விடுதலைப் போராட்டம் தொடங்கிய ஆரம்ப காலங்களில் மக்களை ஊழல் செய்யவிடாமல் ஆயுதம் தூக்கிய இயக்கங்களே ஆயுத முனையில் விடுதலை என்ற பெயரில் எல்லா ஊழல்கள் போன்ற எல்லா நாச வேலைகளையும் மக்களுக்கு செய்தார்கள்.
2009 க்கு பின் முன்பு தமிழ் மக்களுக்கு உரிமை பெற்றுக் கொடுக்க புறப்பட்ட மிஞ்சி இருந்த தமிழ் இயக்கங்களின் தலைவர்கள் இலங்கையின் மந்திரிகள் ஆனார்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள், பதவிப் பெற முடியாதவர்கள் கட்சித் தலைவர்கள் ஆனார்கள். அவர்கள் இன்றும் தமிழ் தேசியம் தமிழ் மண்ணுக்காக போராடுகிறோம் என்று தான் கூறி வருகிறார்கள்.
2009 முதல் இன்று வரை அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் தமிழ் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு சேவை செய்யும் அரசாங்க துறைகளில் நடக்கும் மிக பாரதூரமான ஊழல்கள் குற்றங்களை தமது பதவிகளைக் கொண்டு தடுக்கவோ அம்பலப்படுத்தவோ இல்லை, ஏன் அவர்கள் அதை செய்யவில்லை. அந்த ஊழல் பணம் இவர்களுக்கும் பங்கு போகிறதா?
மருத்துவத்துறையில் ஒரு மருத்துவர் அர்ச்சனா 14 நாளில் ஊழலுக்காக ஒரு போராட்டத்தை நடத்த முடியும் என்றால், பல வருடங்களாக அமைச்சராக இருப்பவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்க துறைகளில் நடக்கும் ஊழல்கள் தெரியாதா. மருத்துவர் அர்ச்சனா ஊழல் பற்றி போராட தொடங்கியதும், ஊழல் பற்றி வாய்மூடி மௌனியாக இருந்த மக்கள் முதல் முறையாக வழியில் வந்து போராடத் தொடங்கினார்கள்.
. .. மக்கள் போராடத் தொடங்கியதும் அரசாங்கமும் மந்திரியும் ஓடோடி வருகிறார்கள். ஊழலை ஒழிப்பதற்காக அல்லது ஊழலை மறைப்பதற்காகவா. வரும் செய்திகளை பார்க்கும்போது எல்லா அரசாங்கத் துறைகளிலும் மிகப்பெரும் ஊழல்கள் நடப்பதாகவே தெரிகிறது. மருத்துவ துறையில் அர்ச்சனா செய்தது போல், மற்ற துறைகளிலும் யாரும் நல்லவர்கள் வல்லவர்கள் பொது வழியில் தெரியக்கூடியதாக போராட்டங்களை தொடங்கினால் தான் அரசாங்கமும் அமைச்சரும் வருவார்களா. அவர்கள் வந்தாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வர மாட்டார்கள். அவர்களுக்கு பதவி வேண்டும் தங்களுக்கு மட்டும் அரசாங்கத்தின் உதவி வேண்டும் என்று தமிழ் மக்களை ஏமாற்றி திரிகிறார்கள்.
.... தமிழ் அமைச்சரும் அரசாங்க அதிபரும், வட மாகாண ஆளுநரும் தங்கள் பதவியையும் செல்வாக்கையும் பயன்படுத்தி எல்லா அரசுத் துறைகளிலும் உள்ள முறைகேடுகளை களைந்து மக்களுக்கான சேவைகளை செய்து தாங்களே உண்மையான மக்கள் சேவகர்கள் என்று நற்பெயர் எடுக்க வேண்டும்.
தமிழ் அமைச்சரும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சி வேறுபாடு இன்றி அழைத்து சிறு சிறு குழுக்களாக போட்டு எல்லா அரசு துறைகளிலும் ஆய்வு செய்து, பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்டு குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
மருத்துவர் அர்ஜுனா போல் மற்ற துறைகளிலும் யாரும் போராடினால் தான் மற்ற நிகழும் என்றால் தமிழ் மக்களுக்கு அமைச்சரும் வேண்டாம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாம். ஆளுநர் அரசாங்க அதிபர்களும் வேண்டாம்
இனியாவது உண்மையான மக்கள் பிரதிநிதிகளாக செயல்பட முடிவு செய்யுங்கள்
No comments:
Post a Comment