இப்பொழுது அரசியல் கட்சிகள் தங்களது எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தில் ஓடி திரிகிறார்கள். எதற்கு கட்சிகளை கூட்டு சேர்ந்து பதவிகள் தங்கள் கையை விட்டு போய்விடக் கூடாது என்பதற்காக. அதைவிட அவர்கள் கூடுதலாக சொல்வது தமிழர்களின் உரிமைக்காக. அதோடு கொள்கையில் பார்த்து கொள்கை ரீதியில் கூட்டு சேர்கிறோம் என்கிறார்கள். இவர்களின் உண்மையான கொள்கை பணம் பதவி மட்டுமே.
இந்த அரசியல் கட்சிகள் முன்னாள் ஆயுத ரீதியான தற்போதைய அரசியல் கட்சிகள் உண்மையில் தமிழ் மக்களின் நன்மை கருதி தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எண்ணம் இருந்து இருந்தால் 2009 அதற்கு பின்பும் ஒற்றுமையாக இருந்து இருக்க வேண்டும். நேற்று வரை ஒரு கட்சியை பின்னொரு கட்சி தரை குறைவாக பேசியும், ஒரு தலைவரை பின்னொருவர் மோசமாக பேசியும் மக்களிடம் வாக்கு கேட்டு பிரிந்து இருந்தார்கள்
வரலாற்றை பின்னோக்கி பார்த்தால் எஸ் ஜே வி செல்வநாயகம்
காலத்தில் இருந்து மற்ற தலைவர்களும் அதன்பின் வந்த தலைவர் தான் சிங்கள அரச பூச்சாண்டியை காட்டி காட்டி தமிழ் மக்களை ஏமாற்றி வந்தார்கள். தமிழ் மக்களும் இவர்களை நம்பி வாக்குகள் போட்டு தலைவர்களாக ஏற்றுக்கொண்டார்கள். இந்த தலைவர்களும் வேறு வேறு கட்சிகளில் இருந்த தலைவர்கள் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மைகளும் அபிவிருத்திகளும் செய்தாலும் அவர்களை மக்கள் மத்தியில் துரோகி என்று கூறி கொலையும் செய்து வந்தார்கள்.
தமிழ் மக்களை காப்பாற்ற பின்பு ஆயுதம் தூக்கி இயக்கங்களும் ஒற்றுமையாக இலங்கை ராணுவத்துக்கு எதிராக போராடுவதை விட தங்களுக்குள் யார் பெரியவன்
என்ற போட்டியில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களையும் அவர்களுக்கு ஆதரவாக நின்ற பொதுமக்களையும் கொஞ்சம் கூட ஈவிரக்கம் இன்றி கொலை செய்தார்கள். தமிழ் மக்களின் படித்த பண்புள்ள தமிழ் மக்களால் போற்றப்பட்ட பல அறிஞர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இது யாரால் நடந்தது தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டிய தமிழ் விடுதலை இயக்கங்களால் தான் நடந்தது. சிங்களஅரசு செய்ய வேண்டிய வேலையை இந்த தமிழ் விடுதலை இயக்கங்களே செய்து சிங்கள அரசுக்கு சாதகமாக நடந்து கொண்டார்கள்.
விடுதலைபுலிகள் மற்ற இயக்கங்களை ஆயுத முனையில் போராட்ட களத்தில் இருந்து
அகற்றியதன் பின்னர் இதுவரை முகாம்களில் முடங்கி கிடந்த இலங்கை ராணுவம் வீறு கொண்டு எழுந்து ஆப்ரேஷன் லிப்ரேஷன் என்ற பெயரில் விடுதலைப் புலிகளை கடும் தாக்குதல் நடத்தி ஒடுக்கி வரும் நிலையில், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் சென்னைக்கும் புதுடெல்லிக்கும் மாறி மாறி ஓடித்திரிந்து இந்தியா தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அப்போது ஓபோஸ் ஊழல் புகார் காரணமாக சரிந்து வந்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் இமேஜை சரி செய்ய இந்திய அரசு இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பினார்.
காட்சிகள் மாறின இந்திய படைக்கு எதிராக இருந்த இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவுடன் விடுதலைப்புலிகள் கூட்டு சேர்ந்து நாங்கள் அண்ணன் தம்பிகள் எங்கள் பிரச்சினையை நாங்களே தீர்த்துக் கொள்வோம் என்று கூறி இந்திய படையுடனும் இந்திய படையுடன் நின்ற தமிழ் விடுதலை இயக்கங்களையும் அதாவது தமிழ் இளைஞர்களையும் தேடி தேடி கொலை செய்தார்கள். இதற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று மற்ற இயக்கங்களும் இந்திய படையுடன் சேர்ந்து விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களையும் பொது மக்களையும் கொலை செய்தார்கள் கொடுமையாக தலைகளை வெட்டி வைத்து மக்களை பயமுறுத்தினார்கள். பொது மக்களின் வீடுகளில் இந்திய படைகளுடன் சேர்ந்து போய் கொள்ளையடித்தார்கள் தமிழ் பெண்களை கற்பழித்தார்கள்.
