யாழ்குடா நாட்டில் மருத்துவமனைகளில், நடக்கும் நிர்வாக சீர்கேட்டினை தமிழ் மருத்துவர்கள் இடையே நடப்பது மிகவும் வேதனையான விடயம். அதே நேரம் நடக்கும் உண்மைகளை வெளிக் கொண்டு வர சில மருத்துவர்கள் முயலும் போது, அவருக்கு எதிராக தமிழ் வைத்தியர்கள் ரவுடிகள் போல் செயல்படுவதும், அதற்கு சில அரசியல்வாதிகள் ஆதரவு கொடுப்பதும் வெட்கக்கேடான விடயம்.
இது சிங்கள அரசாங்கம் தமிழர் மேல் செய்யவில்லை. ஆனால் தமிழனே தமிழன் அழிந்து போக கண்டும் காணாமல் இருப்பது உண்மை. அதே நேரம் யாழ்குடா நாட்டில் மதங்களை வைத்தும் பலவித தரக்குறைவான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த செய்திகள் உண்மையோ பொய்யோ என்று தெரியாது. ஆனால் இதற்குப் பின்னால் பல தரக்குறைவான அரசியல்வாதிகள் இருப்பதாகவும் தகவல். அதுவும் முக்கியமாக யாழ் பொது நூலகத்தை 1981 இல் சிங்கள தலைவர்கள் எரிக்க உடந்தையாக இருந்த குடும்பத்தின் வாரிசாக இப்போது இருக்கும் அரசியல்வாதிகள் தமிழர்களைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் தமிழர்களை கேவலப்படுத்தி அசிங்கப்படுத்தி சொத்து சேர்ப்பதிலையே குறியாக இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன
இப்படி யாழ்குடா நாட்டில் நடக்கும் செயல்களை தடுத்து நிறுத்தி உண்மை என்னவென்று மக்களுக்கும் வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்களுக்கும் சொல்லக்கூட ஒரு சரியான தலைவர்கள் தமிழர்களிடம் இல்லை. எங்கள் தமிழ் தலைவர்கள் இதற்கு சிறிதும் முயற்சிக்காதே நிலையில் சிங்கள அரசாங்கம் இப்படியான செயல்களை கண்டும் காணாமல் இருக்கும். அவர்களுக்கு உலக அரங்கில் தமிழர்களின் தரங்கெட்ட செயல்கள் சண்டைகள் வெளியில் வருவது சந்தோஷமாகத்தான் இருக்கும்.
யாழ்குடா நாட்டில் நடக்கும் அதுவும் தமிழ் மக்களிடையே தான் நடக்கிறது அப்படியான தரங்கெட்ட செயல்கள். இதையெல்லாம் தடுக்க முடியாத பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்படும் தமிழ் தேசிய வாதிகள் என்று கூறிக்கொண்டு திரியும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழரே விற்றுப் பிழைக்கும் தமிழ அரசியல் கட்சிகள் எல்லாம் உலக நாடுகளிடம் கூறி தமிழர் பிரச்னை தீர்க்க போகிறார்களா? இதில் வேறு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவாழ்வு வேட்பாளர் என்று தமிழர்களை ஏமாற்றி பிழைக்கும் ஒரு கும்பல். வடபகுதி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களிடம் உள்ளே இப்படியான சின்ன சின்ன பிரச்சனைகளை தீர்க்க முடியாதா?
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் எல்லாம் வானம் ஏறி வைகுண்டம் போகப்போகிறார்களாம் . இவர்களா எங்களுக்கு சிங்கள தேசத்திடமிருந்து உரிமைகள் பெற்றுத் தரப் போகிறார்கள். சம்பந்தர் ஐயா போல் சாகும்வரை தமிழர்களை ஏமாற்றி விட்டு தாங்கள் வாழும் காலங்களில் பதவி பணம் சொத்துக்களுடன் வாழ மட்டுமே ஆசைப்படுவார்கள்.
இவர்களை இனியாவது தமிழ் மக்கள் அடையாளம் கண்டு புதிய நல்ல தலைவர்களை இனம் கண்டு தமிழ் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment