பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Thursday, 23 April 2026

  வெற்றிசெல்வன்       Thursday, 23 April 2026
இன்று இலங்கை தமிழர்களின் அவல நிலை. 

ஆரம்பத்தில் 30 வருட அரசியல் போராட்டம். அதன் பின்பு 30 வருட ஆயுதப் போராட்டம். அதன் பின்பு 16 வருட அரசியல் போராட்டம். இந்தப் போராட்டங்களால் பல லட்சக்கணக்கான தமிழர்களின் உயிரும், வீடுகளும் காணிகளும் இழந்து, உயிர் வாழ்வதற்காகவே இலட்சக்கணக்கான தமிழர் வெளிநாடுகளுக்கு போய், வாழ்கிறார்கள் 
                      அவ்வளவு அனுபவங்கள் பெற்ற பின்பும் இன்று வரை அதிலும் குறிப்பாக வட மாகாண மக்கள் தங்களுக்கு தங்கள் தமிழ் மொழியை, தமிழ் மக்களை தமிழர் பிரதேசங்களை காப்பாற்ற கூடிய சிறந்த நல்ல பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தெரியாமல் இருக்கிறார்கள்.
தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைவர்கள் அயோக்கியர்களாக இருந்த காரணத்தால் முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், தமிழ் மக்களுக்கு எதிரான கட்சி என்று சொல்லப்படும் ஜேவிபியில் இருந்து மூன்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். இந்த நிலை தொடர்ந்தால் சிங்கள கட்சிகளின் சிங்கள உறுப்பினர்களை தமிழ் மக்கள் தங்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யக்கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை. 

எங்கள் நாட்டு நிலைமை இப்படி இருக்க, இந்தியாவின் தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டசபை தேர்தலை பற்றி இலங்கைத் தமிழர்கள் வெளிநாட்டிலும் இலங்கையிலும் யார் வரவேண்டும் என்று போராடுவது கருத்து சொல்வது வெட்கபட வேண்டிய விடயம்.
தங்களுக்கு யார் சிறந்த தலைவர்கள் ஆக வரவேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாடு மக்களே. 

தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும் தலைவரும் அவரது கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு தான் நன்மை செய்ய முடியும். அவர்களால் இந்திய மத்திய அரசாங்கத்தை மீறி எந்த ஒரு சிறு துரும்பும் கிள்ளி போட முடியாது என்பதுதான் உண்மை. 
உண்மை நிலைமைகளை அறிந்து கொள்ளாமல், அல்லது முட்டாள்தனமாக அவர் வந்தால் இவர் வந்தால் இலங்கை தமிழர்களுக்கு முடிவு கிடைக்கும் நம்புவது முட்டாள்தனமான நம்பிக்கை. 
தயவுசெய்து இலங்கையில் நல்ல தமிழ் தலைவர்களை தேர்ந்தெடுக்க முயற்சி பண்ணுங்க.
logoblog

Thanks for reading

Previous
« Prev Post

No comments:

Post a Comment