பகுதி 6, புளொட் இயக்கத்தின் 1986 ஆண்டு நடந்த பின்தள மாநாடு சம்மந்தமான அறிக்கையின் தொடர்ச்சி.
22/06/86 இல் நடைபெற்ற கூட்டம்
13/6/86 திகதிய கடிதத்திற்கும், 20/6/86 திகதியகோரிக்கைக்கும் ஆன பதில்கள் கிடைக்கப்பெற்றது அறிவிக்கப்பட்டது.
இணைப்பு 10
இணைப்பு 11
மத்திய குழு கூட்ட முடியாத காரணத்தால் கட்டுப்பாட்டு குழு அனுப்பி வைத்த மேற்படி பதில்கள் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவை தொடர்பாகவும் ஏனைய விடயங்கள் தொடர்பாக வும் முகாம்களுக்கு அறிக்கை அனுப்பி வைக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில்
மாநாட்டு ஏற்பாட்டுக் குழு அறிக்கை 1 ,தேதி 22/6/86 அனுப்பி வைக்கப்பட்டது. இணைப்பு 12
பின் தள மகாநாட்டு திகதி ஜூலை 19 என்ன குறிக்கப்பட்டது
தோழர் ஆதவன் தோழர்களை முகாம்களில் இருந்து வெளியே எடுத்து குழு சேர்த்துள்ளதாக பல தோழர்கள் புகார்தொடர்பாக
விவாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக தோழர் ஆதவனுக்கு ஒரு கடிதம் அனுப்புவது என ஏற்கப்பட்டது. அதன்பின் செயலதிபர்ருக்கும் அனைத்தும் முகாம்களுக்கும்அனுப்பி வைப்பது என ஏற்கப்பட்டது. இணைப்பு 13 (இக்கடிதம் பின்னர் அனுப்பி வைக்கப்படவில்லை)
அனைத்து மத்திய சபை உறுப்பினர்களுக்கும் மகாநாடு தொடர்பாகவும் எம்மால் வரையறுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாகவும் அறிவிப்பெதனவும் அவர்களது ஒத்துழைப்பைவழங்கப் கேட்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
பேராளர்கள்
ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட பெராளர்களைக் ஏற்பாட்டுக்குழு அங்கீகரித்தது.
பாதுகாப்பு
பின்தள மாநாட்டு பாதுகாப்பிற்கு கழக பாதுகாப்பு குழுவும், ஒத்துழைப்புக் குழுவும் இணைந்தே மாநாட்டு பாதுகாப்புக்குழு அமைப்பது என 7/6/86இல் தெரிவிக்கப்பட்டிருந்தது எனினும் பின் தளமாநாட்டுக்கு முழு பொறுப்பும் பின்தள மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவே. இம்மாநாடு பாதுகாப்புக் குழுவில் ஏற்பாட்டுக் குழு தோழர்களும் இடம் பெற வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவே மாநாடு பாதுகாப்பதற்கான முழு பொறுப்பு எனவும்,ஏற்பாடு குழுவில் தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு விக்கும் இடையூறு செயல்படுவதால் உதாரணமாக ஆயுதங்கள் கொண்டு வருதல், குழு, அனைத்து மத்திய குழு உறுப்பினர்களையும், தன்னச்சில் குழு உறுப்பினர்களையும் இணைத்து ஏற்பாட்டு குழு சந்தித்து மாநாட்டுக்கான ஒத்துழைப்பை பெறுவது எனவும் ஏற்பாட்டுக் குழு தீர்மானித்தாள் இக் கூட்டத்திலேயே ஆதவனின் விடயம் நேரடியாக பேசுவது என முடிவு எடுக்கப்பட்டது இதனால் ஆதவனுக்கு அனுப்ப தயாரிக்கப்பட்ட கடிதம் அனுப்ப வேண்டியதில்லை எனவும் இக் கூட்டத்திலேயே கையில் கொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது (23/6/86)
மாநாட்டு ஒத்துழைப்பு குழு 2, கழக பாதுகாப்பு குழு 2, மாநாட்டு ஏற்பாட்டுக் குழு பிரதிநிதிகள் 2 சேர்ந்து மகாநாட்டு பாதுகாப்பு குழு அமைப்பது தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1983இல் உள்ளவர்கள் கண்டி, தேனி இப்பயிற்சி பெற்றவர்கள் ஆகியோர் தெரிவில்லாமல் நேரடியாக மகாநாட்டுக்கு வருவது நிராகரிக்கப்பட்டது (ஏனைய விபரங்கள் அறிக்கையொன்று இணைப்பு 12)
23/6/86 மாநாட்டு ஏற்பாட்டுக் குழு கூட்டம்
22/6/86 தீர்மானித்த வாழு ஆதவனுக்கு தயாரித்த கடிதம் அனுப்ப வேண்டியதில்லை என தீர்மானிக்கப்பட்டது
மாநாடு நடத்துவதில் எமக்கு ஏற்பட்டுள்ள பல சிக்கல்களில் சில மத்தியகுழு உறுப்பினர்கள் சம்பந்தமாக இருப்பதால்
மகாநாடு சிறப்புற நடத்துவதில் அவர்களே ஒத்துழைப்பை முழுமையாகத் வெல்வதற்காக தல செயற்குழு மாநாட்டு ஏற்பாட்டுக் குழு மத்திய செயற்குழு சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் இச்சந்திப்பபை 1/7/86 அன்று வைப்பது நல்லது என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இச்சந்திப்பில் ஒத்துழைப்பு குழுவும் பங்குகொள்ள விரும்பியதால் அதுவும் பின்னர் ஏற்று கொள்ளப்பட்டது.
சந்திப்பு நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு அமைந்தது
A. மறைந்த தோழர்களுக்கு அஞ்சலி
B. 29/3/86 முதல் 30/6/86 வரையான காலப்பகுதியில் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு செயல்பாடுகள்பற்றி அறிக்கை வாசித்தல்
மேற்படி காலப்பகுதியில் ஏற்பாட்டுக்குழு எதிர்நோக்கிய சிக்கல்கள் பற்றிய அறிக்கை
D. பின் தள மாநாடு பற்றிய ஆலோசனைகளை ஒவ்வொரு மத்திய குழு உறுப்பினர்களும் தெரிவித்தல்.
E. மாநாட்டின் வெற்றிக்கு மத்திய குழு, ஏற்பாட்டுக் குழு, தளசெயல்குழு தங்கள் கருத்துக்களை பரிமாறி தீர்வு காணல்
மாநாட்டின் ஏற்பாட்டுக்கு பின்வரும் முறையில் பொறுப்புகள் கொடுக்கப்பட்டன.
தொண்டர்கள் உணவு மருத்துவம் உட்பட தோழர் சீசர்
மண்டபம் மேடை ஒலி ஒளி ஒளிப்பதிவு ஒலிப்பதிவு தோழர் திவாகரன்
போக்குவரத்து, பாதுகாப்பு முதலியன. தோழர் செல்வராசா
நிதி. தோழர் ஆனந்தி
நிர்வாகம் அலுவலகம். தோழர் மாதவன்
22/6/86 மாநாட்டு ஏற்பாட்டுக் குழு அறிக்கை 1 வாசிக்கப்பட்டு சுற்றுக்கு விடஅங்கீகாரம் அளிக்கப்பட்டது.
பகுதி-7 தொடரும்
No comments:
Post a Comment