பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Sunday, 19 July 2026

இது ஒரு பழைய பதிவு

  வெற்றிசெல்வன்       Sunday, 19 July 2026
நான் எனது இயக்க அனுபவங்களை எழுதும்போது மற்ற இயக்கங்களைச் சார்ந்தவர்களும் ஏதோ புளொட் இயக்கம் மட்டும்தான் பல கொலைகளை செய்தது போலவும், புளொட் இயக்கம் மட்டும்தான் தனது தலைவரை கொன்றது போலவும் எழுதுகிறார்கள் கருத்துக்கள் கூறுகிறார்கள். ஆம் அன்று எமது தலைவர் விட்ட தவறுகள் அதாவது ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவராக இருந்து கொண்டு தவறுகள் விட்டபடியால் நாங்கள் அவருக்கு மரண தண்டனை கொடுத்தோம். சித்தார்த்தனும், மாணிக்கம் தாசனம் பிரேமதாசாவின் பதவிக்கும் பணத்துக்கும் மயங்கி உண்மையை சொல்லாத படியால் பல உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டன.

அதன் பிறகு புளொட் விடுதலைப் புலிகள் மற்ற இயக்கங்கள் எல்லாம் செய்த கொலைகள் கொள்ளைகள், பாலியல் பலாத்காரங்கள் சித்திரவதைகள் ஆயிரம் மடங்கு. அவர்கள் இன்று வெள்ளை வேட்டியோடு உத்தம அரசியல்வாதிகள் போல் வெளியில் நடமாடுகிறார்கள்.
பத்மநாபா சென்னைக்கு ரகசியமாக வருவதை புலிகளுக்கு காட்டிக் கொடுத்தது யார். ஏன் பத்மநாபா கலைஞரின் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் வேண்டுகோளை நிராகரித்து சென்னை வந்ததன் மர்மம் என்ன. கோடிக்கணக்கான பணம் கையாடல் செய்தவர்கள் யார்.

அதுபோல் சிறிசவாரத்தினம் யாரால் காட்டிக் கொடுக்கப்பட்டார்.

இந்திய அமைதிப்படை காலத்தில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நாங்கள் தான் ஏற்றோம் என்று சொன்ன இயக்கங்கள் மாகாண சபை பொறுப்பேற்றுக் கொண்டவுடன் என்ன செய்தார்கள். நிர்வாகம் நடத்தினார்களா? மக்களை காப்பாற்றினார்களா? திரிகோணமலையில் மாகாண சபை அமைதிப்படையின் விருந்தினர் மாளிகையில் இந்தியன் குடிவகைகளுடன் நடத்தப்பட்டதா?

விடுதலைப் புலிகள் களை எடுக்கிறோம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடத்தப்பட்டார்கள் கொலை செய்யப்பட்டார்கள் அதுவும் இந்தியா அமைதிப்படை உதவியுடன் யார் செய்தார்கள் மாகாண சபை நடத்திய இயக்கங்கள் தான் பொறுப்பு. எத்தனை எத்தனை கல்யாண வீடுகளில் மண்டபங்களில் புகுந்து நகைகளை கொள்ளையடித்தார்கள் பெண்களை கடத்தினார்கள். இவர்கள் இன்று அரசியல்வாதிகள்.

விடுதலைப் புலிகள் ஒரு பக்கம் பொதுமக்களை கவசமாக கொண்டு இந்திய அமைதிப்படையை தாக்கினார்கள் என்றால், அந்தப் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து காப்பாற்ற வேண்டிய மகான அரசு என்ன செய்தது தங்களுக்கு வேண்டிய அமைதிப்படையை வைத்து அப்பாவி பொதுமக்களே நூற்றுக்கணக்கில் கொலை செய்யவில்லையா.
இவர்கள் செய்த படுகொலைகளை நூற்றுக்கணக்கில் புளொட் உமா மகேஸ்வரன் செய்யவில்லை என்பதே உறுதியுடன் கூறிக்கொள்கிறேன். அன்று புளொட் இயக்கத்தில் இருந்த எங்களுக்கு அவர் செய்த இவர்களுடன் ஒப்பிடும் போது மிக சிறிய தவறுகள் குறிப்பாக அதுலத்முதலி நட்பு எங்களுக்கு மிகப்பெரிய துரோகமாகப்பட்டதால் அன்று அவருக்கு மரண தண்டனை கொடுக்க எல்லோரும் உடன் பட்டோம்.
நாங்கள் எங்கள் தவறுகளை வெளிப்படையாக ஓரளவு சரிபதிவு செய்து இலங்கை தமிழ் மக்களுக்கு கடந்த கால நடந்த உண்மைகளை வெளிக்கொண்டு வரும்போது, எங்களை  விட ஆயிரம் மடங்கு தமிழ் சமுதாயத்துக்கு துரோகங்கள் செய்தவர்கள் ஏன் உண்மையாக எழுத தயங்குகிறார்கள்.
அவர்கள் என்றும் தாங்கள்தான் தமிழ் மக்களுக்கு ஆரம்பத்திலிருந்து பாதுகாப்பா இருந்து வருகிறோம் என்று ரீதியில் கதை சொல்கிறார்கள். மக்களும் இந்திய அமைதிப்படை காலத்தில் மகான அரசு செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து இன்று அவர்களை அரசியல்வாதியாக நல்லவர்களாக தியாகிகளாக ஏற்றுக் கொண்டுள்ளது வியப்பாக உள்ளது.
அதுபோல் 1990 பின்பு புளொட் இயக்கத்தின் நடவடிக்கைகள் கொலை கொள்ளை பாலியல் கொலைகள் சித்திரவதைகள் என்று தான் இருந்தது.
உமா மகேஸ்வரனின் தவறுகளை தோழர்களிடம் கூறி இயக்கத்தை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்று கூறிய சித்தார்த்தன் ஏன்உமா மாமேஸ்வரனின் மரண தண்டனைக்கு பின்ப இயக்கத்தை நல்ல முறையில் நடத்தாமல் பதவிக்கு ஆசைப்பட்டு இயக்கத்தை  சமூக விரோத இயக்கம் போல் ஏன் மாற்றினார். 
விடை தெரியாத பல கேள்விகள் உள்ளன. தெரிந்தவர்கள் கூறுங்கள்.
logoblog

Thanks for reading இது ஒரு பழைய பதிவு

Previous
« Prev Post

No comments:

Post a Comment