இன்று இலங்கையில் உள்ள வடகிழக்கு தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தமிழ் இனத்துக்கு கடந்த காலத்தில் ஆயுதம் தூக்கி போராடிய தலைவர்களால், தமிழ் மண் காப்பாற்றப்பட்டது தமிழர் உரிமைகள் கிடைத்தன. தமிழ் மக்களுக்கும் முற்று முழுதாக பாதுகாப்பு கிடைத்தது. அதனால் இன்று ஒவ்வொரு தலைவர்களுக்காக சிலை வைக்கிறார்கள்.
ஆயுத இயக்கத் தலைவர்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து போராடிய போது தமிழ்நாட்டின் சிலை வைக்கும் கலாச்சாரத்தை எள்ளி நகையாடியவர்கள். அது மட்டும் அல்ல தமிழ் நாட்டின் தமிழ் மக்களுக்காக இவர்கள் என்ன சாதனை செய்தார்கள் என்றும் பேசிக் கொண்டவர்கள்.
இப்போது அவர்களின் வழி வந்தவர்கள் இலங்கையில் சிலை வைக்கும் கலாச்சாரத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
ஈபிஆர்எல்எப் இயக்கத்தின் தலைவராக இருந்த பத்மநாபா அவர்களின் சிலையே வவுனியாவில் வைத்துள்ளார்கள். இது ஒரு தவறான முன்னுதாரணம். பத்மநாபா தனிப்பட்ட முறையில் மிகச் சிறந்த மனிதர். சக இயக்கத் தலைவர்களை தோழர்களை கொலை செய்ய முயற்சி செய்யவில்லை. எனக்கும் அவருடன் பழகும் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் ஒரு இயக்க தலைவர் என்ற முறையில் அவரின் செயல்பாடுகள் தனக்கு கீழ் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களால் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்திய அமைதிப்படை காலத்தில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று மாகாண சபையை நடத்தி சக விடுதலை இயக்கங்களின் உதவியுடன் தமிழர்களுக்கு பாதுகாப்பு தர முயற்சி செய்தார். என்பது உண்மைதான். ஆனால் நடந்தது என்ன. விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் விடுதலைப்புலி ஆதரவாளர்களையும் குடும்பங்களையும் கொன்று குவித்தது தான் மிச்சம். மண்டையன் குழு என்ற காரண பேரோடு சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் நடந்த மிக மோசமான சித்திரவதைகளையும் கொலைகளையும் ஏன் பத்மநாபால் தடுக்க முடியாமல் இருந்தது. ஒரு தலைவர் என்ற முறையில் தடுத்திருக்க வேண்டும் இல்லை அதற்கும் அவர் பொறுப்பெடுத்து இருக்க வேண்டும். அமைதிப்படை இருந்த காலத்தில் அமைதிப்படை வீரர்களையும் அழைத்துக் கொண்டு வட கிழக்கு மான சபையை வைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு இவர்கள் செய்த கொடுமைகளை மறந்து விட முடியாது . அதன்பின்பு விடுதலைப் புலிகள் மற்ற இயக்கங்களும் இலங்கை தமிழ் மக்களுக்கு மட்டும்தான் மிகக் கொடுமையான விடயங்களை செய்தன. இதை எழுத காரணம் பத்மநாபா நல்லவர் என்கிறார்கள். தனிப்பட்ட முறையில் மட்டும். ஒரு இயக்கத் தலைவர் என்ற முறையில் இந்திய அமைதிப்படை காலத்தில் இவரின் செயல்பாடு விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் செயல்பாடுகளுடன் ஒத்திருந்தன.
இலங்கை தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நல்ல தலைவர்கள் போதைப்பொருள் வியாபாரம் ஆயுதம் வாங்க பணத்துக்காக செய்திருக்க கூடாது. ஆயுதம் தூக்கிய எல்லா விடுதலை இயக்கங்களும் இதை செய்தன பத்மநாப விதிவிலக்கல்ல. டெல்லியில் வைத்து இலங்கையைச் சேர்ந்த போஸ்ட் மாஸ்டர் என்பவரின் ஊடாக போதைப்பொருள் கடத்தி பணம் சேகரித்தார்கள்.
இந்தியா அமைதிப்படை காலத்தில் அமைதிப்படை விமானத்தில் இந்திய இலங்கை ,அமெரிக்கா கள்ள பணத்தை பெரும் தொகையாக கோடிகளில் கடத்தி இலங்கை தமிழர்களிடம் சிங்களவர்களிடம் அதை மாற்றி நல்ல பணமாக சென்னையில் கோடி கோடியாக சேகரித்தார்கள்.
சென்னையில் சேகரிக்கப்பட்ட பணம் பெருமளவு மாயமாக மறைந்ததால், அதைப்பற்றி விசாரிக்க மிக ரகசியமாக ஒரிசாவில் இருந்து சென்னை வந்தது. பணத்தை எடுத்தவர்கள் விடுதலை புலிகளுக்கு தகவல்கள் கொடுத்ததாக அப்போது பகிரங்கமாக தமிழ்நாடு உளவு அதிகாரிகளால் பேசப்பட்டது.
இலங்கையில் தமிழ் மக்கள் சிலை வைக்க வேண்டுமானால் சிவக்குமாரன் சிலை மட்டும் வைக்க உண்மையுள்ளது.
தந்தை செல்வா எல்லாம் என்ன செய்தார் தங்களது பாராளுமன்ற பதவிகளுக்காக தமிழ் மக்களே ஏமாற்றினார்கள். அதுபோல் ஆயுதம் தூக்கிய எல்லா இயக்கத் தலைவர்களும் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை, அவர்களால் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் ஏற்படவில்லை.. பத்மநாபனின் சிலை வைப்பதற்கு பதிலாக கஷ்டப்பட்ட ஈபிஆர்எல் தோழர்களுக்கு உதவிகள் செய்திருந்தால் நன்மை. இந்தியாவில் அகதி முகாம்களில் பெருமளவு ஈபிஆர்எல்எப் தோழர்கள் கஷ்டத்தில் இருக்கிறார்கள். ஈ பி ஆர் எல் இயக்கத்தை வைத்து பதவிகள் பெற்றவர்கள் பணத்தைப் பெற்றவர்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்கள் சொகுசாக வெளிநாடுகளில் வாழ, தலைவரை நம்பி களத்தில் இருந்த தோழர்கள் இன்று வறுமையில் வாடுகிறார்கள்.
இது பத்மநாபா, ஈ பி ஆர் எல் இயக்கத்துக்கு மட்டும் நான் எழுதவில்லை. எல்லா விடுதலை இயக்கங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். தயவுசெய்து இப்படியான சிலை வைக்கும் போக்குகளை ஆதரிக்க வேண்டாம். சிலை வைப்பது அவர்கள் மேல் இருந்த பாசத்தால் நம்பிக்கை ஆள் அல்ல வருங்காலத்தில் தமிழ் மக்களை ஏமாற்றி தங்கள் அரசியல் பிழைப்பு நடத்துவதற்கு என்று அறிந்து கொள்ளுங்கள். இந்த சிலை வைப்பவர்கள் இன்று தமிழ் மக்களுக்கு என்ன நன்மைசெய்கிறார்கள்
No comments:
Post a Comment