11/04/1984 அன்றுயாழ் ஆரியகுளம் சந்தியில் வைத்து இலங்கை ராணுவத்தால் எரித்துக் கொல்லப்பட்ட புளொட் அமைப்பைச் சேர்ந்தவரும் யாழ் பல்கலைக்கழக மாணவனும் ஆன கேதீஸ்வரன் அவர்களையும் அவருடன் கூட எரித்துகொள்ளப்பட்ட சக தோழரையும் நினைவு கூறுவோம்.
நண்பன் கேதீஸ்வரன் தந்தை யாழ் சுதுமலையை சேர்ந்தவர் தாயார் தம்பலகாமத்தை சேர்ந்தவர். கேதீஸ்வரன் சுதுமலை அம்மன் கோவில் அருகில் இருந்த அவரின் பெரியப்பா சுப்ரமணியம் மாஸ்டரின் வீட்டிலிருந்து மானிப்பாய் இந்து கல்லூரியில் படித்தார். எனது சக வகுப்பு தோழனும் கூட. அதோடு அவரின் பெரியப்பா வீட்டுக்கு அருகில் தான் எனது வீடும்.
இருவரின் பொழுதுபோக்கே சுதுமலைஅம்மன் கோவில் மைதானத்தில் பல நண்பர்கள் சேர்ந்து கிரிக்கெட் உதை பந்து ஆட்டம் எமது தினசரி பொழுதுபோக்குகளாகும். அம்மன் கோயில் திண்ணையில் இருந்து படிப்போம்..
கோவில் திருவிழா காலங்களில் கேதீஸ்வரன் நானும் இரவு சினிமா காட்சிக்கு யாழ் நகருக்கு நடந்தே போய் வருவோம். மிகவும் அருமையான நண்பன். அவரின் ஒன்று விட்டு அண்ணன் மார்கள் பாலகிருஷ்ணன் இந்திரன் போன்றவர்கள். பிற்காலத்தில் நாங்கள் மாணவர்களாக ஓடித்திரிந்த சுதுமலை அம்மன் கோயில் மைதானம் விடுதலைப்புலிகளால் உலக பெயர் பெற்றது. பிரபாகரனின் மெய் காவல் படையைச் சேர்ந்தவர்கள் பலர் அங்கு எங்களுக்கு கீழே சிறு பையன்கள் ஆக இருந்தவர்கள் மாணிப்பாய் இந்து கல்லூரிபடித்தவர்கள். கேதீஸ்வரன் பற்றி முழுமையாக தெரியாதவர்கள் அவர் திருவோண மலையை மட்டும் சேர்ந்தவர் என்று குறிப்பிடுகிறார்கள் அது தவறு
குறிப்பு யாழ் நாக விகாரை தாக்கப்பட்ட சம்பவம் பற்றி அறியவும்கேதீஸ்வரன் அவரது நண்பரும் அதோடுபெட்ரோல் வாங்கவும் யாழ்ப்பாணத்தில் ஒரு ஜீப்பில் சென்றுள்ளார்கள் . காந்திய வாகனத்தில் சென்றார்கள் என்பதெல்லாம் கட்டுக்கதை.
நான் இந்தப் பதிவை எழுதி போட்ட பின்பு எனக்கு முகம் தெரியாத ஆனால் கேதீஸ்வரன் ஓடு நெருங்கிய தொடர்பு இருந்த சில நண்பர்கள் எனது பதிவுக்கு சில திருத்தங்கள் வேண்டும் எனவும் அன்று என்ன நடந்தது என்றும் கூறினார்கள்.
யாழ் நாக விகாரை தாக்கப்பட்ட சம்பவம் அறிந்து அங்கு புகைப்படம் எடுப்பதற்காக கேதீஸ் கிருபா மற்றும் ஒரு நண்பர் மூவர் சைக்கிளில் தான் அங்கு போய் இருக்கிறார்கள். மூன்றாவது நண்பரை தூரத்தில் நிறுத்திவிட்டு அவர்கள் இருவரும் போய் இருக்கிறார்கள். நேரம் காலை 8 மணி போல் இருக்குமாம். அவர்கள் இதுவரையும் பிடித்த ராணுவம் அவர்களே எரித்த இடம்
கேதீஸ் எரிக்கப்பட்டது நாவலர் ரோட் ரயில்வே கடவைக்குள். இன்று விபரம் தந்துள்ளார். அந்த காலத்தில் நானும் பெட்ரோல் வாங்க போனா போது எரிக்கப்பட்டார் என்று கேள்விப்படவில்லை.
No comments:
Post a Comment