இன்றும் முன்பும் பல பதிவுகளை டெலோ இயக்கத்தை பெருமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு பல பொய்யான செய்திகளை போடுகிறார்கள். 1984 ஆம் ஆண்டு பஞ்சாபில் உள்ள பொற்கோயிலை ஆயுத தாரிகளிடமிருந்து மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக டெலோ இயக்கம் செய்து இந்திரா காந்தியின் ஆதரவை பெற்றதாக,
இதையே பல பேர் நம்பிக் கொண்டு தங்கள் பதிவுகளிலும் எழுதுகிறார்கள். ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் ஜூன் மூன்றாம் தேதிகள் இருந்து ஜூன் 6ஆம் தேதி வரை 1984 ஆம் ஆண்டு நடந்தது. அதற்கு ஒரு சீக்கிய இராணுவ தளபதி தான் தலைமை தாங்கினார். அவரின் பெயர் ஜெனரல் குல்தீப். அவருக்கு உதவியாக பீரங்கி படை தளபதி மேஜர் சுந்தர் ஜி செயல் பட்டர்.
அதோடு இந்திரா காந்தி ஸ்ரீ சபாரத்தினத்தை நேரில் அழைத்து பாராட்டியதாகவும் பல கட்டுக் கதைகள் உண்மை போல் வலம் வருகின்றன.
இந்திரா காந்தியை சந்தித்த ஒரே ஒரு போராளி தலைவர் புளொட் இயக்கத்தின் செயல் அதிபர் உமா மகேஸ்வரன் மட்டுமே. 1983 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது. கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பெரியவர் கல்யாண சுந்தரம் அவர்கள். அவர் எம்ஜிஆரை நேரில் சந்தித்து எம்ஜிஆர் மூலம் இந்திரா காந்தியின் முதன்மைச் செயலாளர் அலெக்ஸாண்டருடன் கூறி சந்திப்புக்கு நேரம் ஒதுக்கி தந்தார். அந்த காலகட்டத்தில் எம்ஜிஆருக்கு மிக நெருக்கமாக உமா மகேஸ்வரன் மட்டுமே இருந்தார்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் உமா மகேஸ்வரன் தங்குவதற்கு எம்ஜிஆர் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். உமா மகேஸ்வரன் அவருடன் கூட இலங்கை சுங்கத்துறையில் கலெக்டராக இருந்து கலவரத்தால் பாதிக்கப்பட்டு இந்தியா வந்த உமா மகேஸ்வரன் நெருங்கிய நண்பர் விக்னேஸ்வர் ராஜா அவர்களும் இந்திரா காந்தியை 15 நிமிட நேர சந்திப்பில் கலந்து கொண்டார். விக்னேஸ்வர் ராஜா பணக்கொட மகேஸ்வரம் அவர்களுக்கும் நெருங்கிய நண்பர்.
இந்திரா காந்தியை உமா சந்திக்கப் போகும்போது அவருக்கு கொடுப்பதற்காக பெரிய அழகிய பூங்கொத்தை நானும் அந்த நேரம் லண்டனில் இருந்து வந்த இயக்கத் தோழரும்ஜன்பத் கண்ணாட் ப்ளேஸ் என்ற இடத்தில்போய் வாங்கி வந்தோம்.
தயவுசெய்து பொய்யான செய்திகளை தெரிந்த மாதிரி எழுதாதீர்கள்.
No comments:
Post a Comment