பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Sunday, 5 February 2023

புளொட் இயக்கத்தின் 1986 ஆண்டு நடந்த பின் தள மாநாடு பகுதி 1

  வெற்றிசெல்வன்       Sunday, 5 February 2023

புளொட் இயக்கத்தின் பின் தள மாநாடு நடைபெற்ற 24/07/86 தொடக்கம் 1/08/86 வரையும் அதற்கு முன்பும் நடைபெற்ற நிகழ்ச்சிகள் சம்பந்தமான நடந்த அனைத்து உண்மைகளையும் அறிக்கையாக தயாரித்த பின்தள மாநாட்டு ஏற்பாட்டுக் குழு



பின்தள மாநாடு 24.07.1986 தொடக்கம்1.08.1986

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்

தொடர்பான அறிக்கை.

அறிக்கை தொகுப்பு. பின்தள மாநாட்டு ஏற்பாட்டுக் குழு


பிப்ரவரி 19 தொடக்கம் 24 வரை தளத்தில் நடைபெற்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தள மா நாட்டினையும், அதன் தீர்மானங்களையும் அடியொற்றி பின் தளத்திலும் அவ்வாறான மாநாட்டை கட்டுவதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டன.

                 அதனடிப்படையில் மார்ச் 25, 26 ,27ஆம் திகதிகளில் கூட்டப் பெற்ற கழக மத்திய குழுவானது பின் வருவோரை மாநாடு தொடர்பான அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கும் பின்தள மாநாடு குழுவாக அமர்த்தியது.

அவர்கள்.

1. தோழர் வாசுதேவா மாநாட்டுப் பொறுப்பாளர்

2. தோழர் முகுந்தன்

3. தோழர் சீசர்

4. தோழர் மாதவன்

5. தோழர் திவாகரன்

6. தோழர் சுபாஷ்

7. தோழர் ஆனந்தி

8 தோழர் ராதா

9. தோழர் காலித்

10. தோழர் பொன்னுத்துரை ஆகியோர்


இக்குழு 29/03/86 முதல் மகாநாடு முடிவடையும் வரை செயல்பட அங்கீகரித்த தோடு 15/04/86 அன்று மாநாடு நடைபெற வேண்டும் என்றும் செய்யப்பட வேண்டிய வேலைகள் தொடர்பான அனைத்து விளக்கங்களும் ஆலோசனை மாநாடு குழுக்கூட்டத்தில் விளக்கப்படும் எனவும் 29/03/86 திகதிய செயல்அதிபரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.(செயலதிபர் இன் மேற்படி நியமனக் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பு 1


இதையடுத்து பின்தள மாநாடு குழுக்கூட்டம் 30/06/86 அன்று மேற்குறிப்பிட்ட பத்து தோழர்களின் சமூகத்தில் கூட்டப்பட்டது

தோழர் தோழர் முகுந்தன், தோழர் வாசு ஆகியோரால் பின் தளமாக மகாநாடு பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன் இந்த வகையில் மத்திய சபை பின்தள மாநாடு பற்றி தீர்மானித்துள்ளது என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டது. இக்குழு செய்யவேண்டிய வேலைகள் பற்றி தெரிவிக்கப்பட்டது.

தோழர் முகுந்தன் தனது பேச்சில் தெரிவித்துள்ளதாவது

கழகத்தின் உள்ளேயும் , வெளியேயும் பல வதந்திகள் பரப்பப்படுகின்றன. கழகத்துக்கு உள்ளேயே பல குழப்பங்கள் உருவாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளன ஆகவே கழகத்தை காத்து சரியான முறையில் தீர்வு கண்டு அடுத்த நிலைக்கு கொண்டு போவதே எமது நோக்கமாகும். ஆகவேதான் பின் தளஆலோசனை மாநாடு கூட்டப்பட்டது. உண்மை நிலைகளை காட்ட வேண்டியுள்ளது இவ்வாறான மாநாடு ஒன்று தளத்தில் கூட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே இங்கும் கூட்ட முடிவு செய்யப்பட்டு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன இக்குழுவை கழக மத்தியகுழு நியமித்து மாநாட்டை நடத்தும் படி கேட்டு.

        தற்போதைய போராட்டம் பற்றி சரியான தெளிவு இல்லாததால் அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லப்பட்டு கொண்டிருக்கும் மக்களை கருத்தியல் ரீதியாக வெல்லவும், ஸ்தாபனத்தின் ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் காரணம் ஆயுத பற்றாக்குறையே என தவறான கருத்துஉள்ள தோழர்களை சரியான வழிக்கு கொண்டுவர வேண்டும். அக்கருத்துக்கள் மாற்றப்பட வேண்டும்.


மகாநாட்டில் தேவைகளான;

அ. கழகத் தோழர்களுக்கு கடந்த கால நிலைகள் பற்றி தெளிவான விளக்கத்தை கொடுத்து நம்பிக்கை ஊட்டி அரசியல் ரீதியாக கழகத்தின் நிலைப்பாடு தெளிவுபடுத்தி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி உள்ளது தெரியப்படுத்தவும்


ஆ.   கழகத்துக்கு ஏற்பட்ட திடீர் வளர்ச்சியையும்  , வீழ்ச்சியையும்,

        ஆய்வு செய்து நிர்வாகத்தை மீளாய்வு செய்தல்.


இ.    பிற்போக்கு சக்திகளையும், சந்தர்ப்பவாதி களையும் இனம்

         கண்டு அவர்களே விமர்சனத்துக்கு உட்படுத்தி இணைந்து     

         தொழில் படல், முடியாத நிலையில் அவர்கள் பற்றிய நிலை

         பாட்டை பரிசிலிதல்.

