#ஒரு #போரளியின் #உள்ள #குமுறல்
வெற்றி செல்வன் சுதுமலையை சேர்ந்தவர் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் பயின்றவர் தமிழ் மக்களை சிறுவயதில் இருந்து தமிழ் மண்ணையும் மக்களையும் நேசித்தவர்
1977ல் அன்றைய பாரளுமன்ற உறுப்பினரும் இன்றைய பாரளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்களின் தந்தையோடு சேர்ந்து இயங்கியவர்கள்
1979ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு முதலாவது தடுப்பு முகாமில் விசாரணைக்கு உட்பட்டு விடுதலை ஆனாவர். இந்த முகாமிலே இன்பம் செல்வம் என்ற இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
விடுதலையின் பின்னர் 1982 ம் ஆண்டின் நடுப்பகுதியில் plote அமைப்பில் தன்னை இணைத்து கொண்டு அந்த அமைப்பின் டெல்லி பொறுப்பாளராக இருத்தவர்.இத்தோடு இந்தியாவிலும் கைது செய்யப்பட்டு சிறை சென்று மீண்டவர்
வெற்றி செல்வனின் மனக்குமுறலை நீங்கள் கீழே பாருங்கள்
வணக்கம் தோழர்களே 1986 ஆம் ஆண்டும் பின்பும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் சரியில்லை கலகம் பிழையான வழியில் போகிறது எனக்கூறி வெளிநாட்டுக்குப் போய் வாழ்ந்து கொண்டு இப்போது எனக்கு கூறுகிறார்கள் நீங்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் உமாமகேஸ்வரன் பற்றி எதுவும் கூற வேண்டாம் அவர் பிழையானஆளாக இருந்தாலும் இப்போது பல பழைய நண்பர்களுக்குதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தான் ஒரு அடையாளமாக இப்போது இருக்கிறது நீங்கள் உண்மைகளை கூறினாள் எமக்கும் கெட்ட பெயர் எனக் கூறுகிறார்கள் அதைவிட தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் இருந்து ஒருநாள் கூட கஷ்டபடாமல் வெளிநாட்டில் இருப்பவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வருகிறார்கள் இந்த பிளாட் இயக்கம் பல இயக்கத் தோழர்கள் முயற்சியால் வளர்ந்தது தியாகத்தால் வளர்ந்தது ஒரு உமாமகேஸ்வரன் மட்டும் காரணம் இல்லை
பிளட்இயக்கத்தின் வளர்ச்சிக்கும் 1982-ல் இருந்து 1990 வரை நானும் கஷ்டப்பட்டு வளர்த்து இருக்கிறேன் உமா மகேஸ்வரனின்
மரணத்தின் பின் இருக்கும் பிளாட் அமைப்பு துரோகத்தால் கட்டப்பட்டது ராபினின் பிணத்தின் மேல் பணமும் பதவியும் பெற்றவர்கள் மறுக்க முடியாது உண்மைகள் பல தெரிந்த தோழர்கள் இன்னும் இருக்கிறார்கள் வெளிநாட்டில் வசிக்கும் புளொட்டின் முன்னாள் தோழர்கள் உங்களுக்கு தெரியும பிளாட்கைவிட்ட பல தோழர்கள் இன்றும் தமிழ்நாட்டில் அகதி யாகவும் பல கிராமங்களில் பிச்சை எடுத்தும் வருகிறார்கள் உங்களோடு முகாம்களில் இருந்து இயக்கத்துக்காக கஷ்டப்பட்டவர்கள் 20 25 வயதுகளில் வந்தவர்கள் இன்று 60வது 70வயதுகளில் ஒரு வசதி வாய்ப்புகளையும் பெறாமல் காட்டுவாசிகள் போல் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நானும் இங்கு வசதிகள் இல்லாமல் அகதிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
எங்களின் இந்த நிலைக்கு உமாமகேஸ்வரன் தான் காரணம் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு விடுமுறை எழுத்து ஒவ்வொரு நாட்டுக்கும் போய் வந்து கொண்டு இருக்கும் எங்களை தரக்குறைவாக விமர்சிக்கும் தோழர்கள் ஏன் ஏன் இயக்கத்தை விட்டு வெளிநாட்டு ஓடிவந்தீர்கள் அங்கே இருந்து போராடி இருக்கலாம் தானே உமா மகேஸ்வரனின் மரணம்வரை இயக்கத்தின் இருந்து வெளிநாட்டு வந்த தோழர்கள் எங்களைக் விமர்சிக்கலாம் கேள்வி கேட்கலாம் அவர்கள் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை இயக்க வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் இப்ப வெளிநாடுகளில் இயக்கத்தைப் பற்றியும் பழைய தலைவர்களைப் பற்றியும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எப்படி படிப்படியாக அழிந்தது என்றும் தெரியாமல் தங்கள் வசதி வாய்ப்புக்காக தமிழீழ மக்கள் விடுதலைக் கலகத்தை பயன்படுத்தும் பலர் எங்கள் தியாகத்தை கொச்சைப்படுத்துவது கேட்கமுடியாது உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்
