் இந்திய பிரதமரும் மற்றவர்களும் விடுதலைப் புலிகள் கூட ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
ஒப்பந்தம் கைச்சாத்திடும் முன் பிரபாகரனால் இலங்கையில் முன் வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை. ஒப்பந்தத்தில் அரசியல் கட்சி அமிர்தலிங்கம் அவர்களோ மற்ற எந்த விடுதலை இயக்கங்களோ பங்கு பெறக்கூடாது அவர்கள் இயக்கங்கள் எதுவும் இன்று இலங்கையில் போராட்டத்தில் இல்லை நாங்கள் மட்டுமே இருக்கிறோம். இதனால் இலங்கைத் தமிழர்களின் ஏகப்பிரதிநிதியாக தானும் அதாவது பிரபாகரன் அவர்களும் அவரது இயக்கமான தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் மட்டுமே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதை முதலில் ஏற்றுக் கொண்ட இந்திய அரசு. பின்பு சில ஆலோசர்கள் சுட்டிக் காட்டிய பின் மற்ற இயக்கங்களை ஒதுக்கி வைத்தாள் அந்த இயக்கங்கள் இலங்கை அரசோடு சேர்ந்து கொண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக செயல்படலாம், அதனால் அந்த இயக்கங்களிடமும் அரசியல் கட்சி அமிர்தலிங்கத் திடமும் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இயக்கங்கள் விரும்பாவிட்டாலும், மறைமுகமான மிரட்டல்களுக்குப் பின் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ஒப்புக்கொண்டார்கள். அதிலும் எல்லோரும் ஒற்றுமையாக இந்தியாவை முற்று முழுதாக நம்பி கைச்சாத்திடுவோம், ஆனால் இலங்கை அரசை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் என்று நம்பவில்லை என்று இந்திய அரசாங்கத்துக்கு ஒரு மகஜர் கொடுத்துவிட்டு கையெழுத்துப் போட்டார்கள்.
அதன் பிறகு நடந்ததை தான் எல்லோருக்கும் தெரியும் நான் மட்டும் தான் நான் மட்டும்தான் என்று கூறி கடைசியில் 2009இல் தமிழ் மக்களும் அழிந்து உரிமைகளும் பறிபோகின. பாலசிங்கம் இந்த ஒப்பந்தம் பற்றிய நேரங்களில் டெல்லியில் நான் பொறுப்பில் இருந்தபடியால் எனக்கு பல பத்திரிகை நண்பர்கள் உடனக்குடன் இளமைகளை கூறி விளக்கங்கள் கேட்பார்கள் அதன் மூலம் தான் எனக்கு இந்த கூடுதலாக இந்த செய்திகள் தெரிய வந்தன.
விடுதலை புலிகளைகுறைத்து மதிப்பிடவும், பாலசிங்கத்தை குறைத்து மதிப்பிடவும் இந்த பதிவை போடவில்லை அன்று நடந்த சம்பவங்கள் பெரிய அளவில் வெளியில் ஒருவருக்கும் தெரியாது.
இந்தப் பதிவு முடிவு படுகிறது வேறு பதிவுகள் தொடரும்
No comments:
Post a Comment