ஆரம்பகால ஈழ விடுதலைப் போராட்ட தலைவர்களும் தமிழ்நாட்டு தொடர்புகளும் பகுதி 4
இன்று அதிகமானோர் இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈழ ஆயுத போராளி தலைவர்களுக்கு எம்ஜிஆர் தான் ஆதரவு கொடுத்தார். கலைஞர் கருணாநிதி ஆதரவு கொடுக்கவில்லை துரோகம் செய்தார் என்று எழுதுகிறார்கள். உண்மையில் 1983 கலவரத்திற்கும் முன்பு பாண்டி பஜார் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் தமிழ்நாட்டு உளவுத்துறை அதிகாரி மோகனதாஸ் அவர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு அவர்களே பிடித்து அனுப்புவதற்காக இலங்கை போலீஸ்னா அதிபர் ருத்ர ராஜசிங்கம் அவர்களுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு முதலமைச்சர் எம்ஜிஆர் முழு ஆதரவு கொடுத்தார்.
இவர்கள் பிடிபட்டவுடன் இவர்களை விடுவிக்க சந்திராஹாசன், யோகேஸ்வரன்எம்பி போன்றவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து கலைஞரை சந்தித்து ஆதரவு கேட்க கலைஞர் திமுகவை சேர்ந்த வக்கீல்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அதில் சிலர் கலைஞருக்கு தெரியாமல் பணத்தை எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள். இதன் பிறகு சிறந்த வக்கீலான என்டி வானமாமலை அவர்களை கலைஞரின் சம்மதத்துடன் வக்கீலாக வாதாட அழைத்துள்ளார்கள். என் டி வானமாமலை அவர்கள் இவர்களின் வழக்குக்காக ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. உமா மகேஸ்வரன் வழக்கு மட்டும் சென்னையில் இருந்து 45 கிலோமீட்டர் தூரமுள்ள திருவள்ளூர் நகர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அங்கு போவதற்கு எங்கள் தோழர் விக்கி என்ற விக்னேஸ்வரன் வாடகைக்கு கார் பிடித்து அவர்களை அழைத்து போய் வருவார். சில நேரங்களில் சரியான நேரத்துக்கு வாடகை கார் போகவில்லை என்றால், என் டி வானமாமலை அவர்கள் தானே போய் விடுவார். கார் காசை நாங்கள் கொடுத்தாலும் வாங்க மாட்டார். மிக அருமையான மனிதர். எம்ஜிஆர் எம் ஆர் ராதா துப்பாக்கி சூட்டு சண்டையில் எம் ஆர் ராதாவுக்காக ஆஜராகி வாதாடியவர் என்டி வானமாமலை அவர்கள்.
1982 மே 19ஆம் தேதி சம்பவம் நடந்தது. ஐந்து மாதங்களின் பின் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பின் அக்டோபர் மாதம் 82 ஆம் ஆண்டு என நினைக்கிறேன், அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது.
உமா மகேஸ்வரன் சென்னையிலும்
ராகவன் புதுக்கோட்டையிலும்
நிரஞ்சன் என்ற சிவனேஸ்வரன் திருச்சியிலும்
கண்ணன் என்ற சோதிஸ் ஈஸ்வரன் பவானி என்ற ஊரிலும்.
தங்கியிருந்து தினசரி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நினைக்கிறேன்.
சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உமா மகேஸ்வரன் தினசரி கையெழுத்து போட அங்கு போகும்போது அப்போது கமிஷனர் ஆக இருந்த ஸ்ரீ பால் அவர்களிடம் தன்னிடம் கைப்பற்றப்பட்ட கைதுப்பாக்கியை தராவிட்டாலும், பிடித்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை சரி தர சொல்லி வற்புறுத்தி கடுமையாகவே அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பணம் பற்றி வழக்கில் சேர்க்கப்படவில்லை. கடைசி வரை கமிஷனர் ஶ்ரீ பால் அந்த பணத்தை தரவில்லை.
இதே மாதிரி இன்னொரு சம்பவம் நடந்தது இலங்கை கழுகுப்படை தலைவர் ராஜ்மோகன் வேறொரு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு, மீண்டு வெளியில் வரும்போது, இவர்பிரபாகரனுக்கும், உமா மகேஸ்வரனுக்கும் நண்பராகத்தான் இருந்தார். இவர் அப்போது தன்னிடம் இருந்த 600 டாலர் வெளிநாட்டு செக் என நினைக்கிறேன், அந்த காலத்தில் அதில் நாங்கள் போய் நேரடியாக மாற்றி எடுக்க முடியாது. ராஜ்மோகன் தனக்கும் தெரிந்த பிரபாகரனின் நெருங்கிய ஆதரவாளரான ஒரு முக்கிய அரசியல் பிரமுகரிடம் கொடுத்துள்ளார். கடைசி வரை அந்த அரசியல் தலைவர் அந்த பணத்தை கொடுக்கவில்லை. பிரபாகரனும் சாடை மாடையாக பணத்தைக் கேட்டு விட்டு ராஜ்மோகன் இடம் இனிஅந்த பணத்தை மறந்து விடு என்று கூறி உள்ளார். இந்த விடயங்கள் ராஜ்மோகன் நேரடியாக எங்களிடம் கூறப்பட்டது. இந்த விடயம் தெரிந்த ஒரு நண்பர் இப்போதும் கனடாவில் இருக்கிரார்.
