நான் அண்மையில் போட்ட பதிவுகளுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழக தலைவர்களெல்லாம் வெற்றிச்செல்வன் எழுதுவதெல்லாம் பொய். அவர் சித்தார்த்தன் இடம் கோடிக்கணக்கான பணம் கேட்டார் சித்தாத்தன் மறுத்ததால் பொய்ச் செய்திகளைப் போட்டு பிளாக்மெயில் பண்ணி பணம் பெற முயற்சிக்கிறார் என சொல்லி வருகிறார்கள். அதைவிட சிலர் தொலைபேசி மூலம் பேசினார்கள் பணம் தருவதாகவும் பாராளுமன்ற தேர்தல் வருவதால் முடிந்தபின்பு நேரடியாக பேசுவதாகும் கூறினார்கள்
எனது பதிவுக்கு நேரடியாக வந்து கருத்து சொல்பவர்களை விட உள் பெட்டியில் வந்துகருத்து சொல்பவர்கள் கூடுதலாக இருக்கிறார்கள் கேட்டால் தங்கள் பாதுகாப்பு கருதி என கூறுகிறார்கள். உள்பெட்டியில் வந்த செய்திகளை சிலவற்றைக் கீழே போடுகிறேன் பல செய்திகள் மிக கேவலமாக இருப்பதால் பல செய்திகளை போடவில்லை
ஆயிரக்கணக்கான இளைஞர்களால் உருவாக்கப்பட்ட தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பல இளைஞர்கள் பொதுமக்களின் தியாகத்தால் கட்டப்பட்டது. இயக்கம் தவறான வழியில் போகிறது தலைமை சரியில்லை என்று இயக்கத்தை விட்டு வெளியேறிய பலர் இளைஞர்கள் இன்று நடுத்தர வயது கிட்டத்தட்ட கிழவர்கள் ஆக இருந்தாலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உறுப்பினராகவே தங்களை நினைத்து வாழ்கிறார்கள்.நாங்கள் யாரும் பெருமைப்படக் கூடிய விதத்தில் இன்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இல்லை 1989 ஆண்டுக்கு முன்பு தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் படிப்படியாக இயக்கத்தை அழித்த வரலாறு. அதன்பின்பு தமிழீழ மக்கள் விடுதலைக் கலகத்தை நல்ல முறையில் கொண்டு போக வேண்டுமென்று சித்தாத்தன் மாணிக்கம் தாசன் உட்பட பல தோழர்கள் விரும்பி உமா. மகேஸ்வரனுக்கு மரணதண்டனை கொடுத்த வரலாறு. ஆனால் என்ன நடந்தது எல்லோரும் இயக்கத்தை நல்ல வழியில் கொண்டு போவார் என நம்பியிருந்த சித்தாத்தன் தலைமையில் இருந்த இயக்கம் மிக மிக கேவலமாக அராஜகமாக நடந்து கொண்டதாக அறியப்படுகிறது தலைவர் பதவிக்கு வந்தபின் சித்தார்த்தனின் மனமும் மாறிவிட்டதா அவரிடம் இருந்த நல்ல பண்புகள் எல்லாம் எங்கே போயின.
1990 ஜனவரி மாதத்தின் பின்பு இலங்கையில் என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாதுஅதனால் எனக்கு வந்த செய்திகளை கீழே பதிவு செய்துள்ளேன் இது உண்மையா பொய்யா என்று தயவுசெய்து நேரடியாக வந்து கருத்தைச் சொல்லுங்கள்.வந்த செய்திகள் பொய்யாக இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொண்டு இந்த பதிவை எடுத்து விடுகிறேன்.
1. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மல்லாவியை நிரந்திர வதிவிடமாக கொண்டிருந்தவரும் முல்லைதீவு மாவட்டத்தின் ஆரம்பகால அரசியல் பொறுப்பாளராக இருந்து புளொட் இயக்கத்தை வழர்த்த தோழர் சொக்கலிங்கம் சத்தியன் 26 05 1988 அன்று கொழும்பு விடுதியில் வைத்து. ஆர் ஆர் ஆட்சி ராஜன் இருவராலும் சுடப்பட்டார்: - சாட்சிகள் நேரில் பார்த்த உறவினர்கள். விடுதிஉரிமையாளர்.
2. அமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட்டு வந்த படுகொலைகள் மற்றும் அமைப்பு விதிமுறைகளிற்கு எதிரான நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை முன்வைத்த புளொட்டின் மத்தியகுழு உறுப்பினர் உமா பிரகாஸ் 26 01 1994 அன்று கொழும்பில் வைத்து மாணிக்கம் தாசன் ஆள் சுட்பட்டார். இவரது இழப்பை தாங்கமுடியாத மனைவி உமா இரண்டே வயதான மகனுடன் தற்கொலை செய்துகொண்டார்.
3. பு ளொட்டின் அரசியல் பிரிவான dplf கட்சியின் பிரதித்தலைவர் ஆறுமுகம் செல்லையா என அழைக்கப்படும் கரவை கந்தசாமி யுடன்ஏற்பட்ட முரன்பாடுகளை அடுத்து சித்தாத்தனின் இடத்தை பாதுகாக்க கரவையை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்ற மாணிக்கம் தாசன் மற்றும் சிலரால் 31 12 1994 அன்று கொழும்பில சுட்பட்டார.;
4. முல்லைதீவு மாவட்டத்தில் உள்ள பாண்டியன்குளத்தை நிரந்தர வதிவிடகாகவும் புளொட் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட இராணுவ பொறுப்பாளராகவும் 1986 வரைக்கும் கடமையாற்றி வந்த தோழர் கோண் திருநாவல் குளத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து து}ள்பவன் மற்றும் தூள்சூரி என்பவர்களால் அவரது மனைவி மற்றும் மகளிற்கு முன்னால் கொடூரமரமாக சுட்டுக்கொல்லப்பட்டார்: காரணம் வவுனியாவில் சித்தாத்தன் கும்பல் மேற்கொண்டுவந்த அட்டூழியங்களிற்கும் அவர்களின் தேர்தல் பிச்சாரத்திற்கு எதிரான கருத்தை கொண்டிருந்தார் என்பதற்காகவே இத்தோழரை கொன்றார்கள்.
5. புளொட்டில் இருந்து வெளியேறி நீர்கொழும்பில் தங்கியிருந்த ஜெகன் வீட்டிற்கு இராணுவத்துடன் சென்ற து}ள்பவன் அவரை கைது செய்து வவுனியாவிற்கு கொண்டுவந்து காதை வெட்டி. கண்ணை தோண்டி. கழுத்தை வெட்டி மிககொடூரமாக கொலை செய்தவர் இன்று பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தூள்பவன்எனும் தகுதிப்பெயரைக் கொண்ட கந்தையா சிவநேசன்.
6. கனகராயன் குழத்தை நிரந்திர வதிவிடமாக கொண்டவரும். கனகராயன் குளத்து பளைய விதானையாரின் மகனான தம்பிராஜா திலீபன் வவுனியா பூந்தோட்ட அரசினர் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றிவந்தார். மூன்று பிள்ளைகளின் தய்தையான இவரை தூள்பவன் கும்பல் அவரது வீட்டில்வைத்து சுட்டுக்கொன்றது.
இந்த தகவல்கள் என்ன சொல்லுது
இதில் குறிப்பிட்டுள்ள பலரையும் உங்களுக்கு தெரியுமா? பழகியுள்ளீர்களா?
குடு பவான் அல்லது தூள் பவான் என்று அழைக்கப்படுபவர் யார் தெரியுமா?
கொழும்பில் ஜெயந்தி என்ற பெண்ணின் காதலனை கொன்று விட்டு ஜெயந்தியை வைத்திருக்கும் முக்கியஸ்தர் பற்றிஉங்களுக்கு தெரியுமா வெற்றிச்செல்வன் அவர் யார் என்று?
உவர் 2013 வடக்கு மாகாண சபை தேர்தலில் வென்று பின்னர் விவசாய அமைச்சர் பதவி வகித்தார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊழல் குற்றச்சாட்டில் ஐங்கரநேசனை பதவி நீக்கம் செய்து விட்டு பவானுக்கு அமைச்சர் பதவியை வழங்கினார்.
இப்போ புதிய தகவல் என்ன தெரியுமோ?
