இப்பொழுது முகநூல் முழுவதும் மொட்டை கடுதாசி போல், ஒரு பதிவு போடப்பட்டு பலரும் ரசிக்கிறார்கள். பலவித கருத்துக்களை கூறுகிறார்கள். அந்த மருத்துவரின் பெயரை ஏன் போடவில்லை. அப்படி போட்டு இருந்தால் அவரை அடையாளம் கண்டு இருக்கலாம். இல்லாமல் அனைத்து மருத்துவர்களையும் சந்தேகிக்கத்தக்க வகையில் இப்படியான பதிவுகள் போடுவது வேண்டுமென்றே மருத்துவர்களின் மன உளைச்சலை அதிகரித்து யாழ்ப்பாண மக்களுக்கு கிடைக்கும் வைத்திய வசதிகளை குறைப்பதற்காகவே என்று நம்பப்படும்.
இப்பொழுது நடக்கும் செய்திகளை பார்த்தால் யாருக்குடா நாட்டில் அனைத்து வைத்தியர்களும் மிக மோசமானவர்கள் போல் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல் போல் உள்ளது. மருத்துவர்கள் பற்றி தவறான சீரியல் வந்தாலும் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவமனை போய் நோய்களுக்கு மருந்துகள் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
யுத்த காலத்தில் ஆயுதங்கள் கொண்டு அழிக்கப்பட்ட தமிழ் மக்களை இப்பொழுது திட்டமிடப்பட்டு மிக முக்கியத்துறையான சுகாதார சேவையில் உள்ள அதிகாரிகளே குறிவைத்து தாக்குதல் மூலம் தமிழ் நோயாளிகள் இறக்க கூடிய நிலையை யாரோ மறைமுகமாக ஏற்படுத்த பார்க்கிறார்கள் என்பது கவனத்தில் எடுக்க வேண்டும்.
முழு இலங்கை முழுக்க வைத்தியத்துறை நேர்மையாக நடப்பது போல் இப்பொழுது எல்லோரும் பேசுகிறார்கள். இலங்கை முழுக்க அனைத்து துறைகளும் ஊழலில் தான் திளைக்கின்றன. அந்த ஊழல் பணத்தில் தான் அரசியல்வாதிகள் மந்திரிகள் பாராளுமன்ற உறுப்பினர்களின் சொகுசு வாழ்க்கை நடக்கின்றது.
உண்மையான மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அரசியல்வாதிகள் மந்திரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேர்மையாக இருந்திருந்தால் ஒவ்வொரு மக்களுக்கு சேவை புரியும் துறைகளையும் அடிக்கடி ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்திருக்க வேண்டும். சாவ கச்சேரி மருத்துவமனையில் பல வருடங்களாக சேவை குறைபாடு ஊழல் இருந்திருந்தால் அதற்கு முழு பொறுப்பு மாகாண சபை அதிகாரிகள் இலங்கை அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும்தான். அவர்கள் ஒவ்வொரு துறையையும் கண்காணித்து இருந்தால் ஊழல் மருத்துவர்கள் பயந்து போய் இருப்பார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு என்ன வேலை கார் பர்மிட் எடுத்து விற்பதும் வெளிநாடுகளுக்கு உள்ளாச பயணங்களும், தங்கள் பதவியை பயன்படுத்தி வசதி வாய்ப்புகளை தங்களுக்கு மட்டும் ஏற்படுத்திக் கொள்வது மட்டும்தான்.
தமிழர் தேசியம் தமிழர் உரிமைகள் என்று பேசித் திரியும் தமிழ் மக்களே ஏமாற்றும் கும்பல்கள் ஏன் இதுவரை தமிழர்களை உறிஞ்சி குடிக்கும் தமிழ் பகுதிகளில் இருக்கும் அரச துறைகளை கண்டிக்கவில்லை ஆர்ப்பாட்டம் பண்ண வில்லை உண்ணாவிரதம் இருக்கவில்லை அவர்களுக்கு அவர்கள் செய்யும் ஊழலால் தான் பணம் கிடைக்கிறது.
