1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டவர்களுக்கும், அதுபோல் யுத்த காலத்தில் கொல்லப்பட்ட போராளிகளுக்கும் வருடா வருடம் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
சாதாரண பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதே ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அரசியல் கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களை பிரபலியப்படுத்த இந்த அஞ்சலி கூட்டங்களை செய்கிறார்கள் நடத்துகிறார்கள்.
இவர்கள் செய்ய வேண்டிய அஞ்சலி இதுவா? கொலை செய்யப்பட்டவர்கள் போரில் மடிந்தவர்கள் எல்லோரும் தமிழ் மக்கள் சுதந்திரமாக தனித்தமிழ்ஈழ நாட்டில் வாழ வேண்டும் என்பதற்காகவே தங்களின் உயிரை தொலைந்தார்கள். 2009க்கு பின்பு காட்சிகள் மாறின. காலங்கள் மாறின.
2009 க்கு பிறகு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சிகள் எல்லோரும் பணத்தை சேர்ப்பதற்காகவும், சொத்துக்கள் சேர்ப்பதற்காகவும், வெளிநாடுகளில் வியாபாரம் செய்வதற்காகவும், அரசியல் பதவிக்காகவும் சிங்கள அரசோடு கூடிக் குழவி சந்தோசமாக இருக்கிறார்கள்.
இவர்கள் இறந்தவர்களின் தியாகத்தால் தான் தாங்கள் இப்பொழுது இப்பதவிகளை பெற்றிருக்கிறோம் என்று நினைத்தார்களா? தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு தமிழர் உரிமைகளை தாங்கள் தான் மீட்டு எடுக்க போகிறோம் என்று அறிக்கையில் விட்டுக் கொண்டு வருவார்கள்.
ஒரு மருத்துவர் அர்ஜுனா பதவியேற்று 14 நாளில் மருத்துவத் துறையில் குறிப்பாக வடபகுதியில் மருத்துவமனைகளில் நடக்கும் பல்லாண்டு மருத்துவ ஊழல்களை வெளிக்கொண்டுவர முடியுமானால்
பல ஆண்டுகாலம் பதவியில் இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களால் பாராளுமன்ற உறுப்பினர்களால் மந்திரிகளால் ஏன் தமிழ் மக்களுக்கு ஊழல்கள் அற்ற நல்ல நிர்வாகங்களை வழங்க முயற்சி எடுக்கவில்லை. தமிழ் ஈழம் தான் கிடைக்காது என்ற போது உயிருடன் இன்று இருக்கும் தமிழ் மக்களுக்காவது ஊழல் இல்லாத நல்ல நிர்வாகத்தை கொடுப்பதற்கு ஏன் நீங்கள் முயற்சி செய்யக் கூடாது. பாராளுமன்ற உறுப்பினர்களால் மந்திரிகளால் கட்சித் தலைவர் தட்டி கேட்டு பகிரங்கப்படுத்தக்கூடிய எல்லா அரசு துறைகளிலும் உள்ள ஊழல்களை பகிரங்கப்படுத்தி தமிழ் மக்களுக்கு நல்ல நிர்வாகத்தை கொடுத்தால் மட்டுமே, வெலிக்கடை சிறையில் கொலை செய்யப்பட்டவர்களுக்கும், விடுதலைப் போராட்டத்தில் பலியானவர்களுக்கும் இவர்கள் செய்யக்கூடிய உண்மையான அஞ்சலியாகும்.
இதுவரை இவர்கள் தமிழ்மக்களின் வளர்ச்சிக்காக என்ன செய்திருக்கிறார்கள். இலங்கை அமைச்சர் மதிப்புக்குரிய டக்லஸ் தேவானந்தா தன்னால் முடிந்த வரையில் தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக நல்ல செய்திகளை அறியக்கூடியதாக இருக்கு. ஆனாலும் தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு பணத்துக்கும் பதவிகளுக்கும் அலையும் தமிழ் தலைவர்கள் வெட்கப்படும்படியாக அரசுத்துறைகளில் தமிழ் பகுதிகளில் இருக்கும் சகலவித ஊழல்களையும் ஒழித்து, மறைந்த போராளிகளுக்கு நீங்கள் அமைச்சர் செய்யக்கூடிய நன்றி கடனாக, உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
தயவுசெய்து பொதுமக்கள், இறந்தவர்களுக்கும் மறைந்த போராளிகளுக்கும் பொய்யாக அஞ்சலி செலுத்தும் தமிழ் தலைவர்களைப் பிடித்துக் கேளுங்கள். நீங்கள் என்ன தமிழ் மக்களுக்கு நன்மை செய்தீர்கள் என்று.
இனிமே சரி உண்மையான நல்ல அஞ்சலியை செலுத்துங்கள்.
No comments:
Post a Comment