இந்தியப் படைகள் திரும்பிய பின்பு விடுதலை புலிகள் தங்களுக்கு இதுவரை பணமும் ஆயுதங்களும் ஆதரவும் கொடுத்த இலங்கை ராணுவத்தையும் அதன் உச்சமாக இலங்கையின் ஜனாதிபதி பிரேமதாசாவையும் கொடூரமாக கொலை செய்தார்கள். இதே நேரம் இந்திய படையுடன் நின்ற மற்ற தமிழ் இயக்கங்கள் இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து கொண்டு விடுதலை புலிகளை கொலை செய்கிறோம் என்ற போர்வையில் பொது மக்களையும் பெண்களையும் பிடித்து சித்திரவதை செய்து கொலை செய்தார்கள் கொள்ளை அடித்தார்கள்.
ரெண்டு பக்கமும் இந்த தமிழ் இயக்கங்கள் தமிழ் மக்களை தாங்கள் தான் காப்பாற்ற போவதாக பிரச்சாரமும் செய்து கொண்டார்கள். சிறந்த தளபதியாக இருந்த பிரபாகரன் முப்படைகளையும் உருவாக்கி கிட்டத்தட்ட தனி ராஜ்யமே நடத்தி வந்தார். கடைசியில் 2009 மே 18 ல் எல்லாம் முடிந்து தமிழ் மக்கள் எல்லா எல்லாவற்றையும் இழந்து கிட்டத்தட்ட அடிமை வாழ்க்கை வாழ தொடங்கினார்கள். பிரபாகரன் ஒரு சிறந்த தலைவனாக இருந்திருந்தால் பொது மக்களையும் காப்பாற்றி தமிழ் மண்ணையும் காப்பாற்றி இருக்க முடியும். அவர் ஆயுத ரீதியான ஒரு தளபதியாக அதாவது மிகச் சிறந்த ஒரு தளபதியார் ஆகவே மட்டும் கடைசி வரை இருந்தால்தான் தமிழ் மக்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது. பிரபாகரன் மற்ற தமிழ் தலைவர்களை விட சிறந்த ராணுவ தளபதியாக இருந்தார் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
2009 போர் முடிந்து கூட்டம் கூட்டமாக முகாம்களிலிருந்து தமிழ் மக்களை ரகசியமாக இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கியதமிழ் விடுதலை இயக்கங்கள் சிலர் ராணுவ தளபதிகளின் உதவியுடன் லட்சக்கணக்கு கோடிக்கணக்கில் பணங்கள் வாங்கிக் கொண்டு அவர்களை வெளியில் எடுத்து விட்டும் வெளிநாட்டுக்கு அனுப்பியும் பெரும் பணம் சேர்த்தார்கள். சிலரிடம் லட்சங்களில் பணம் வாங்கிக் கொண்டு அவர்களை திரும்பவும் ராணுவத்திடம் பிடித்துக் கொடுத்த பல கதைகளும் வந்திருக்கின்றன. தமிழ் மக்களை அழித்தாவுது கோடிக்கணக்கில் பணம் சேர்த்த இயக்கங்கள் பின்பு வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு தமிழ் அரசியல்வாதிகளாக பதவி மோகத்தில் திரிய தொடங்கினார்கள்.
2009 போருக்கு பின் தமிழ் மக்கள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தார்கள் அவர்களின் நிலையை பயன்படுத்தி மாகாண சபை பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை பெற்ற தமிழ் தலைவர்கள் சிங்கள அரசின் மந்திரி பதவிகளையும் வசதி வாய்ப்புகளையும் தங்களுக்கு தேவையான பணப்பெட்டிகளையும் பெற்றுக் கொண்டு தமிழ் மக்கள் பற்றிய எந்த ஒரு கவலையையும் படாமல் இருந்தார்கள். இவர்கள் தங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பிய மக்கள் முட்டாளாகவே இருந்து வந்தார்கள். தமிழர் பகுதி அரச துறைகளில் ஊழல் லஞ்சம் தமிழ் மக்களை மதிக்காத போக்குகள் வளரத் தொடங்கினர் இதைப்பற்றி தமிழ் மந்திரி தமிழ அரசியல் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தவித கவலையும் படவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ் மக்களே பாதுகாக்க போவதாக மட்டும் கூறி கொள்வார்கள் மற்ற நேரங்களில் சிங்கள அரச தலைவர்களிடம் நெருக்கத்தை வளர்த்து பணப்பெட்டிகளை பெற்றுக் கொள்வார்கள்.