ஈ.      மக்களுக்கு போராட்டத்தின் நிலையை தெளிவுபடுத்துதல்     


தோழர் முகுந்தனின் விளக்கத்தைத் தொடர்ந்து மாநாட்டின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தோழர் வாசுதேவா தனது விளக்கத்தை தந்தார். அவரும் தான் தல மாநாட்டில் கலந்து கொண்டது தொடர்பாகவும் தளத்திலும் பின் தளத்திலும் செயல் அதிபருக்கும் கழகத்திற்கும் எதிராக முடுக்கி விடப்பட்ட வதந்திகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

கடந்த காலங்களில் எதுவும் தனிப்பட நடக்க வில்லை எனவும் தாபன ரீதியாகவே அனைத்தும் நடைபெற்றுள்ளன எனவும் தெரிவித்தார்.

உண்மையில் திறனாய்வு தந்திர திறனாய்வு வழியாகவே ஸ்தாபனத்தை சரியான கட்டமைப்புக்குள் கொண்டுவர முடியும் என தெரிவித்தார். இதுவரையில் இயங்கி வந்த மத்தியகுழு அப்போதைய தேவை கருதி அதன் அடிப்படையில் உருவானதே.

அதில் நியமிக்கப்பட்டவர்கள் கொள்கை ரீதியாக இயக்கத்தை ஏற்றுக் கொண்டார்களோ அன்றி அதனடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களோ அல்ல எனவும் இந்த மத்திய குழு கலைக்கப்பட வேண்டுமென பல தடவைகளில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன என்றும் கூறினார்.

ஆகவே பின்தள மாநாட்டின்  பின் ஏற்கனவே தளத்தில் தெரிவு செய்யப்பட்டோருடனும் பின் தளத்தில் தெரிவுசெய்யப்படுவோரும் கூடியே மத்திய குழு அமையும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இயக்கத்தின் காங்கிரஸ் கூடும் வரையில் தற்போதைய செயலதிபரே செயலதிபரக  இருக்க வேண்டும் எனவும் தற்போதைய கட்டுப்பாட்டு குழு வே கழக மகாநாடு வரை இயங்கலாம் எனவும் தள மகாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளதையும் தெரிவித்தார். தளத்தில் நடைபெற்றுள்ள மாநாட்டையும் அதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட தளசெயல்குழுவையும் ஏற்றுஉள்ளதாகவும் தெரிவித்தார்.

          தகவல் கொடுத்த இணைப்பு இணைக்கப்படவேண்டும் செயலதிபர் மாநாட்டை ஏற்றுக்கொண்டு அனுப்பிய கடிதம் இணைக்கப்பட வேண்டும் பின்தள மாநாட்டுக்கு தளத்திலிருந்து 5 பேரை அனுப்பி வைப்பார்கள் என்றும் அவர்களே அனுப்பி வைக்கும்படி 25.03.86 தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்

மத்திய சபை தீர்மானத்தின் படி பின்வரும் முறையிலேயே பேராளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது

       இக்கூட்டத்தில்  அனைத்து முகாம்நிர்வாகம் தொடர்பான வேலைகளை அனைத்தும் முகாம் உதவிப் பொறுப்பாளர் தோழர் காலித்திடம் ஒப்படைக்கப்பட்டு தோழர்களின் விவரம் குறித்து இறந்தவர்கள் மாவட்ட வாரியான விபரம் மற்றும் பிற தகவல்கள் முழுமையாக திரட்டும் மாறு  கேட்டுக் கொள்ளப்பட்டது.

விபரம்

  •  செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும்

  • 1983 இனக் கலவரத்திற்கு முன்னர் கழகத்தில் தம்மை இணைத்து செயலாற்றியவர் கள்

  • தமிழில் உள்ள சமூக விஞ்ஞான கல்லூரி 15 பேர்

  • தமிழீழ மாணவர் பேரவை.                           05

  • கலையகம் (வோட்).                                       03

  • கலையகம் ஒலிபரப்பு                                    03

  • தொலைத்தொடர்பு.                                        03

  • பிரச்சார பிரிவு.                                               06

  • கரை பொறுப்பு.                                               06

  • அலுவலகம் 1,2,3,4.                                         05

  • முகாம் பொறுப்பாளர்கள்.                               20

  • முகாம் நிர்வாகம்.                                             18

  • பயிற்சி தோழர்கள்.                                           75 பேர்வரையில் (ஒரு முகாமுக்கு 5 தோழர்கள் என்ற வகையில்)

  • டெல்லி கிளை                                                   02

  • தேனி, கண்டி பயிற்சி பெற்ற அனைவரும் 10%நியமனம்

  • உதவி முகாம்  புதுக்கோட்டை.                     03

                         ஒரத்தநாடு.                           06

                         பாதுகாப்பு.                            03


தெரிவுகள். 25.3.86 முன்னர் அவரவர் கடமையாக்கிய பகுதியிலேயே இருந்து பெறப்படும்.25/3/86 பின்னர் யாரும் மாற்றம் செய்யப் பட்டால் அவரது முந்திய கடமையாக்கிய பகுதியே அவர் தெரிவு செய்யப்பட வேண்டிய பகுதியாகும்.

மாநாட்டு ஒழுங்குகள் பற்றி அனைத்து தோழர்களும் கலந்து பேசினர்.


பகுதி-2 தொடரும்.








         









logoblog

Thanks for reading புளொட் இயக்கத்தின் 1986 ஆண்டு நடந்த பின் தள மாநாடு பகுதி 1

Previous
« Prev Post

No comments:

Post a Comment