1981 ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி, தமிழ்ஈழம்தான் இலங்கை தமிழர்களின் முடிவு என்று தமிழ் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, 1977 ஆம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று க்கொண்டதோடு எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் கனவில் நினைக முடியாதபடி கிடைத்தவுடன் அமிர்தலிங்கம் அவரின் சக பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்களுக்கு மாவட்ட சபை போதும் என்று,கூறி, மாவட்ட சபையை ஏற்றுக் கொண்டார்கள்
மாவட்ட சபை தேர்தலில் கடைசி பிரச்சார கூட்டம் 1981 மே மாதம் இரவு யாழ் நாச்சிமார் கோயில் அடியில் நடந்தது.
அந்தக் கூட்டத்தை பார்க்க ரகசியமாக போன புளொட் செயல் அதிபர் உமா மகேஸ்வரன், மாறன், மாணிக்கந்தாசன் போன்றோர் இந்தக் கூட்டத்தை எப்படி கலைத்து விடுவது என்று தங்களுக்கு பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென மாணிக்கம் தாசன் எழுந்து போய், தான் ரகசியமாக கொண்டு வந்த துப்பாக்கியால் அங்கு காவலுக்கு இருந்த இரண்டு போலீஸ்காரர்களை சுட்டு கொலை செய்து விட்டார். இதன் பின்பு கலவரம் ஏற்பட்டு யாழ் நகர் பொது நூலகம் எரிக்க ப்பட்டன.
பிற்காலத்தில் எங்களுக்கு இரண்டு சந்தேகங்கள் ஏற்பட்டன. யாழ்ப்பாணத்தில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முதல் நாட்களிலேயே காமினி திசா நாயக தலைமையில் ஒரு காடையார் கூட்டம் யாழ்ப்பாணத்தில் வந்து தங்கி இருந்தது.
அதே நேரம் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்குமா போல் மாணிக்கம் தாசன் போலீஸ்காரர் சுட்டுக் கொலை செய்தாரா?1977ஆண்டு முழு இலங்கைக்கு நடந்த கலவரத்துக்கு யாழ்ப்பாணத்தில் நடந்த காணி வேளில் ராணுவத்தை இளைஞர்கள் தாக்கியதுதான். அந்த இளைஞர்களில் முக்கியமானவர் மாணிக்கம் தாசன். இரண்டு கலவரங்களிலும் மாணிக்கம் தாசன் முதன்மையானவர்.
லெபனான் போகும் வழியில் பாகிஸ்தான் இஸ்லாம்பத் நகரில் நாங்கள் தங்கியிருக்கும் போது இது பற்றிஉமா மகேஸ்வரன் இடமும், மாணிக்கம் தாசன் இடமும் கேட்டபோது, உமா எங்களிடம் இவன் பேயன் தாசன் நாங்கள் எப்படி குழப்புவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது திடீரென போய் போலீஸ்காரரை சுட்டு விட்டான் என்று கூறினார். மாணிக்கம் தாசன் அதற்கு பெரிய ஐயா முதலில் இப்படி செய்யலாமா என்று நீங்கள் தான் கூறினீர்கள். அதுதான் இலகுவான வழியாக இருந்தது கூட்டத்தை குழப்ப அதனால்தான் நான் சுட்டேன் என்று கூறினார்
No comments:
Post a Comment