ஆயுதம் தூக்கிய இயக்கங்கள் ஆரம்பித்தபோது ஆயுதம் முனையில் கொள்ளை அடிக்கும் ஊழல் ஆரம்பமாகிறது. வங்கிகளை கொள்ளை அடித்தல் மக்களுக்கு உதவியாக இருந்த வட்டிக் கடைகளை கொள்ளையடித்தல் என்பவற்றை விடுதலை என்ற பெயரில் செய்தார்கள். தமிழ் மக்களும் கண்டு கொள்ளவில்லை. காலங்கள் போவ போக தமிழ் மக்களிடம் துப்பாக்கி முனையில் பலக்காரமாக நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்தார்கள் கேட்டால் விடுதலைக்கு வேண்டும் என்றார்கள். மக்கள் பேசாம இருந்தார்கள். காரணம் துப்பாக்கிக்கு பயந்து கொண்டு, பேசாமல் இருந்தார்கள்.
அப்போது இருந்த அரசு துறைகள் பயந்து கொண்டு அமைதியாக வேலை செய்தார்கள். நான் கேள்விப்பட்ட உச்சகட்ட ஊழல் அதுவும் தமிழ் அதிகாரிகளால் யாழ்ப்பாண கச்சேரியில் செய்யப்பட்ட ஊழல். யாழ் கச்சேரியில் 2009 யுத்த காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காக திருவோணமலை கொழும்பு போன்ற இடங்களுக்கு போவதற்காக பாஸ் பெற வேண்டி ஆயிரக்கணக்கானோர் யார் கச்சேரியில் தவமிருந்து இருக்கிறார்கள். தமிழ் அதிகாரிகள் தங்களுக்கு கூடுதல் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும்தான் பாஸ் கொடுத்துள்ளார்கள். அரசாங்க அதிபர் பலமுறை கண்டித்தும் அவர்கள் அரசாங்க அதிபரின் பேச்சை கேட்கவில்லை.
போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே தமிழ் அதிகாரிகளே செய்த கொடுமைகள் மாறாது. இவர்களின் நிலை கண்டு கோபம் கண்ட சிங்கள ராணுவ அதிகாரிகள் தங்கள் பவரை காண்பித்து பணம் வாங்காமல் பல தமிழர்களுக்கு உதவி செய்துள்ளார்கள். இதெல்லாம் மறைக்கப்பட்ட மறைக்கப்பட்ட உண்மைகள்.
இன்று மருத்துவர்கள் சிலர் மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக கடுமையாக குரல் கொடுக்கிறார்கள். நல்ல விடயம். ஆனால் இவர்களுக்கு போதை மருநது
விற்கலாம் என வழிகாட்டியவர்கள் ஆயுதம் தூக்கி தமிழ் விடுதலை இயக்கங்கள் தான். அதிலும் பம்பாயில் இருந்து பெரிய கண்டெய்னர்களில் வெளிநாடுகளுக்கு விடுதலை புலிகள் போதை மருந்து கடத்த ஆரம்ப தளபதி கேபி பத்மநாபன். ஒன்றும் தெரியாது போல் வவுனியாவில் ஓய்வு எடுக்கிறார் போல. இயக்கங்கள் போதை மருந்து கடத்தியதை அதுவும் விடுதலை என்ற பெயரில் நடந்ததை யாரும் கண்டிக்கவில்லை. அந்தப் பாவம் தான் இன்று எங்கள் மக்களை வாட்டி வதைக்கிறது
இப்பொழுது புதிய தென்னிலங்கை அரசியல் தமிழ் மக்களிடையே பூத்தப்படுத்துவதற்கு முன்னோட்டம் நடக்கிறதாக செய்திகள் உண்மையாக காலம் பதில் சொல்ல வேண்டும்
No comments:
Post a Comment