1989 க்கு முன்பு இயக்கத்திற்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர்கள்
பல இயக்கத் தோழர்கள் செய்ய வேண்டிய வேலையை உடுவில்விலைசேர்ந்த ஒரு விடுதலை இயக்கங்களை பற்றி அறிய விரும்பும் ஒரு தம்பி மறைந்த பல தோழர்களை அறிய செய்கிறார் நாங்கள் செய்யக்கூடியது அவர் எழுத்தில் உள்ள தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டி எமக்குத் தெரிந்த உண்மைகளை அவருக்கு கூறவேண்டும் எல்லாருக்கும் எல்லாம் தெரியும் என்று நினைக்கக் கூடாது அவரின் முயற்சிக்கு நாம் பக்கபலமாக இருக்க வேண்டும் உண்மைகளை உரத்துச் சொல்ல வேண்டும்
அவர் எழுதியது போல் சென்னையில் நானும் மாதவன் அண்ணாவும் ஒரு ரகசிய முகாமில் இல்லை திரு திருவல்லிக்கேணியில் ஒரு ரகசிய இடம் வீடு அதில்தான் இயக்கத்தின் ரகசிய அலுவலகம் இயங்கியது அதில் தான் நாம் தங்கியிருந்தோம் சிறையிலிருந்த வந்த நிரஞ்சன் எம்மோடு தான் தங்கி சமைத்து சாப்பிட்டோம் நிரஞ்சன் வெளியில் சுற்றும்போது உளவுத்துறையினர் புடைசூழ போவார்கள் அவர்களை ஏமாற்றிவிட்டு தான் நிரஞ்சன் அப்போது ரகசியமாக இயங்கிய சிறுசிறு முகாம்களுக்கு போய் பயிற்சி கொடுப்பார் அவர்களோடு மாறன் கந்தசாமி செந்தில் போன்றவர்களும் போய் வருவார்கள்
இக்காலகட்டங்களில் உமா மகேஸ்வரன் ஒரு பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் சுத்துவது நாங்களும் பார்த்திருக்கிறோம் உளவுத்துறையினர் நிரஞ்சன் இடம் கேட்டதும் தெரியும் ஒரு நாள் எமது ரகசிய அலுவலகத்துக்கு உமாமகேஸ்வரன் வந்தபோது நான் கந்தசாமி மாறன் மாதவன் அண்ணா எல்லோரும் இருந்தோம்
நாங்கள் உமாமஹேஸ்வரர் இடம் அன்பாய் தான் பேசிப் பழகுவோம் நிரஞ்சன் திடீரென நீங்கள் ஒரு பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் திரிகிறீர்கள் நான் பார்த்தேன் உளவுத்துறையினர் சொல்லி சிரிக்கிறார்கள் என கடுமையாகக் கூறினார் உமா மகேஸ்வரனுக்கு முகம் சிவந்து வாயை மூடு என சொல்லி அடிக்கப் போனார் நாங்கள் பயந்து விட்டோம் இதன் பின்பு பலமுறை வாய்த்தர்க்கம் பட்ட பட்டுள்ளார்கள் திரும்ப ஜெயிலில் இருக்கும் போதும் சண்டை கடுமையானது ரஞ்சன் கூறியது நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் அது தவறு இல்லை இப்படி தான் புலிகள் இருக்கும்போது உங்களுக்கும் ஊர்மிளா அக்காவுக்கும் தொடர்பு என கூறி குற்றச்சாட்டு வைத்தார்கள் அதே தவறை செய்யாதீர்கள் எனக் கூறினார்
இந்த ஒரு விடயம்தான் உமா மகேஸ்வரனுக்கு நிரஞ்சன க்கும்பகையை ஏற்பட மூல காரணம் நிரஞ்சனின் திறமை ஏற்பட்ட பதவி போட்டியால் இதை ஊதிப் பெரிதாக்கி விட்டவர்கள் கண்ணன் எனப்படும் சோதி ஸ்வரன் மாரன் கந்தசாமி இதுதான் உண்மை ஏனெனில் இராணுவப் பொறுப்பாளராக நிரஞ்சன் இருக்க வேண்டும் பதவிக்காக வே நிரஞ்சனி ஒதுக்கித் தள்ளினார்கள் வேண்டும் இந்த விடயங்களை நான் நேரடி சாட்சி ஆனால் சில அறிவாளிகள் தங்களுக்கு எல்லாம் தெரிந்த மாதிரி காட்டிக்கொள்கிறார்கள் 1982 கடைசியிலிருந்து 1989 கடைசிவரை நடந்த செயல்களும் உயர்மட்ட நிர்வாகத்தில் இருந்தபடியால் எனக்கு தெரியும் நான் பொய் சொல்ல வேண்டிய தேவை எனக்கு ஏற்படவில்லை
மற்றும் இதை kumaran உமைகுமாரன் கொலைக்கு சந்ததியாரே காரணம் உமா மகேஸ்வரன் இங்கு ஜெயிலில் இருக்கும் போது சந்ததியாரே அனுமதி கொடுத்தார் இது சம்பந்தமாக நாங்கள் மகேஸ்வரனை சந்திக்க ஜெயிலுக்கும் போகும்போது சந்ததியாருக்கும் அவருக்கும் கடுமையான வாக்குவாதங்கள் நடந்தன இன்னும் பல விஷயங்கள் உள்ளன அனேகம் பேருக்கு பல உண்மைகள் தெரியும் மறைக்கிறார்கள் இல்லை யார்கெட்டுப்போனால் எங்களுக்கு என்ன என்று இருக்கிறார்கள் வெளியில் வாங்கல் உண்மைகளே அலசி ஆராய்வோம்
நன்றி வெற்றி செல்வன்
No comments:
Post a Comment