உந்த ஊத்தை பவான் அல்லது குடு பவான் அல்லது தூள் பவான் என்று அழைக்கப்படுபவரின் சகோதரன் (அண்ணா) முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு அதிபராக இருந்தவர். இம்முறை அவரை 2020 பாராளுமன்ற தேர்தலில் வன்னித் தொகுதியில் சித்தர் சீட் கொடுத்து இறக்கிறார்.
இன்று உருத்திரபுரத்தில் சித்தாத்தனிற்கு இருக்கும் 100க்கும் மேற்பட் ஏக்கர் வயல்கள். தென்னம்தோப்புகளை பராமரித்து இலயங்கை புலனாய்வு பிரிவுகளின் பாதுகாப்பில் உல்லாசமாக வாழ்கின்றான் தூள்சூரி.
சில படுகொலைகளை உள்ளிருந்து கொண்டு புலிகளின் உதவியை பெற்று செய்தார்கள். அறிந்தீர்களா?
ஆமாம். பதவி மோகத்தில் அதிகார வெறியில் தலை தெறிக்க ஆடினார்கள் புளொட் காரர்கள்.
தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டார்கள்
படுகொலைகளை செய்தார்கள்.
மக்கள் புளொட்டை சோத்து பார்சல் கேட்டு அடிக்கும் ரீம் என்றே பட்டப் பெயர் சூட்டி அழைத்தார்கள்.
மாணிக்க தாசன் சித்தரை போட்டு விட்டு மேவிக் கொண்டு மேலே வந்து பதவியை பிடிக்க வியூகம் வகுக்க…
சித்தார்த்தன் தேடித் தேடி மாணிக்க தாசனையும் அவரது விசுவாசிகளையும் களை எடுத்தார். அதாவது போட்டுத் தள்ளினார்கள்.
சில தாங்கள் செய்து விட்டு புலிகள் மீது பழியை போட்டார்கள்.
சிலதை புலிகளுக்கு தகவல்கள் வழங்கி பாதுகாப்பு ஏற்பாடுகளில் கண்டும் காணாதது போல கோட்டை விட்டு வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
வவுனியா மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரான சரவணபவானந்தன் சண்முகநாதன் எனஅழைக்கப்படும் வசந்தன் கிளைமோர் தாக்குதலினால் வசந்தனின் மகனுடன் அவரது வீட்டிற்கு அருகாமையில் வைத்து 15 07 1998 அன்று தூள்பவனின் திட்டமிடலில் கொல்லப்பட்டார். காரணம்: இவர் மாணிக்க தாசனின் மிகுந்த விசுவாசியாக இருந்தமை.
புளொட் இயக்கத்தின் நடைமுறை தலைவராக செயல்பட்டு வந்த நாகலிங்கம் மாணிக்கதாசன் புளொட்டின் அதிஉயர் பாதுகாப்பு முகாமான லக்கி முகாமிற்குள் மாடிக்கு ஏறும் வழியில் தூள்பவான் அணியினரால் மறைத்து வைக்கப்பட்ட கிளைமேரை 02 09 1999 அன்று வெடிக்கவைத்து மரண பட்டியலில் தாஸ்சனை இணைத்து கொண்டவர்கள்.
மாணிக்கதாஸ் இறக்கப்போகும் நிமிடங்களை கொழும்பில் இருந்து எண்ணிக்கொண்டிருந்த சித்தன். முன்கூட்டியே போடப்பட்ட திட்டத்தின் பிரகாரம். தாசன் இறந்ததை உறுதி செய்துகொண்டு. சந்திரிக்காவின் மெய்பாதுகாப்பு படையின் ஒரு பகுதியுடன் வவுனியாவிரைந்த சித்தன் மற்றும் சித்தனின் கூலிகள். மாணிக்கத்திற்கு நெருக்கமானவர்கள் என்ற ஓரேகாரணத்திற்காக 98 பேரை கைதுசெய்து மிககொடூரமான சித்திரவதைகளிற்கு உள்படுத்தி கொல்லப்படுகின்றார்கள் இவர்களில் சிலர் மரணத்தில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். தப்பியவர்கள் இன்றும் சாட்சிகளாக இருக்கின்றார்கள்.
No comments:
Post a Comment