இந்த நேரம் தான் தமிழ் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த தமிழ் மக்களுக்கு முன் பின் அறிமுகம் இல்லாத ஒரு மருத்துவர் சாவகச்சேரி மருத்துவமனைக்கு பொறுப்பாக வந்தார். மருத்துவமனைகளில் நடக்கும் ஊழல்களை தட்டிக் கேட்டார் பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வந்தார் இதுவரை அரச துறைகளில் இருந்த ஊழல் மற்றும் கொடுமைகளை தட்டிக் கேக்க முடியாத நிலையில் இருந்த தமிழ் மக்கள் போராடவும் வீதிக்கு வந்து மருத்துவருக்கு மிகப்பெரிய ஆதரவை கொடுத்தார்கள். இப்பொழுதுதான் மக்களுக்கு விளங்கியது ஒரு மருத்துவரால் ஊழல்களை தட்டிக் கேட்க முடியும் என்றால் இதுவரை எங்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மந்திரியும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி வந்ததை அறிந்து மக்கள் புதிய புரட்சியை தொடங்கினார்கள்.
தமிழ் மக்களின் இந்த மன மாற்றத்தை அறிந்து கொள்ளாமல் தொடர்ந்தும் தங்களால் தமிழ் மக்களை ஏமாற்ற முடியும் என்று நினைத்த கடந்த கால ஆயுத வெள்ளை வேட்டி தலைவர்கள் தங்களுக்கு பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு தங்களுக்குள் அடிபட்டுக் கொண்டு 2024 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் முதல் முறையாக பெரிய ஒரு மாற்றத்தை கொண்டு வந்தார்கள்.
பெரிய மாற்றத்துக்கு வித்திட்ட மருத்துவர் அர்ச்சனா ராமநாதனே பாராளுமன்ற உறுப்பினராக கொண்டு வந்தார்கள். தமிழ் தலைவர்களின் துரோகங்களை பார்த்த பல தமிழ் மக்கள் சிங்கள அரசியல் கட்சிக்கு வாக்களித்தார்கள். அப்படியும் தமிழ் தலைவர்களை நம்பாத தமிழ் மக்கள் தமிழ் உணர்ச்சிக்காக பாரம்பரிய தமிழரசு கட்சிக்கு வாக்களித்தார்கள்.
இந்த நிலை தொடரும் என்று நினைக்காத தமிழ் தலைவர்கள் தொடர்ந்தும் ஒற்றுமைப்படாமல் ஒருத்தரை ஒருத்தர் அரசியல் ரீதியில் தாக்கிக்கொண்டு உள்ளூர் ஆட்சி தேர்தலை எதிர்கொண்டதில் இந்த தமிழ் கட்சிகளுக்கு பலத்த அடி விழுந்தது. உள்ளூர் ஆட்சி மன்றங்களில் எப்படியும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டும் இப்போது கட்சிகளில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி எந்த வழிகளில் ஆட்சியைப் பிடிக்கலாமென்று சிந்திக்கிறார்கள் ஒழிய, தமிழ் மக்களுக்கு நல்ல ஒரு தலைமையை வழங்கி தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கமில்லை.
தமிழ் மக்களையும் தமிழ் இளைஞர்களையும் சிங்கள அரசுடன் சேர்ந்து கொலை செய்தவர்கள் எல்லாம் இன்று பயபக்தியோடு மே 18 இனப்படுகொலை நாளுக்கு கஞ்சி குடித்தும் அதுவும் சிரட்டையில், தீபமேற்றி அஞ்சலி செலுத்தியும் மக்களுக்கு படம் எடுத்து படம் காட்டுகிறார்கள்.
தமிழ் மக்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய மருத்துவர் அர்ச்சனா ராமநாதன் நல்லோர் வழிகாட்டியாக இருக்க வேண்டும். அது என் நேரம் மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் படி அவரின் பல செயல்கள் இருக்கின்றன. இதுவும் நடிப்பு இந்த நடிப்பு கூட வெளிநாட்டு பணத்துக்காக இவர்போடும் நாடகம் என்று நினைக்கும் அளவுக்கு நிலைமைகள் வரக்கூடாது. இப்படி ஒரு நிலை வந்தால் அர்ச்சனா ராமநாதனே ஆதரிக்கும் மக்களே வெறுக்கு எதிராக திரும்ப கூடும். அர்ச்சனா ராமநாதன் சிறந்த பாராளுமன்ற வாதியாகி ஊழலுக்கு எதிராக தமிழ் மக்களின் உரிமைக்காக நல்ல முறையில் செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்
No comments:
Post a Comment