இந்த ராஜ் மோகன் 1083 ஆம் ஆண்டு கடைசியில் என்ன நினைக்கிறேன் உமா மகேஸ்வரனால் படுகொலை செய்யப்பட்டு மறைக்கப்பட்டார். இதுதான் பிளாட் இயக்கத்தின் இந்தியாவில் ஆரம்பித்து வைத்த முதல் கொலை.
சென்னையில் ஜாமீனில் இருந்த உமா மகேஸ்வரன் அமைந்தகரையில் பேராசிரியர் மு வரதராஜனரின் மகன் அவரின் பெயர் டாக்டர் இளவரசு என நினைக்கிறேன். அவரின் உதவியோடு அமைந்தகரை கூவம் ஆற்றங்கரையில் தோட்ட வீட்டில் தங்கியிருந்தார்.
அப்போது தலை மறைவாக இருந்த எங்களைஎங்களை எல்லாம் சந்திக்குமிடம் பெருஞ்சித்திரனார் ஐயா அவர்களின் வீடு, பக்கத்தில் இருந்த தென்மொழி அச்சகத்தில் எங்கள் சந்திப்புகள் நடைபெறும்.
உமா மகேஸ்வரன் புல்லட் வண்டியில் வரும்போது அவரை சுற்றி நான்கு ரகசிய போலீசார் மோட்டார் சைக்கிளில் வருவார்கள். ஆனாலும் உமா சென்னை தேவி பரடைஸ் தியேட்டரில் மோட்டார் சைக்கிள் விட்டு உளவு போலீசருக்கு போக்கு கட்டி விட்டு எங்களை வந்து சந்திப்பார்.
கடைசியில் ஒரு நாள் போலீசார் பெருஞ்சித்திரனார் ஐயாவை சந்திப்பதை அறிந்து, ஐயாவுக்கும் அவர்கள் வீட்டுக்கும் மிக மிக கடுமையாக நடந்து கொண்டார்கள். தென்மொழி அச்சகத்தை புரட்டிப்போட்டு விட்டு செல்வார்கள். பாவலர்லேறு பெருஞ்சித்திரனார் ஐயா கவலைப்படவே இல்லை. அவர் வெளியிட்ட தமிழ் நிலம் பத்திரிகையில் உமா மகேஸ்வரனும் ஒரு தொடர் கட்டுரை எழுதினார்.
எம்ஜிஆர் ஆட்சி இவர்களை பிடித்துக் கொடுக்கும், நேரம் நெருங்கியதால் எம்ஜிஆர் கட்சியை சேர்ந்த அமைச்சர் எஸ் டி எஸ் சோமசுந்தரம், சீமானின் மாமனார் அமைச்சர் காளிமுத்து, புலமைப்பித்தன் அவர்கள் எங்களுக்கெல்லாம் ரகசிய எச்சரிக்கைகள் கொடுத்தார்கள் எம்ஜிஆருக்கு தெரியாமல்.
அதே நேரம் நிபந்தனை ஜாமீன் தளர்த்தப்பட்டு பிரபாகரனும் ராகவனும் மதுரையிலும், உமா மகேஸ்வரன் கண்ணன் நிரஞ்சன் ஒன்றாக சென்னையில் இருக்க அனுமதிக்கப்பட்டார்கள்.
எம்ஜிஆரின் திட்டத்தை அறிந்த பிரபாகரனும் ராகவனும் மதுரையில் தலைமறைவானார்கள். அவர்கள் அமைச்சர்காளிமுத்து மூலம் ஒரு செய்தி அனுப்பினார்கள். அச்செய்தியை புலவர் புலமைப்பித்தன் எங்களிடம் கூறினார். அனுப்பிய செய்தி தாங்கள் தலைமறைவாக இலங்கைபோவதாக, அதனால் இவர்களுக்கும் பிரச்சனை வரும் என்றும் உமா மகேஸ்வரன் மற்றும் தோழர்களை தலைமறை ஆகும்படி செய்தி அனுப்பியிருந்தார்கள். உமா முதலில் இதை ஏளனமாக கதைத்தாலும், பின்பு தங்களை கைது செய்து இலங்கையில் ஒப்படைத்து விடலாம் என்ற நம்பகமான செய்திகள் வரத் தொடங்கியதும், அவரும் தலைமறைவாக முடிவு செய்து, சென்னையில் தலைமறைவாக இருந்த எங்களுக்கு வேலைகளை பகிர்ந்து கொடுத்து விட்டு, அவரின் ரகசிய அமைந்தகரை வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் பொருட்கள் நானும் மாறனும் போய் எடுத்து வேறு இடங்களில் பாதுகாப்பாக வைத்தோம்
. ஏப்ரல் 27, 28 என நினைக்கிறேன், இரவு 11 மணி போல் உமாதலைமறைவாக போக முன்புஒரு காரில் என்னையும் மாறனையும் கந்தசாமியையும் அழைத்துக் கொண்டு கோபாலபுரம் கலைஞர் கருணாநிதி அவர்களை சந்திக்க சென்றார். உமா தனியாக கலைஞரை சந்தித்தார். நாங்கள் தூரத்தில் காரில் இருந்து இருந்தோம். 30 நிமிடநேர சந்திப்புக்குப் பின்பு வெளியில் வந்த
உமா மகேஸ்வரன் தலைமறைவாகும் எண்ணத்தை கைவிட்டார்.
அப்படி என்னதான் கலைஞர் கருணாநிதி அவர்கள் கூறினார்கள்
தொடரும்
No comments:
Post a Comment